பாடம் : 103
மாத விலக்கான பெண்ணுடன் உண்ணுதல், ஒட்டி உறவாடுதல்.
யூதர்கள் தங்களுடைய இனத்தில் ஒரு பெண் மாதவிலக்காகி விட்டால், அவளை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். அவளுடன் சேர்ந்து, அவர்கள் உண்ணவும், பருகவும் மாட்டார்கள். எனவே, இதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது,
மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அது ஓர் (அசுத்தமான) உபாதை. எனவே, மாதவிடாய் காலத்தில் பெண்களை (உடல் உறவு செய்வதை விட்டும்) விலகி இருங்கள் (அல் குர்ஆன் 2 : 222) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வீடுகளில் அவர்களுடன் ஒன்று கலந்திருங்கள். உடல் உறவைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
(இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது) நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம் என்று பேசிக் கொண்டனர். அப்போது உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகிய இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! யூதர்கள் இன்னின்னவாறு பேசிக் கொள்கிறார்களே! நாம் (யூதர்களுக்கு முழுமையாக மாறுசெய்யும் விதத்தில்) ஏன் பெண்களிடம் மாதவிடாய்க்காலத்திலும் உடலுறவு கொள்ளக் கூடாது என்று அவர்கள் இருவரும் வினவியதும் நபி (ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் மாறி விட்டது. அவ்விருவர் மீதும் கடுமையாக கோபமடைந்து விட்டார்கள் என்றே நாங்கள் கருதலானோம்.
உடனே அவ்விருவரும் புறப்பட்டுச் சென்றனர். அப்போது அவர்களுக்கு எதிரிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக பால் வந்தது. அவர்கள் இருவரும் சென்ற தடத்தில் ஆளை அனுப்பி அவர்களை வரச் செய்து அவ்விருவரையும் பால் அருந்தச் செய்தனர். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அவ்விருவர் மீதும் கோபம் கொள்ளவில்லை என்று எண்ணிக் கொண்டோம்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி).
(அபூதாவூத்: 258)103- بَابٌ فِي مُؤَاكَلَةِ الْحَائِضِ وَمُجَامَعَتِهَا
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ
أَنَّ الْيَهُودَ كَانَتْ إِذَا حَاضَتْ مِنْهُمُ الْمَرْأَةُ أَخْرَجُوهَا مِنَ الْبَيْتِ، وَلَمْ يُؤَاكِلُوهَا وَلَمْ يُشَارِبُوهَا وَلَمْ يُجَامِعُوهَا فِي الْبَيْتِ، فَسُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَأَنْزَلَ اللَّهُ سُبْحَانَهُ: {وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ} [البقرة: 222] قُلْ: هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ إِلَى آخِرِ الْآيَةِ،
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «جَامِعُوهُنَّ فِي الْبُيُوتِ، وَاصْنَعُوا كُلَّ شَيْءٍ غَيْرَ النِّكَاحِ». فَقَالَتِ الْيَهُودُ: مَا يُرِيدُ هَذَا الرَّجُلُ أَنْ يَدَعَ شَيْئًا مِنْ أَمْرِنَا إِلَّا خَالَفَنَا فِيهِ، فَجَاءَ أُسَيْدُ بْنُ حُضَيْر، وَعَبَّادُ بْنُ بِشْر إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْيَهُودَ تَقُولُ كَذَا وَكَذَا أَفَلَا نَنْكِحُهُنَّ فِي الْمَحِيضِ؟ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلّى الله عليه وسلم حَتَّى ظَنَنَّا أَنْ قَدْ وَجَدَ عَلَيْهِمَا، فَخَرَجَا فَاسْتَقْبَلَتْهُمَا هَدِيَّةٌ مِنْ لَبَنٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَعَثَ فِي آثَارِهِمَا فَسَقَاهُمَا، فَظَنَنَّا أَنَّهُ لَمْ يَجِدْ عَلَيْهِمَا
Abu-Dawood-Tamil-258.
Abu-Dawood-TamilMisc-225.
Abu-Dawood-Shamila-258.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-225.
சமீப விமர்சனங்கள்