தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2403

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 கடன் கொடுத்தவரிடம், நாளை வாருங்கள், நாளை வாருங்கள் என்று தவணை சொல்லித் தாமதப்படுத்துவதும், அதை இழுத்தடிப்பதாகக் கருதாமல் இருப்பதும்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: கடன்காரர்கள், தங்களிடம் என் தந்தை வாங்கிய கடன் தொடர்பான தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக (என்னிடம் கெடுபிடியாக நடந்து) கடுமை காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தோட்டத்தின் பேரீச்சங் கனிகளை (தங்கள் கடனுக்குப் பகரமாக)ப் பெற்றுக் கொள்ளச் சம்மதிக்கும் படி அவர்களிடம் (எனக்காகக்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர்.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள், அவர்களிடம் என் தோட்டத்தை (அவர்களே கனிகள் பறித்துக் கொள்ளும்படி) கொடுக்கவுமில்லை; தாமே கனிகளைப் பறித்து அவர்களுக்குத் தரவுமில்லை. மாறாக, நாளை உங்களிடம் வருகிறேன் என்று (எங்களிடம்) கூறி விட்டு மறுநாள் காலை எங்களிடம் வந்தார்கள். அப்போது என் தோட்டத்துக் கனிகளில் பரக்கத் (எனும் அருள் வளத்)திற்காக துஆ செய்தார்கள். ஆகவே, (பிறகு) நான் அவற்றைப் பறித்துக் கடன்காரர்களுக்குத் தரவேண்டிய கடனைத் தீர்த்தேன்.

பாடம் : 16 திவாலாகி விட்டவனுடைய பொருளை விற்றுக் கடன்காரர்களிடையே அதைப் பங்கிட்டு விடுவது; அல்லது ஓர் ஏழையின் பொருளை விற்று (அந்த ஏழை) தனக்காகச் செலவு செய்து கொள்வதற்காக அவரிடமே அதைத் தந்து விடுவது (அனுமதிக்கப்பட்டதே).

 ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர், தான் இறந்த பிறகு தன்னுடைய ஓர் அடிமை விடுதலையாகிக் கொள்ளட்டும் என்று கூறியிருந்தார். நபி(ஸல்) அவர்கள் (அந்த அடிமையைக் காட்டி), ‘இவரை யார் என்னிடத்திலிருந்து வாங்கிக் கொள்வது?’ என்று கேட்டார்கள். நுஐம் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவ்வடிமையை வாங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமைக்கான விலையை வாங்கி அந்த அடிமையின் எஜமானிடம் கொடுத்துவிட்டார்கள்.                                                                                                                                              Book : 43

(புகாரி: 2403)

بَابُ مَنْ أَخَّرَ الغَرِيمَ إِلَى الغَدِ أَوْ نَحْوِهِ، وَلَمْ يَرَ ذَلِكَ مَطْلًا

وَقَالَ جَابِرٌ: اشْتَدَّ الغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ فِي دَيْنِ أَبِي، فَسَأَلَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقْبَلُوا ثَمَرَ حَائِطِي، فَأَبَوْا، فَلَمْ يُعْطِهِمُ الحَائِطَ وَلَمْ يَكْسِرْهُ لَهُمْ، وَقَالَ: «سَأَغْدُو عَلَيْكَ غَدًا»، فَغَدَا عَلَيْنَا حِينَ أَصْبَحَ، فَدَعَا فِي ثَمَرِهَا بِالْبَرَكَةِ، فَقَضَيْتُهُمْ

بَابُ مَنْ بَاعَ مَالَ المُفْلِسِ – أَوِ المُعْدِمِ – فَقَسَمَهُ بَيْنَ الغُرَمَاءِ – أَوْ أَعْطَاهُ – حَتَّى يُنْفِقَ عَلَى نَفْسِهِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حُسَيْنٌ المُعَلِّمُ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

أَعْتَقَ رَجُلٌ غُلاَمًا لَهُ عَنْ دُبُرٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَشْتَرِيهِ مِنِّي؟»، فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ، فَأَخَذَ ثَمَنَهُ، فَدَفَعَهُ إِلَيْهِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.