பாடம் : 6
அல்லாஹ் கூறுகிறான்: மேலும், ஆத் சமுதாயத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர், என் சமுதாயத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை (மட்டுமே) வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை என்று கூறினார். (11 : 50)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
ஆத் சமூகத்தாரின் சகோதரர் (ஹூது நபியுடைய) செய்தியை இவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்: அப்போது அவர் அஹ்காஃப் எனும் பகுதியில் தன் சமூகத்தாருக்கு, நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அடிபணியாதீர்கள். உங்கள் விஷயத்தில் மிக பயங்கரமான ஒரு நாளின் வேதனைக்கு நான் அஞ்சுகிறேன் என்று எச்சரிக்கை செய்திருந்தார்-எச்சரிக்கை செய்பவர்கள் அவருக்கு முன்பும் வாழ்ந்திருக்கிறார்கள். அவருக்குப் பிறகும் வந்து கொண்டிருந்தார்கள்-
அப்போது அவர்கள், எங்களை எங்கள் கடவுளை விட்டு திசை திருப்பவா நீர் வந்திருக்கின்றீர்? சரி-நீர் உண்மையாளர் எனில், எங்களை எந்த வேதனையைக் கூறி அச்சுறுத்திக் கொண்டி ருக்கின்றீரோ அந்த வேதனையைக் கொண்டு வாரும் என்று கூறினார்கள். அவர், இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எந்தத் தூதோடு அனுப்பப்பட்டிருக்கின்றேனோ அதனை மட்டுமே உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். ஆனால், (அறியாமையில்) மூழ்கியிருக்கும் சமுதாயமாக நான் உங்களைக் காண்கின்றேன் என்று சொன்னார்.
பின்னர் அந்த வேதனை தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்ட போது, இது, நமக்கு மழையைப் பொழிவிக்கக் கூடிய மேகமாகும் என்று கூறலாயினர். இல்லை. மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது தான் இது, இது புயல் காற்று. இதில் துன்புறுத்தும் வேதனை வந்து கொண்டிருக்கின்றது. தன் இறைவனின் கட்டளையால் ஒவ்வொன்றையும் இது அழித்து விடும். இறுதியில் (அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில்,) அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அங்கு தென்படவில்லை. இவ்வாறே குற்றம் புரியும் மக்களுக்கு நாம் தண்டனை கொடுக்கின்றோம். (46:21-25)
இதைக்குறித்து அதாஉ(ரஹ்) அவர்ளும் சுலைமான் (ரஹ்) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஆயிஷா (ரலி)அவர்கள் வழியாக அறிவிக்கிறார்கள்.
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
ஆத் சமுதாயத்தினர் மிகப் பெரிய கடும் சூறாவளிக் காற்றினால் அழிக்கப்பட்டனர். அல்லாஹ் அந்தக் காற்றினை அவர்கள் மீது ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான்.
(நபியே! நீங்கள் அங்கு இருந்திருந்தால்) இற்றுப் போன ஈச்ச மரத்தண்டுகளைப் போன்று அவர்கள் அங்கு முகங்குப்புற வீழ்ந்து கிடந்ததைப் பார்த்திருப்பீர்கள். இப்போது அவர்களில் எவரேனும் எஞ்சியிருப்பதாக உங்களுக்குத் தெரியவருகிறதா என்ன? (69:6-8)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்
நான் (அகழ்ப்போரின்போது) கீழைக் காற்றினால் (‘ஸபா’) வெற்றியளிக்கப்பட்டேன். ‘ஆத்’ சமுதாயத்தார் மேலைக் காற்றினால் (‘தபூர்’) அழிக்கப்பட்டனர். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 60
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ “} [الأعراف: 65]
وَقَوْلِهِ: {إِذْ أَنْذَرَ قَوْمَهُ بِالأَحْقَافِ} [الأحقاف: 21]- إِلَى قَوْلِهِ – {كَذَلِكَ نَجْزِي القَوْمَ المُجْرِمِينَ} [يونس: 13] فِيهِ عَنْ عَطَاءٍ، وَسُلَيْمَانَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
بَابُ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ: {وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ} [الحاقة: 6]: شَدِيدَةٍ، {عَاتِيَةٍ} [الحاقة: 6] قَالَ ابْنُ عُيَيْنَةَ: عَتَتْ عَلَى الخُزَّانِ {سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا} [الحاقة: 7] «مُتَتَابِعَةً» {فَتَرَى القَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ} [الحاقة: 7] «أُصُولُهَا» {فَهَلْ تَرَى لَهُمْ مِنْ بَاقِيَةٍ} [الحاقة: 8] «بَقِيَّةٍ»
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«نُصِرْتُ بِالصَّبَا، وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ»
சமீப விமர்சனங்கள்