தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-238

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 97

குளிப்பதற்கு போதுமான தண்ணீர் அளவு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை ஒரு பரக அளவு பாத்திரத்தில் நிறைவேற்றுவார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி)

இமாம் அபூதாவூத் அவர்கள் குளிப்பிடுகின்றார்கள் :

ஒரு பர்க அளவு (நீர்) கொள்ளும் ஒரே பாத்திரத்தில் நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் குளிப்போம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்று இந்த ஹதீஸில் ஜுஹ்ரி வாயிலாக மஃமர் அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் :

மாலிக் அவர்களின் (முதலிலுள்ள) ஹதீஸை போன்று இப்னு உஐனா அவர்களும் அறிவிக்கின்றார்.

மேலும் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.

பரக் என்பது 16 ராத்தல்களாகும்.

குறிப்பு: வழக்கொழிந்து விட்ட இந்த ராத்தல் முறையை வைத்து நாம் பரக் என்பதற்கு விளக்கம் காண்பது மிகவும் சிரமம் ஒரு பரக் எத்தனை சாஉக்களை கொண்டது என்பதை வைத்து அதன் அளவை நாம் அறியலாம்.

மூன்று சாஉக்கள் கொண்டது ஒரு பரக் ஆகும் என்று சுப்யான் பின் உஐனா அவர்கள் கூறுவதாக முஸ்லிமில் வரும் அறிவிப்பு தெரிகிறது.

இவ்வாறே ஒரு பெருங்கூட்டம் தெரிவிக்கின்றது என்று இமாம் நவவீ அவர்கள் தெரிவிக்கின்றார்கள். (அப்னுல் மஃபூத் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாஉ என்பது நான்கு முத்துகள் ஆகும் என புகாரியில் விளக்கவுரையில் கிர்மானி என்பவர் கூறுகின்றார். நடுத்தரமான ஒரு மனிதரின் ஒரு சிரங்கைகள் நிரம்பியிருப்பது ஒரு முத்து ஆகும் என்று காமூஸ் (அரபி அகராதி) தெரிவிக்கின்றது. (அவ்னல் மஃபூத்)

(அபூதாவூத்: 238)

97- بَابٌ فِي مِقْدَارِ الْمَاءِ الَّذِي يُجْزِئُ فِي الْغُسْلِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ – هُوَ الْفَرَقُ – مِنَ الجَنَابَةِ»

قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَى ابْنُ عُيَيْنَةَ نَحْوَ حَدِيثِ مَالكٍ قَالَ أَبُو دَاوُدَ قَالَ: مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ فِي هَذَا الْحَدِيثِ قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ فِيهِ قَدْرُ الْفَرَقِ» قَالَ أَبُو دَاوُدَ: سَمِعْت أَحْمَدَ بْنَ حَنْبَلٍ يَقُولُ: الْفَرَقُ: سِتَّةَ عَشَرَ رِطْلًا وَسَمِعْتُهُ يَقُولُ: صَاعُ ابْنِ أَبِي ذِئْبٍ خَمْسَةُ أَرْطَالٍ وَثُلُثٌ. قَالَ: فَمَنْ قَالَ: ثَمَانِيَةُ أَرْطَالٍ؟ قَالَ: لَيْسَ ذَلِكَ بِمَحْفُوظٍ قَالَ: وسَمِعْت أَحْمَد يَقُولُ: مَنْ أَعْطَى فِي صَدَقَةِ الْفِطْرِ بِرِطْلِنَا هَذَا خَمْسَةَ أَرْطَالٍ وَثُلُثًا فَقَدْ أَوْفَى قِيلَ الصَّيْحَانِيُّ ثَقِيلٌ. قَالَ: الصَّيْحَانِيُّ أَطْيَبُ قَالَ: لَا أَدْرِي


AbuDawood-Tamil-238.
AbuDawood-Shamila-238.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.