தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1499

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்: 66

புதையலின் ஸகாத் ஐந்தில் ஒரு பங்காகும்.

புதையல் என்பது பழங்காலத்தில் புதைத்து வைக்கப்பட்ட பொருளாகும். அது குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் ஐந்தில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.

சுரங்கம் புதையலில் சேராது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சுரங்கத்தில் ஏற்படும் இழப்புகளுக்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை. புதையலில் (ரிகாஸில்) ஐந்தில் ஒரு பங்கு உள்ளது எனக் கூறினார்கள்’ என இமாம் மாலிக், இப்னு இத்ரீஸ் (ரஹ்) ஆகியோர் கூறுகின்றார்கள்.

சுரங்கத்திலிருந்து வரும் ஒவ்வோரு இருநூறு தீனாரிலும் ஐந்து தீனாரை ஸகாத்தாக உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் வசூலித்தார்கள்.

அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட பூமியில் கிடைக்கும் புதையலுக்கு ஐந்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. இஸ்லாமிய ஆட்சி நடக்கும் பூமியில் கிடைக்கும் புதையலில் (தங்கத்தைப் போன்றே) ஸகாத் உள்ளது.

எதிரிகளின் பூமியில் பிறர் தவறவிட்ட பொருளைப் பெற்றுக் கொண்டால் அதைப் பிறருக்கு அறிவித்துவிடுங்கள். அது எதிரிகளின் பூமியிலிருந்து எடுக்கப்பட்டாலும் அதிலும் ஐந்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

சுரங்கம் பழங்காலத்தில் புதைக்கப்பட்ட புதையலைப் போன்றதே எனச் சிலர் கூறுகின்றனர். புதையலைப் பிறருக்கு (சொல்லாமல்) மறைப்பதும் ஐந்தில் ஒரு பங்கு கொடுக்காமல் இருப்பதும் தவறில்லை எனச் சிலர் கூறுகின்றனர். 


1499. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விலங்குகளாலோ (கால்நடைகளாலோ) கிணற்றின் மூலமாகவோ அல்லது சுரங்கத்திலோ ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் (அதன் சொந்தரக்காரனிடம்) நஷ்டஈடு கேட்கப்பட மாட்டாது. புதையலில் (ரிகாஸில்) ஐந்தில் ஒரு பங்கு (ஸகாத்தாக) வசூலிக்கப்படும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 24


بَابٌ: فِي الرِّكَازِ الخُمُسُ

وَقَالَ مَالِكٌ، وَابْنُ إِدْرِيسَ: ” الرِّكَازُ: دِفْنُ الجَاهِلِيَّةِ، فِي قَلِيلِهِ وَكَثِيرِهِ الخُمُسُ وَلَيْسَ المَعْدِنُ بِرِكَازٍ ” وَقَدْ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَعْدِنِ: «جُبَارٌ، وَفِي الرِّكَازِ الخُمُسُ» وَأَخَذَ عُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ: «مِنَ المَعَادِنِ مِنْ كُلِّ مِائَتَيْنِ خَمْسَةً» وَقَالَ الحَسَنُ: «مَا كَانَ مِنْ رِكَازٍ فِي أَرْضِ الحَرْبِ فَفِيهِ الخُمُسُ، وَمَا كَانَ مِنْ أَرْضِ السِّلْمِ فَفِيهِ الزَّكَاةُ، وَإِنْ وَجَدْتَ اللُّقَطَةَ فِي أَرْضِ العَدُوِّ فَعَرِّفْهَا، وَإِنْ كَانَتْ مِنَ العَدُوِّ فَفِيهَا الخُمُسُ» وَقَالَ بَعْضُ النَّاسِ: ” المَعْدِنُ رِكَازٌ، مِثْلُ دِفْنِ الجَاهِلِيَّةِ، لِأَنَّهُ يُقَالُ: أَرْكَزَ المَعْدِنُ إِذَا خَرَجَ مِنْهُ شَيْءٌ قِيلَ لَهُ، قَدْ يُقَالُ لِمَنْ وُهِبَ لَهُ شَيْءٌ أَوْ رَبِحَ رِبْحًا كَثِيرًا أَوْ كَثُرَ ثَمَرُهُ: أَرْكَزْتَ، ثُمَّ نَاقَضَ، وَقَالَ: لاَ بَأْسَ أَنْ يَكْتُمَهُ فَلاَ يُؤَدِّيَ الخُمُسَ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، وَعَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«العَجْمَاءُ جُبَارٌ، وَالبِئْرُ جُبَارٌ، وَالمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الخُمُسُ»


