பாடம் : 66 புதையலின் ஸகாத் ஐந்தில் ஒரு பங்காகும்.
புதையல் என்பது பழங்காலத்தில் புதைத்து வைக்கப்பட்ட பொருளாகும். அது குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் ஐந்தில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.
சுரங்கம் புதையலில் சேராது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சுரங்கத்தில் ஏற்படும் இழப்புகளுக்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை. புதையலில் (ரிகாஸில்) ஐந்தில் ஒரு பங்கு உள்ளது எனக் கூறினார்கள்’ என இமாம் மாலிக், இப்னு இத்ரீஸ் (ரஹ்) ஆகியோர் கூறுகின்றார்கள்.
சுரங்கத்திலிருந்து வரும் ஒவ்வோரு இருநூறு தீனாரிலும் ஐந்து தீனாரை ஸகாத்தாக உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் வசூலித்தார்கள்.
அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட பூமியில் கிடைக்கும் புதையலுக்கு ஐந்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. இஸ்லாமிய ஆட்சி நடக்கும் பூமியில் கிடைக்கும் புதையலில் (தங்கத்தைப் போன்றே) ஸகாத் உள்ளது.
எதிரிகளின் பூமியில் பிறர் தவறவிட்ட பொருளைப் பெற்றுக் கொண்டால் அதைப் பிறருக்கு அறிவித்துவிடுங்கள். அது எதிரிகளின் பூமியிலிருந்து எடுக்கப்பட்டாலும் அதிலும் ஐந்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு என ஹஸன் அல்பஸரீ(ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
சுரங்கம் பழங்காலத்தில் புதைக்கப்பட்ட புதையலைப் போன்றதே எனச் சிலர் கூறுகின்றனர். புதையலைப் பிறருக்கு (சொல்லாமல்) மறைப்பதும் ஐந்தில் ஒரு பங்கு கொடுக்காமல் இருப்பதும் தவறில்லை எனச் சிலர் கூறுகின்றனர்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விலங்குகளாலோ (கால்நடைகளாலோ) கிணற்றின் மூலமாகவோ அல்லது சுரங்கத்திலோ ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் (அதன் சொந்தரக்காரனிடம்) நஷ்டஈடு கேட்கப்பட மாட்டாது. புதையலில் (ரிகாஸில்) ஐந்தில் ஒரு பங்கு (ஸகாத்தாக) வசூலிக்கப்படும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 24
بَابٌ: فِي الرِّكَازِ الخُمُسُ
وَقَالَ مَالِكٌ، وَابْنُ إِدْرِيسَ: ” الرِّكَازُ: دِفْنُ الجَاهِلِيَّةِ، فِي قَلِيلِهِ وَكَثِيرِهِ الخُمُسُ وَلَيْسَ المَعْدِنُ بِرِكَازٍ ” وَقَدْ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَعْدِنِ: «جُبَارٌ، وَفِي الرِّكَازِ الخُمُسُ» وَأَخَذَ عُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ: «مِنَ المَعَادِنِ مِنْ كُلِّ مِائَتَيْنِ خَمْسَةً» وَقَالَ الحَسَنُ: «مَا كَانَ مِنْ رِكَازٍ فِي أَرْضِ الحَرْبِ فَفِيهِ الخُمُسُ، وَمَا كَانَ مِنْ أَرْضِ السِّلْمِ فَفِيهِ الزَّكَاةُ، وَإِنْ وَجَدْتَ اللُّقَطَةَ فِي أَرْضِ العَدُوِّ فَعَرِّفْهَا، وَإِنْ كَانَتْ مِنَ العَدُوِّ فَفِيهَا الخُمُسُ» وَقَالَ بَعْضُ النَّاسِ: ” المَعْدِنُ رِكَازٌ، مِثْلُ دِفْنِ الجَاهِلِيَّةِ، لِأَنَّهُ يُقَالُ: أَرْكَزَ المَعْدِنُ إِذَا خَرَجَ مِنْهُ شَيْءٌ قِيلَ لَهُ، قَدْ يُقَالُ لِمَنْ وُهِبَ لَهُ شَيْءٌ أَوْ رَبِحَ رِبْحًا كَثِيرًا أَوْ كَثُرَ ثَمَرُهُ: أَرْكَزْتَ، ثُمَّ نَاقَضَ، وَقَالَ: لاَ بَأْسَ أَنْ يَكْتُمَهُ فَلاَ يُؤَدِّيَ الخُمُسَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، وَعَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«العَجْمَاءُ جُبَارٌ، وَالبِئْرُ جُبَارٌ، وَالمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الخُمُسُ»
சமீப விமர்சனங்கள்