பாடம் : 155 இணைவைப்பவர் தூங்கிக் கொண்டி ருக்கும் போது அவரைக் கொல்வது.
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அன்சாரிகளில் ஒரு குழுவினரை (யூதர்களின் தலைவனான) அபூ ராஃபிஉவிடம் அவனைக் கொல்வதற்காக அனுப்பினார்கள். அவர்களில் ஒருவர் சென்று அவர்களின் கோட்டைக்குள் நுழைந்தார்.
அவர் கூறுகிறார்: நான் அவர்களின் வாகனப் பிராணிகளைக் கட்டி வைக்கும் (தொழுவம் போன்ற) இடத்தில் நுழைந்தேன். பிறகு அவர்கள், தங்கள் கழுதையைக் காணாமல் அதைத் தேடிக் கொண்டு புறப்பட்டார்கள். நான் அதைத் தேடுபவனைப் போல் (பாசாங்கு) காட்டிக் கொண்டு புறப்பட்டேன். அவர்கள் கழுதையைக் கண்டு பிடித்துவிட்டார்கள். (பிறகு திரும்பி) கோட்டைக்குள் நுழைந்தார்கள். நானும் நுழைந்தேன். கோட்டைத் கதவை இரவில் மூடிவிட்டார்கள். (அதன்) சாவிகளை (கோட்டைச் சுவரிலிருந்த) ஒரு மாடத்தில் வைத்தார்கள்.
அவர்கள் தூங்கியவுடன் நான் அந்தச் சாவிகளை எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்து விட்டேன். பிறகு அபூ ராஃபிஉவிடம் சென்று, ‘அபூ ராஃபிஉவே!’ என்று அழைத்தேன். அவன் எனக்கு பதிலளித்தான். குரல் வந்த திசையை நோக்கிச் சென்று அவனைத் தாக்கினேன். அவன் கூச்சலிட்டான். உடனே, நான் அங்கிருந்து வெளியேறி விட்டேன். பிறகு, (அவனைக்) காப்பாற்ற வந்தவனைப் போல் மீண்டும் அவனிடம் திரும்பிச் சென்று, ‘அபூ ராஃபிஉவே!’ என்று என் குரலை மாற்றிக் கொண்டு அவனை அழைத்தேன். அவன், ‘உனக்கென்ன நேர்ந்தது? உன் தாய்க்குக் கேடுண்டாகட்டும்’ என்று சொன்னான்.
நான், ‘உனக்கு என்ன ஆயிற்று?’ என்று கேட்டேன். அவன், ‘என்னிடம் யார் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எவனோ என்னைத் தாக்கிவிட்டான்’ என்று கூறினான். உடனே, நான் அவனுடைய வயிற்றில் என் வாளை வைத்து அழுத்தினேன். அது (அவனுடைய வயிற்றுக்குள் சென்று) அவனுடைய எலும்பில் இடித்தது. பிறகு, நான் (எப்படி வெளியேறுவது என்ற) திகைப்புடன் வெளியே வந்தேன். அவர்களின் ஏணி ஒன்றின் வழியாக இறங்குவதற்காக வந்தேன். அப்போது கீழே விழுந்து என் கால் சுளுக்கிக் கொண்டது. நான் என் தோழர்களிடம் சென்று, ‘(அவனுடைய மரணத்தையறிந்து அவனுடைய வீட்டார்) ஒப்பாரி வைத்து ஓலமிடும் சத்தத்தைக் கேட்காதவரை நான் இங்கிருந்து போக மாட்டேன்’ என்று கூறினேன்.
ஹிஜாஸ் மாநிலத்தவரின் (பெரும்) வியாபாரியான அபூ ராஃபிஉ (உடைய மரணத்து)க்காக அவனுடைய வீட்டார் எழுப்பிய ஒப்பாரி ஓலங்களைச் கேட்கும் வரை அந்த இடத்தைவிட்டு நான் செல்லவில்லை. பிறகு, நான் என் உள்ளத்தில் உறுத்தும் வேதனை எதுவுமின்றி எழுந்தேன். இறுதியில், நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தோம்.
Book : 56
بَابُ قَتْلِ المُشْرِكِ النَّائِمِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
«بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَهْطًا مِنَ الأَنْصَارِ إِلَى أَبِي رَافِعٍ لِيَقْتُلُوهُ»، فَانْطَلَقَ رَجُلٌ مِنْهُمْ، فَدَخَلَ حِصْنَهُمْ، قَالَ: فَدَخَلْتُ فِي مَرْبِطِ دَوَابَّ لَهُمْ، قَالَ: وَأَغْلَقُوا بَابَ الحِصْنِ، ثُمَّ إِنَّهُمْ فَقَدُوا حِمَارًا لَهُمْ، فَخَرَجُوا يَطْلُبُونَهُ، فَخَرَجْتُ فِيمَنْ خَرَجَ أُرِيهِمْ أَنَّنِي أَطْلُبُهُ مَعَهُمْ، فَوَجَدُوا الحِمَارَ، فَدَخَلُوا وَدَخَلْتُ وَأَغْلَقُوا بَابَ الحِصْنِ لَيْلًا، فَوَضَعُوا المَفَاتِيحَ فِي كَوَّةٍ حَيْثُ أَرَاهَا، فَلَمَّا نَامُوا أَخَذْتُ المَفَاتِيحَ، فَفَتَحْتُ بَابَ الحِصْنِ، ثُمَّ دَخَلْتُ عَلَيْهِ فَقُلْتُ: يَا أَبَا رَافِعٍ، فَأَجَابَنِي، فَتَعَمَّدْتُ الصَّوْتَ فَضَرَبْتُهُ، فَصَاحَ، فَخَرَجْتُ، ثُمَّ جِئْتُ، ثُمَّ رَجَعْتُ كَأَنِّي مُغِيثٌ، فَقُلْتُ: يَا أَبَا رَافِعٍ وَغَيَّرْتُ صَوْتِي، فَقَالَ: مَا لَكَ لِأُمِّكَ الوَيْلُ، قُلْتُ: مَا شَأْنُكَ؟، قَالَ: لاَ أَدْرِي مَنْ دَخَلَ عَلَيَّ، فَضَرَبَنِي، قَالَ: فَوَضَعْتُ سَيْفِي فِي بَطْنِهِ، ثُمَّ تَحَامَلْتُ عَلَيْهِ حَتَّى قَرَعَ العَظْمَ، ثُمَّ خَرَجْتُ وَأَنَا دَهِشٌ، فَأَتَيْتُ سُلَّمًا لَهُمْ لِأَنْزِلَ مِنْهُ، فَوَقَعْتُ فَوُثِئَتْ رِجْلِي، فَخَرَجْتُ إِلَى أَصْحَابِي، فَقُلْتُ: مَا أَنَا بِبَارِحٍ حَتَّى أَسْمَعَ النَّاعِيَةَ، فَمَا بَرِحْتُ حَتَّى سَمِعْتُ نَعَايَا أَبِي رَافِعٍ تَاجِرِ أَهْلِ الحِجَازِ، قَالَ: فَقُمْتُ وَمَا بِي قَلَبَةٌ حَتَّى أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْنَاهُ
சமீப விமர்சனங்கள்