Bukhari-Tamil-1499.
Bukhari-TamilMisc-1499.
Bukhari-Shamila-1499.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-1409.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . அப்துல்லாஹ் பின் யூஸுஃப்-அல்கலாயீ

3 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்-மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் அனஸ்

4 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்

5 . ஸயீத் பின் முஸய்யிப் பின் ஹஸ்ன்//அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்-அபூஸலமா

6 .  அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) 

பார்க்க: … புகாரி-1499, 6912, முஸ்லிம்-3522,


  • அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) 

பார்க்க: … புகாரி-2355,


  • அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) 

பார்க்க: … புகாரி-6912, முஸ்லிம்-3522, 3523,


  • முஹம்மத் பின் ஸியாத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) 

பார்க்க: … புகாரி-6913, முஸ்லிம்-3523,


  • உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) 

பார்க்க: … முஸ்லிம்-3523,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-5038.

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அப்துல்லாஹ் பின் யூஸுஃப்-அல்கலாயீ

عبد الله بن يوسف التنيسي

இறப்பு: ஹிஜ்ரி 218, எகிப்து

தரம்: பலமானவர், முவத்தா ஹதீஸ்களில் மிக உறுதியானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் யூஸுஃப்

தந்தை பெயர்: யூஸுஃப்

புனைப்பெயர்: அபூ முஹம்மத்

ஊர் பெயர்: திமிஷ்க்

பயணித்த ஊர்கள்: திமிஷ்க், எகிப்து, துனீஸ்

இறப்பு: ஹிஜ்ரி 218, எகிப்து

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் யூஸுஃப் அல்கலாயீ ரஹ் அவர்கள் அபூ முஹம்மத் என்ற குன்யாவுடன் அறியப்பட்டவர். இவர் திமிஷ்க் நகரைச் சேர்ந்தவர். பின்னர் துனீஸ் மற்றும் எகிப்தில் வசித்தார்.

இவர் பலமானவர் என்பதுடன், முவத்தா ஹதீஸ்களில் மிக உறுதியானவர் என்று யஹ்யா பின் மயீன் போன்ற இமாம்களால் பாராட்டப்பட்டவர். ஹிஜ்ரி 218 ஆம் ஆண்டு எகிப்தில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸயீத் பின் அப்துல் அஸீஸ் அத்தனூக்கீ, மாலிக் இமாம், யஹ்யா பின் ஹம்ஸா பின் வக்ஃத், அல்லைஸ் பின் ஸஃத், அப்துல்லாஹ் பின் ஸல்ம் அல்அஷ்அரீ, அப்துர்ரஹ்மான் பின் அபூ ரிஜால், ஈஸா பின் யூனுஸ் பின் அபூ இஸ்ஹாக், அல்ஹைஸம் பின் ஹுமைத் அல்கஸானீ, ஸல்மது பின் அல்அய்யார், அல்வலீத் பின் முஸ்லிம் அல்குரஷீ, அப்துல்லாஹ் பின் வஹ்ப, ஸயீத் பின் பஷீர்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், முஹம்மத் பின் இஸ்ஹாக் அஸ்ஸஃகானீ, இப்ராஹீம் பின் யஃகூப், அம்ர் பின் மன்ஸூர் அன்நஸாயீ, முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹீம், முஹம்மத் பின் முஹம்மத் பின் முஸ்அப், அர்ரபீஉ பின் ஸுலைமான், யஹ்யா பின் மயீன், ஹர்ம்லது பின் யஹ்யா, அல்ஹஸன் பின் அப்துல் அஸீஸ் அல்ஜர்வா, அபூ ஹாதிம் அர்ராஸீ, யஃகூப் பின் ஸுஃப்யான்

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் யூஸுஃப், அப்துல்லாஹ் பின் யூஸுஃப் அத்தனீஸீ, அப்துல்லாஹ் பின் யூஸுஃப் அத்தன்ஸீ


ஆதாரம்: muslimscholars.info (30355) · Should verify

மாலிக் இமாம்-மாலிக் பின் அனஸ்

مالك بن أنس الأصبحي

இறப்பு: ஹி-179 (வயது 86)

தரம்: ஹதீஸ்துறையின் முக்கியமான இமாம், மிகப் பலமானவர்.


இயற்பெயர்: மாலிக்.

தந்தை பெயர்: அனஸ் பின் மாலிக்

குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்

குலம்: இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.

