தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1185 & 1186

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 36 உபரித் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுவது.

நபி (ஸல்) அவர்கள் குறித்து (அவர்கள் இவ்வாறு தொழுவித்ததாக) அனஸ் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர். (குறிப்பு: காண்க முன்சென்ற ஹதீஸ்கள்-380, 1044) 

1185. & 1186. இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, நான் பனூ ஸாலிம் என்ற என் சமூகத்தினருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். என் பார்வை குறைந்துவிட்டது. மழைக் காலங்களில் எனக்கும் என் சமூகத்தினரின் பள்ளிவாசலுக்கும் இடையே தண்ணீர் ஓடுகிறது. அதைக் கடந்து அவர்களின் பள்ளிக்கு வருவது சிரமமாக உள்ளது. எனவே தாங்கள் என் இல்லத்திற்கு வந்து ஒரு இடத்தில் தொழ வேண்டும். அவ்விடத்தை (என்னுடைய) தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளவிரும்புகிறேன் என்றேன்.

‘செய்கிறேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு மறுநாள் நண்பகலில் அபூ பக்ர்(ரலி) உடன் வந்து (வீட்டின் உள்ளே வர) அனுமதி கோரினார். அனுமதித்தேன்.. வீட்டில் நுழைந்ததும் உட்காராமலேயே ‘உம்முடைய வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென விரும்புகிறீர்?’ என்று கேட்டார்கள். வீட்டில் நான் விரும்பிய ஒரு பகுதியை அவர்களுக்குக் காட்டினேன். நபி(ஸல்) அவர்கள் அவ்விடத்தில் நின்று தக்பீர் கூறினார்கள். நாங்கள் வரிசையாக நின்றோம். இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தியப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.அவர்கள் ஸலாம் கொடுத்தபோது நாங்களும் ஸலாம் கொடுத்தோம். அவர்களுக்காக விருந்து சமைத்து அவர்களை வற்புறுத்தினேன். என்னுடைய வீட்டிற்கு நபி(ஸல்) அவர்கள் வந்ததைக் கேள்விப்பட்ட மக்கள் என்னுடைய வீட்டில் குழுமினார்கள். அவர்களில் ஒருவர் ‘மாலிக் ஏன் வரவில்லை’ என்று கேட்டார். மற்றொரு மனிதர் ‘அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காத ஒரு முனாபிக் என்று கூறினார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவ்வாறு கூறாதே! அவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி லாயிலாஹ இல்லல்லாஹு என்று கூறியதை நீர் அறிய மாட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரின் நேசமும் அவரின் உரையாடலும் முனாபிக்களிடமே இருப்பதை நாங்கள் பார்க்கிறோம்’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் திருப்தியை நாடி லாயிலாஹ இல்லல்லாஹு சொல்கிறவருக்கு நரகை அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான்’ என்று குறிப்பிட்டார்கள்.
இச்செய்தியை அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கூறியபோது அதை ஆட்சேபித்தார்கள். ‘நீ கூறிய செய்தியை நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்’ என்றும் கூறினார்கள். இது எனக்குப் பெரும் கவலையளித்தது.

இந்தப் போரிலிருந்து அல்லாஹ் என்னை உயிரோடு திரும்பச் செய்தால், இத்பான்(ரலி) அவரின் பள்ளியில் உயிரோடு இருந்தால் இது பற்றி அவரிடம் கேட்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். ஊர் திரும்பி ஹஜ்ஜுக்கோ உம்ராவுக்கோ இஹ்ராம் அணிந்து மதீனாவிற்கு வந்தபோது பனூ ஸாலிம் இத்பான்(ரலி) பார்வையிழந்தவராகத் தம் சமுதாயத்திற்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். தொழுது ஸலாம் சொல்லி நான் யார் என்பதையும் கூறினேன். பிறகு இச்செய்தியைப் பற்றியும் திரும்ப விசாரித்தேன். முதலில் எனக்குக்க் கூறியவாறே இப்போதும் எனக்கு இச்செய்தியைக் கூறினார் என்று மஃமூத் இப்னு ரபீஉ கூறினார்.
Book : 19

(புகாரி: 1185 & 1186)

بَابُ صَلاَةِ النَّوَافِلِ جَمَاعَةً

ذَكَرَهُ أَنَسٌ، وَعَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ الأَنْصَارِيُّ

فَزَعَمَ مَحْمُودٌ، أَنَّهُ سَمِعَ عِتْبَانَ بْنَ مَالِكٍ الأَنْصارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ – وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – يَقُولُ

