& 1287. & 1288. இப்னு உபைதுல்லாஹ் (ரஹ்) அறிவித்தார்.
மக்காவில் உஸ்மான் (ரலி) அவர்களின் மகள் இறந்தபோது நாங்கள் (ஜனாஸாவில்) கலந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். அங்கு இப்னு உமர் (ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் வந்திருந்தனர். நான் அவர்களிருவருக்கும் நடுவில் அல்லது ஒருவருக்கருகில் அமர்ந்தபோது மற்றொருவர் வந்து என்னருகில் அமர்ந்தார்.
அப்போது அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) உடைய மகன் அம்ர் (ரலி) அவர்களிடம் ‘நீ (சப்தமிட்டு) அழுபவர்களைத் தடை செய்ய வேண்டாமா? ஏனெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித்திற்கு வேதனை கொடுக்கப்படுகிறது’ எனக் கூறினார்கள்’ என்றார்.
1287. உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறிக் கொண்டிருந்தார். நான் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்டேன். நாங்கள் பைதா எனும் இடத்தை அடைந்தோம். அங்கு சமுரா என்னும் ஒரு(வகையான காட்டு) மரத்தின் நிழலில் ஒரு வாகனக் கூட்டம் நிற்பதைக் கண்டோம். ‘நீ சென்று அவ்வாகனக் கூட்டம் யாதெனப் பார்த்துவா!’ என உமர் (ரலி) என்னை அனுப்பினார். நான் அங்கு சென்று பார்த்தபோது அங்கே ஸுஹைப் (ரலி) இருந்தார். அதை உமர் (ரலி) கூறினார். நான் ஸுஹைப் இடம் சென்று, ‘அமீருல் மூமீனின் அவர்களைச் சந்திக்கப் புறப்படு’ எனக் கூறினேன். பின்னர் சிறிது காலம் கழித்து உமர் (ரலி) அவர்களிடம் மரணக் காயமுற்றிருந்தபோது ‘சகோதரனே! நண்பனே!’ எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) (வீட்டினுள்) நுழைந்தார். அப்போது உமர் (ரலி) ‘ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்களல்லவா?’ என்றார்.
1288. உமர் (ரலி) இறந்தபோது (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி), ‘அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக மூமினை அல்லாஹ் வேதனை செய்வான்’ எனக் கூறவில்லை: மாறாக ‘குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் காஃபிருக்கு வேதனை அதிகமாக்கப்படும்’ என்றே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறி, ‘ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது’ (திருக்குர்ஆன் 6:164) என்ற குர்ஆனின் வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே’ என்றும் கூறினார்கள்.
முடித்த பொழுது ‘சிரிக்கச் செய்பவனும் அழவைப்பவனும் அவனே’ (திருக்குர்ஆன் 53:43) என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இப்னு அப்பாஸ் (ரலி) உடைய இச்சொல்லைச் செவியுற்ற அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) இதைப் பற்றி எந்த ஆட்சேபணையும் செய்யவில்லை’ என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம்: 23
(புகாரி: 1286)حَدَّثَنَا عَبْدَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ
1286. تُوُفِّيَتْ ابْنَةٌ لِعُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ بِمَكَّةَ، وَجِئْنَا لِنَشْهَدَهَا وَحَضَرَهَا ابْنُ عُمَرَ، وَابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، وَإِنِّي لَجَالِسٌ بَيْنَهُمَا – أَوْ قَالَ: جَلَسْتُ إِلَى أَحَدِهِمَا، ثُمَّ جَاءَ الآخَرُ فَجَلَسَ إِلَى جَنْبِي – فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا لِعَمْرِو بْنِ عُثْمَانَ: أَلاَ تَنْهَى عَنِ البُكَاءِ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ المَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»
1287. فَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: قَدْ كَانَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ بَعْضَ ذَلِكَ، ثُمَّ حَدَّثَ، قَالَ: صَدَرْتُ مَعَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنْ مَكَّةَ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ إِذَا هُوَ بِرَكْبٍ تَحْتَ ظِلِّ سَمُرَةٍ، فَقَالَ: اذْهَبْ، فَانْظُرْ مَنْ هَؤُلاَءِ الرَّكْبُ، قَالَ: فَنَظَرْتُ فَإِذَا صُهَيْبٌ، فَأَخْبَرْتُهُ فَقَالَ: ادْعُهُ لِي، فَرَجَعْتُ إِلَى صُهَيْبٍ فَقُلْتُ: ارْتَحِلْ فَالحَقْ أَمِيرَ المُؤْمِنِينَ، فَلَمَّا أُصِيبَ عُمَرُ دَخَلَ صُهَيْبٌ يَبْكِي يَقُولُ: وَا أَخَاهُ وَا صَاحِبَاهُ، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَا صُهَيْبُ، أَتَبْكِي عَلَيَّ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ المَيِّتَ يُعَذَّبُ بِبَعْضِ بُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»
