பாடம் : 17
பிறருடைய பெண் குழந்தைத் தம்முடன் விளையாட ஒருவர் அனுமதிப்பதும், அவளை முத்தமிடுவதும், அவளுடன் நகைச்சுவையாகப் பேசுவதும்.
உம்மு காலித் (ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நான் என் தந்தையுடன் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்துகொண்டு சென்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(இது) நன்றாயிருக்கிறதே! (இது) நன்றாயிருக்கிறதே!’ என்று (என் சட்டை குறித்துச்) கூறினார்கள். நான் (நபி (ஸல்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையே இருந்த) நபித்துவ முத்திரையில் விளையாடத் தொடங்கினேன். உடனே, என் தந்தை என்னை அதட்டினார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(குழந்தைதானே!) அவளை (விளையாட) விடுவீராக!’ என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(இந்தச் சட்டையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு. பிறகும் (அதைக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு. மீண்டும் அதை (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு’ என்று (என்னுடைய நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தித்துக்) கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்), ‘(அந்தச் சட்டை நிறம் மாறி பழுப்பேறி மக்கள்) பேசும் அளவிற்கு உம்மு காலித்(ரலி) நெடுங்காலம் வாழ்ந்தார்கள்’ என்று கூறுகிறார்கள்.21
Book : 78
(புகாரி: 5993)بَابُ مَنْ تَرَكَ صَبِيَّةَ غَيْرِهِ حَتَّى تَلْعَبَ بِهِ، أَوْ قَبَّلَهَا أَوْ مَازَحَهَا
حَدَّثَنَا حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ خَالِدِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدِ بْنِ سَعِيدٍ، قَالَتْ
أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ أَبِي وَعَلَيَّ قَمِيصٌ أَصْفَرُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَنَهْ سَنَهْ» قَالَ عَبْدُ اللَّهِ: وَهِيَ بِالحَبَشِيَّةِ: حَسَنَةٌ،
قَالَتْ: فَذَهَبْتُ أَلْعَبُ بِخَاتَمِ النُّبُوَّةِ فَزَبَرَنِي أَبِي، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهَا» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْلِي وَأَخْلِقِي، ثُمَّ أَبْلِي وَأَخْلِقِي، ثُمَّ أَبْلِي وَأَخْلِقِي» قَالَ عَبْدُ اللَّهِ: فَبَقِيَتْ حَتَّى ذَكَرَ، يَعْنِي مِنْ بَقَائِهَا
சமீப விமர்சனங்கள்