1) முஆத் பின் ஜபல் ——–> இப்னு அபீலைலா ——–> அம்ர் பின் முர்ரா ——–> மஸ்வூத் ——–> அபூதாவூத் ——–> முஹம்மது பின் அல் முஸன்னா
2) முஆத் பின் ஜபல் ——–> இப்னு அபீலைலா ——–> அம்ர் பின் முர்ரா ——–> மஸ்வூத் ——–> யசீத் பின் ஹாரூன் ——–> நஸீர் பின் அல் முஹாஜிர்
தொழுகை மூன்று மாற்றங்களை கொண்டிருந்தது. நோன்பும் மூன்று மாற்றங்களை கொண்டிருந்தது என்று நஸீர் தனது நீண்ட ஹதீஸை அறிவிக்கின்றார்.
முஹம்மது பின் அல்முஸன்னா மேற்கண்ட அந்த ஹதீஸிலிருந்து பைத்துல் முகத்தஸை நோக்கி நபித் தோழர்கள் தொழும் சம்பவத்தை அறிவிக்கும் போது,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து பதிமூன்று மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுதார்கள். அப்போது அல்லாஹ் (நபியே!) நாம் உம்முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீ விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மை திடமாக திருப்பி விடுகின்றோம். ஆகவே, நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தை திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள் – அல்குர்ஆன் 2 : 44 என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி நபி (ஸல்) அவர்களை கஃபாவை நோக்கி அல்லாஹுத்தஆலா திரும்பச் செய்தான்! இது (தொழுகையில் ஏற்பட்ட) மூன்றாவது மாற்றமாகும் என்று குறிப்பிட்டு தனது ஹதீஸை முடிக்கின்றார்.
நஸீர் அதான் தொடர்பாக அறிவிக்கும் போது அன்சாரிகளில் ஒருவரான அப்துல்லாஹ் பின் சைத் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, கிப்லாவை முன்னோக்கி அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹு, அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் ஹய்ய அலல் ஸலா என்று இரு தடவை, அய்ய அலல் ஃபலாஹ் என்று இரு தடவை, அல்லாஹு அக்பர்- அல்லாஹு அக்பர் என்று அதான் சொன்னார். பிறகு கொஞ்ச நேரம் கழிந்ததும் எழுந்து நின்று அதானை போன்றே வார்த்தைகளை சொல்லி கத் காமத்திஸ் ஸலாத் கத் காமத்திஸ் ஸலாத் என்று ஹய்ய அலல் ஃபலாஹ்வுக்கு பிறகு அதிகமாக சொன்னார் என்று தெரிவிக்கின்றார். அப்துல்லாஹ் பின் சைத் (ரலி)யை கனவுக்காரர் என்று நஸீர் குறிப்பிடுகின்றார்.
நோன்பு தொடர்பாக நஸீர் அறிவிக்கையில் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்களும் (முஹர்ரம்) பத்தாம் நாளும் நோன்பு நோற்பார்கள். அப்போது அல்லாஹ் உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல உங்கள் மீதும் நோன்பு விதிக்கப் பட்டுள்ளது என்பதிலிருந்து நோய், முதுமை (போன்ற காரணங்களினால்) நோன்பு நோறப்தைக் கடினமாகக் காண்பவர்கள், அதற்கு பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். அல்குர்ஆன் 2 : 183, 184 வரை உள்ள வசனங்களை இறக்கினான்.