1288. قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: فَلَمَّا مَاتَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، ذَكَرْتُ ذَلِكَ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَتْ: رَحِمَ اللَّهُ عُمَرَ، وَاللَّهِ مَا حَدَّثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَيُعَذِّبُ المُؤْمِنَ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»، وَلَكِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ لَيَزِيدُ الكَافِرَ عَذَابًا بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»، وَقَالَتْ: حَسْبُكُمُ القُرْآنُ: {وَلاَ تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى} [الأنعام: 164] قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «عِنْدَ ذَلِكَ وَاللَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَى» قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ: «وَاللَّهِ مَا قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا شَيْئًا»
Bukhari-Tamil-1286,
1287,
1288.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1286,
1287,
1288.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
1 . இப்னு அப்பாஸ் (ரலி) —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-288 , புகாரி-1286 , முஸ்லிம்-1693 , 1694 ,
2 . இப்னு உபைதுல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: முஸ்லிம்-1694 , நஸாயீ-1857 ,
3 . இப்னு உபைதுல்லாஹ் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அஹ்மத்-25079 , இப்னு மாஜா-1595 ,
4 . இப்னு உபைதுல்லாஹ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-288 , 289 , 290 , புகாரி-1286 , முஸ்லிம்-1693 , 1694 , நஸாயீ-1858 ,
5 . உர்வா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அஹ்மத்-4959 , 24302 , 24373 , 24495 , 24637 , 25194 , புகாரி-3978 , 3979 , முஸ்லிம்-1696 , 1697 , அபூதாவூத்-3129 , நஸாயீ-1855 ,
6 . உர்வா —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-4959 , புகாரி-3978 , முஸ்லிம்-1696 , அபூதாவூத்-3129 , நஸாயீ-1855 ,
7 . அம்ரா பின்த் அப்துர்ரஹ்மான் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: மாலிக்-630 , அஹ்மத்-24115 , 24758 , 26180 , புகாரி-1289 , முஸ்லிம்-1698 , திர்மிதீ-1006 , நஸாயீ-1856 ,
8 . அம்ரா பின்த் அப்துர்ரஹ்மான் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: முஸ்லிம்-1698 , நஸாயீ-1856 ,
9 . யஹ்யா பின் அப்துர்ரஹ்மான் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-4865 , திர்மிதீ-1004 ,
10 . உமர் பின் முஹம்மத் —> ஸாலிம் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-6182 , முஸ்லிம்-1695 ,
11 . ஸயீத் —> உபாதா —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-5262 ,
12 . காஸிம் பின் முஹம்மத் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-26409 ,
أَعـوذُ بِكَلِمـاتِ اللّهِ التّـامّـاتِ مِن غَضَـبِهِ وَعِـقابِهِ وَشَـرِّ عِبـادِهِ وَمِنْ هَمَـزاتِ الشَّـياطينِ وَأَنْ يَحْضـرون
‘ அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹி வஇகாபிஹி, வஷர்ரி இபாதிஹி, வமின்ஹமஜாத்திஷ் ஷையாத்தீனி, வஅன்யஹ்ளுருன் ’
பொருள் : அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் ஊசலாட்டத்தை விட்டும் , அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்!
(நூல் : அபூதாவூத் : 3893)
அஸ்ஸலாமு அலைக்கும் இதன் தரம் தேவை
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
பார்க்க: அபூதாவூத்-3893 .
Jazakallah