தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1398

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அல்குர்ஆனின் 10 வசனங்களை ஓதி நின்று வணங்குகிறாரோ அவர் அலட்சியவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார். யார் அல்குர்ஆனின் 100 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களில் சேர்க்கப்படுவார். யார் அல்குர்ஆனின் 1000 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் பலமடங்கு நன்மைகள் செய்தவர்களில் சேர்க்கப்படுவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

அபூதாவூத் கூறுகிறார்:

சின்ன-இப்னு ஹுஜைரா என்பவரின் பெயர் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் ஹுஜைரா என்பதாகும்.

(அபூதாவூத்: 1398)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، أَنَّ أَبَا سَوِيَّةَ، حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ ابْنَ حُجَيْرَةَ، يُخْبِرُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ قَامَ بِعَشْرِ آيَاتٍ لَمْ يُكْتَبْ مِنَ الغَافِلِينَ، وَمَنْ قَامَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنَ القَانِتِينَ، وَمَنْ قَامَ بِأَلْفِ آيَةٍ كُتِبَ مِنَ المُقَنْطِرِينَ»

قَالَ أَبُو دَاوُدَ: «ابْنُ حُجَيْرَةَ الْأَصْغَرُ عَبْدُ اللَّهِ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ حُجَيْرَةَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1398.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1192.




إسناده حسن رجاله ثقات عدا عبيد بن سوية المصري وهو صدوق حسن الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உபைத் பின் ஸவிய்யா-ஸுவைய்யா என்ற அபூ ஸவிய்யா என்பவரின் நம்பகத்தன்மை பற்றி இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    அவர்கள் தனக்கு தெரியவில்லையென்று கூறினாலும் இப்னு மஃகூல், இப்னு யூனுஸ் போன்றோர் இவரைப் பற்றி சிறந்தவர் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் ஸதூக் என்றும் கூறியுள்ளனர்.

(நூல் தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/37)

قال ابن ماكولا : كان فاضلا

تهذيب التهذيب: (3 / 37) 

  • இதில் வரும் இப்னு ஹுஜைரா என்பவர் பெரிய-இப்னு ஹுஜைரா அதாவது சின்ன இப்னு ஹுஜைராவின் தந்தையாகும். இப்னு ஹுஜைரா என்ற பெயர் தந்தை, மகன் இருவருக்கும் கூறப்படும். அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்களின் மேற்கண்ட விளக்கத்தை பார்க்கும் போது இதில் வருபவர் மகன் என்று எண்ணத்தோன்றும். ஆனால் அவ்வாறல்ல. இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்னு ஹுஜைரா அப்துர்ரஹ்மான் பின் ஹுஜைரா வைக் குறிக்கும் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : அன்னிகதுள் ளிராஃப் 3/357)
  • ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள் இந்த செய்தியை ஹஸன் என்றும், அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் சரியான செய்தி என்றும் கூறியுள்ளனர்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1398 , இப்னு குஸைமா-1144 , இப்னு ஹிப்பான்-2572 , அல்முஃஜமுல் கபீர்-143 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.