இச் சலுகையின் காரணமாக நோன்பு நோற்க விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பியவர் நோன்பை விட்டுவிட்டு ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவளித்தனர். இதுவே அவருக்கு போதுமானதாக இருந்தது. எனவே இது (நோன்பில் ஏற்பட்ட) ஒரு மாற்றமாகும். இதை தொடர்ந்து, அல்லாஹ் ரமலான் எத்தகையது என்றால் அதில்தான் குர்ஆன் அருளப்பட்டது என்பதிலிருந்து பின்வரும் நாட்களில் நோன்பு நோற்கவும் என்பது வரை உள்ள வசனத்தை அல்லாஹ் இறக்கினான். இதனால் ஊரிலிருப்பவர் நோன்பு நோற்க வேண்டும், பயணி (பின்னால்) நோற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நோன்பு நோற்க முடியாத முதியவர், இயலாதவர் ஆகியோர் (ஓர் ஏழைக்கு) உணவு வழங்க வேண்டும் என்ற சட்டம் நிலைத்து விட்டது! சிர்மா (என்ற நபித் தோழர்) என்பவர் அன்றைய பகல் பொழுதில் உழைத்து விட்டு (வீட்டிற்கு) வந்தார் என்று தொடர்ந்து ஹதீஸை அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 507)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ أَبِي دَاوُدَ، ح وَحَدَّثَنَا نَصْرُ بْنُ الْمُهَاجِرِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنِ الْمَسْعُودِيِّ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ
أُحِيلَتِ الصَّلَاةُ ثَلَاثَةَ أَحْوَالٍ، وَأُحِيلَ الصِّيَامُ ثَلَاثَةَ أَحْوَالٍ – وَسَاقَ نَصْرٌ الْحَدِيثَ بِطُولِهِ وَاقْتَصَّ ابْنُ الْمُثَنَّى مِنْهُ قِصَّةَ صَلَاتِهِمْ نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ قَطْ – قَالَ: الْحَالُ الثَّالِثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ فَصَلَّى – يَعْنِي نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ – ثَلَاثَةَ عَشَرَ شَهْرًا، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى هَذِهِ الْآيَةَ: {قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ} [البقرة: 144] فَوَجَّهَهُ اللَّهُ تَعَالَى إِلَى الْكَعْبَةِ – وَتَمَّ حَدِيثُهُ – وَسَمَّى نَصْرٌ صَاحِبَ الرُّؤْيَا، قَالَ: فَجَاءَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ، رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، وَقَالَ فِيهِ: فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، قَالَ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، مَرَّتَيْنِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، مَرَّتَيْنِ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، ثُمَّ أَمْهَلَ هُنَيَّةً، ثُمَّ قَامَ، فَقَالَ مِثْلَهَا، إِلَّا أَنَّهُ قَالَ: زَادَ بَعْدَ مَا قَالَ: حَيَّ عَلَى الْفَلَاحِ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقِّنْهَا بِلَالًا» فَأَذَّنَ بِهَا بِلَالٌ. وَقَالَ فِي الصَّوْمِ: قَالَ: فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ ” يَصُومُ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَيَصُومُ يَوْمَ عَاشُورَاءَ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ} [البقرة: 183] إِلَى قَوْلِهِ {طَعَامُ مِسْكِينٍ} [البقرة: 184] فَمَنْ شَاءَ أَنْ يَصُومَ صَامَ، وَمَنْ شَاءَ أَنْ يُفْطِرَ، وَيُطْعِمَ كُلَّ يَوْمٍ مِسْكِينًا، أَجْزَأَهُ ذَلِكَ، وَهَذَا حَوْلٌ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ} [البقرة: 185] إِلَى {أَيَّامٍ أُخَرَ} [البقرة: 184] فَثَبَتَ الصِّيَامُ عَلَى مَنْ شَهِدَ الشَّهْرَ وَعَلَى الْمُسَافِرِ أَنْ يَقْضِيَ، وَثَبَتَ الطَّعَامُ لِلشَّيْخِ الْكَبِيرِ وَالْعَجُوزِ اللَّذَيْنِ لَا يَسْتَطِيعَانِ الصَّوْمَ “، وَجَاءَ صِرْمَةُ وَقَدْ عَمِلَ يَوْمَهُ وَسَاقَ الْحَدِيثَ
AbuDawood-Tamil-507.
AbuDawood-Shamila-507.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்