ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பாடம்:
கடைத்தெருவுக்குள் நுழையும்போது சொல்ல வேண்டியவை.
3428. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் கடைத்தெருவுக்குள் நுழையும் போது, “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, யுஹ்யீ வ யுமீது, வ ஹுவ ஹய்யுல் லா யமூது, பி யதிஹில் கைரு, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்”
(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் ஒருவனே; அவனுக்கு இணையில்லை; அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது; அவனுக்கே புகழ் அனைத்தும்; அவன் உயிர்ப்பிக்கிறான்; அவன் மரணிக்கச் செய்கிறான்; அவன் என்றும் உயிருள்ளவன்; அவன் மரணிக்க மாட்டான்; அவன் கையிலேயே நன்மை உள்ளது; மேலும் அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் மிக்கவன்)
என்று கூறினால், அல்லாஹ் அவருக்காக பத்து லட்சம் நன்மைகளை எழுதுகிறான்; அவருடைய பத்து லட்சம் தீமைகளை அழிக்கிறான்; அவருக்காக பத்து லட்சம் (சொர்க்கத்தின்) படித்தரங்களை உயர்த்துகிறான்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.
ஸுபைர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரின் பொறுப்பாளராக இருந்த அம்ர் பின் தீனார் என்பவரும் இதை ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.
” مَنْ دَخَلَ السُّوقَ، فَقَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، بِيَدِهِ الخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ أَلْفِ حَسَنَةٍ، وَمَحَا عَنْهُ أَلْفَ أَلْفِ سَيِّئَةٍ، وَرَفَعَ لَهُ أَلْفَ أَلْفِ دَرَجَةٍ “
சமீப விமர்சனங்கள்