தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-351

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

யார் ஜும்ஆ நாளன்று கடமையான குளிப்பை போல் குளித்து விட்டு (முதல் நேரத்தில்) செல்கின்றாரோ அவர் ஒட்டகையை தர்மம் செய்தவர் போல் ஆவார். யார் இரண்டாம் நேரத்தில் செல்கின்றாரோ அவர் ஒரு மாட்டை தர்மம் செய்தவர் போல் ஆவார். யார் மூன்றாம் நேரத்தில் செல்கின்றாரோ அவர் ஓர் ஆட்டை தர்மம் செய்தவர் போல் ஆவார். யார் நான்காம் நேரத்தில் செல்கின்றாரோ அவர் ஒரு கோழியை தர்மம் செய்தவர் போல் ஆவார். யார் ஐந்தாம் நேரத்தில் செல்கின்றாரோ அவர் ஒரு முட்டை தர்மம் செய்தவர் போல் ஆவார். இமாம் (உரை நிகழ்த்த) வந்துவிடும் போது உரையை கேட்பதற்காக மலக்குகள் வந்து விடுகின்றனர். 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

(அபூதாவூத்: 351)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ، ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الْإِمَامُ حَضَرَتِ الْمَلَائِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ»


AbuDawood-Tamil-351.
AbuDawood-Shamila-351.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.