பிறப்பு: ஹிஜ்ரீ 92 - 95 க்குள் மதீனாவில் பிறந்தார்.

இறப்பு: ஹிஜ்ரீ 178 அல்லது 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது 86 ஆகும்.

(93 இல் பிறந்து 179 ல் மரணித்தார் என்பதின்படி இவர் வயது 86. வாகிதீ என்பவர் 90 வயதை அடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்)

கால கட்டம்: 7.


வளர்ப்பு: ஸவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.

கல்வி: பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது.

1 . நாஃபிஃ,

2 . ஹிஷாம் பின் உர்வா,

3 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

4 . அப்துல்லாஹ் பின் தீனார்,

5 . ஸைத் பின் அஸ்லம்,

6 . முஹம்மத் பின் முஸ்லிம்,

7 . அப்துல்லாஹ் பின் அபூபக்ர்,

8 . ஸயீத் பின் அபூஸயீத்

ஆகியோர் இவருடைய முக்கிய ஆசிரியர்கள்.

1 . முஹம்மத் பின் முஸ்லிம்,

2 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

3 . நாஃபிஃ பின் மாலிக்

4 . யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான்,

ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள்.

4 . இமாம் அபூஹனீஃபா, ...

5 . ஸுஃப்யான் ஸவ்ரீ,

6 . அல்லைஸ் பின் சஃத்,

7 . ஷுஅபா,

8 . அப்துல் மலிக்,

9 . மஃமர் பின் ராஷித்,

10 . இப்னுல் முபாரக்,

11 . வகீஃ பின் ஜர்ராஹ்

12 . இமாம் ஷாஃபிஈ

ஆகியோர் இவருடைய முக்கிய மாணவர்கள்.

புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முஅத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள்.

1 . ரிஸாலத்துன் ஃபில் கத்ர்,

2 . ரிசாலத்துன் ஃபின்னஜ்ம்,

3 . ரிசாலத்துன் ஃபில் அக்ளியா,

4 . ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான்,

5 . ரிசாலத்துன் இலல் லைஸ்,

6 . ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர்,

7 . கிதாபுஸ் ஸிர்,

8 . ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.

ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்

محمد بن مسلم بن عبيد الله بن عبد الله بن شهاب بن عبد الله بن الحارث بن زهرة

இறப்பு: ஹிஜ்ரி 124, மதீனா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: முஹம்மத் பின் முஸ்லிம் பின் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் ஷிஹாப் பின் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் ஸுஹ்ரா

தந்தை பெயர்: முஸ்லிம் பின் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்

வம்சம்: குரைஷீ, பனூ ஸுஹ்ரா

புனைப்பெயர்: அபூ பக்ர்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம்

பிறப்பு: ஹிஜ்ரி 51, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 124, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸுஹ்ரீ இமாம் ஹிஜ்ரி 51 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார். இவர் ஹிஜ்ரி 124 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார். இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர்.

மதீனா மற்றும் ஷாம் ஆகிய இடங்களில் வாழ்ந்தார். இவர் ஹதீஸ் கலையில் மிகப் பலமானவர் ஆவார். இவர் ஏராளமான ஹதீஸ்களைத் தொகுத்தவர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): இப்னு உமர், அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸுலைமான் பின் யஸார், உர்வா பின் அஸ்ஸுபைர், அல்கமா பின் வக்காஸ், அலீ பின் அல்ஹுஸைன் பின் அலீ, அல்காஸிம் பின் முஹம்மத், அபூ ஸலமா பின் அப்துர்ரஹ்மான், உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா, அதா பின் அபீ ரபாஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அதா பின் அபீ ரபாஹ், உமர் பின் அப்துல்அஸீஸ், அம்ர் பின் தீனார், யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, அய்யூப் அஸ்ஸக்திஃயானீ, அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, இப்னு ஜுரைஜ், அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத், மாலிக் இமாம், மஃமர் பின் ராஷித், ஸுஃப்யான் பின் உயைனா, அல்லைஸ் பின் ஸஃத்

வேறு பெயர்கள்: இப்னு ஷிஹாப், அஸ்ஸுஹ்ரீ, முஹம்மத் பின் முஸ்லிம்


ஆதாரம்: muslimscholars.info (11013) · Should verify

ஸயீத் பின் முஸய்யிப் பின் ஹஸ்ன்//அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்-அபூஸலமா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அபூஹுரைரா-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.