أَنَّهُ عَقَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَقَلَ مَجَّةً مَجَّهَا فِي وَجْهِهِ مِنْ بِئْرٍ كَانَتْ فِي دَارِهِمْ

كُنْتُ أُصَلِّي لِقَوْمِي بِبَنِي سَالِمٍ وَكَانَ يَحُولُ بَيْنِي وَبَيْنَهُمْ وَادٍ إِذَا جَاءَتِ الأَمْطَارُ، فَيَشُقُّ عَلَيَّ اجْتِيَازُهُ قِبَلَ مَسْجِدِهِمْ، فَجِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ لَهُ: إِنِّي أَنْكَرْتُ بَصَرِي، وَإِنَّ الوَادِيَ الَّذِي بَيْنِي وَبَيْنَ قَوْمِي يَسِيلُ إِذَا جَاءَتِ الأَمْطَارُ، فَيَشُقُّ عَلَيَّ اجْتِيَازُهُ، فَوَدِدْتُ أَنَّكَ تَأْتِي فَتُصَلِّي مِنْ بَيْتِي مَكَانًا، أَتَّخِذُهُ مُصَلًّى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَأَفْعَلُ» فَغَدَا عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بَعْدَ مَا اشْتَدَّ النَّهَارُ، فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَذِنْتُ لَهُ فَلَمْ يَجْلِسْ حَتَّى قَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ؟» فَأَشَرْتُ لَهُ إِلَى المَكَانِ الَّذِي أُحِبُّ أَنْ أُصَلِّيَ فِيهِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَبَّرَ، وَصَفَفْنَا  وَرَاءَهُ، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ وَسَلَّمْنَا حِينَ سَلَّمَ، فَحَبَسْتُهُ عَلَى خَزِيرٍ يُصْنَعُ لَهُ، فَسَمِعَ أَهْلُ الدَّارِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِي، فَثَابَ رِجَالٌ مِنْهُمْ حَتَّى كَثُرَ الرِّجَالُ فِي البَيْتِ، فَقَالَ رَجُلٌ مِنْهُمْ: مَا فَعَلَ مَالِكٌ؟ لاَ أَرَاهُ. فَقَالَ رَجُلٌ مِنْهُمْ: ذَاكَ مُنَافِقٌ لاَ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لاَ تَقُلْ ذَاكَ أَلاَ تَرَاهُ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ “، فَقَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، أَمَّا نَحْنُ، فَوَ اللَّهِ لاَ نَرَى وُدَّهُ وَلاَ حَدِيثَهُ إِلَّا إِلَى المُنَافِقِينَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ ” قَالَ مَحْمُودُ بْنُ الرَّبِيعِ: فَحَدَّثْتُهَا قَوْمًا فِيهِمْ أَبُو أَيُّوبَ صَاحِبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَتِهِ الَّتِي تُوُفِّيَ فِيهَا، وَيَزِيدُ بْنُ مُعَاوِيَةَ عَلَيْهِمْ بِأَرْضِ الرُّومِ، فَأَنْكَرَهَا عَلَيَّ أَبُو أَيُّوبَ، قَالَ: وَاللَّهِ مَا أَظُنُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَا قُلْتَ قَطُّ، فَكَبُرَ ذَلِكَ عَلَيَّ، فَجَعَلْتُ لِلَّهِ عَلَيَّ إِنْ سَلَّمَنِي حَتَّى أَقْفُلَ مِنْ غَزْوَتِي أَنْ أَسْأَلَ عَنْهَا عِتْبَانَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، إِنْ وَجَدْتُهُ حَيًّا فِي مَسْجِدِ قَوْمِهِ، فَقَفَلْتُ، فَأَهْلَلْتُ بِحَجَّةٍ أَوْ بِعُمْرَةٍ، ثُمَّ سِرْتُ حَتَّى قَدِمْتُ المَدِينَةَ، فَأَتَيْتُ بَنِي سَالِمٍ، فَإِذَا عِتْبَانُ شَيْخٌ أَعْمَى يُصَلِّي لِقَوْمِهِ، فَلَمَّا سَلَّمَ مِنَ الصَّلاَةِ سَلَّمْتُ عَلَيْهِ وَأَخْبَرْتُهُ مَنْ أَنَا، ثُمَّ سَأَلْتُهُ عَنْ ذَلِكَ الحَدِيثِ، فَحَدَّثَنِيهِ كَمَا حَدَّثَنِيهِ أَوَّلَ مَرَّةٍ

 





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.