அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய வீட்டில் உட்கார்ந்து கொண்டே தொழுதார்கள். அவர்களுக்கு பின்னால் மக்கள் நின்று கொண்டு தொழுத போது அவர்களை உட்காரும்படி சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும், பின்பற்றப்படுவதற்காகத் தான் இமாம் நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் ருகூஃ செய்யும் போது நீங்களும் ருகூஃ செய்யுங்கள். அவர் (ருகூஃவிலிருந்து) எழும்போது நீங்களும் எழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.
(அபூதாவூத்: 605)حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا، قَالَتْ
صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهِ وَهُوَ جَالِسٌ فَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا، فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا فَلَمَّا انْصَرَفَ، قَالَ: «إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا»
AbuDawood-Tamil-605.
AbuDawood-Shamila-605.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்