தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3471

A- A+


ஹதீஸின் தரம்: குர்ஆனுக்கு முரணான பலவீனமான செய்தி

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, ‘‘(இஸ்ரவேலர்களில்) ஒரு மனிதர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்றுகொண்டிருக்கையில் அதில் ஏறி சவாரி செய்தார். பிறகு அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, ‘‘நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தை) உழுவதற்காகத்தான்” என்று கூறியது எனச் சொன்னார்கள்.

மக்கள், ‘‘ஸுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?” என்று (வியந்துபோய்க்) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருக்கவில்லை.

தொடர்ந்து, நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு மனிதர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக்கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள்) புகுந்து ஆட்டை(த் தாக்கிக் கவ்வி)க்கொண்டு சென்றுவிட்டது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றிவிட்டார். அப்போது அந்த ஓநாய் அவரைப் பார்த்து, ஏய்! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றிவிட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே’ என்று கூறியது” எனச் சொன்னார்கள்.

அப்போதும் மக்கள், ‘‘ஸுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) ஓநாய் பேசுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நானும் அபூபக்ரும், உமரும் இதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 60

(புகாரி: 3471)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلاَةَ الصُّبْحِ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: ” بَيْنَا رَجُلٌ يَسُوقُ بَقَرَةً إِذْ رَكِبَهَا فَضَرَبَهَا، فَقَالَتْ: إِنَّا لَمْ نُخْلَقْ لِهَذَا، إِنَّمَا خُلِقْنَا لِلْحَرْثِ ” فَقَالَ النَّاسُ: سُبْحَانَ اللَّهِ بَقَرَةٌ تَكَلَّمُ، فَقَالَ: ” فَإِنِّي أُومِنُ بِهَذَا، أَنَا وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، – وَمَا هُمَا ثَمَّ – وَبَيْنَمَا رَجُلٌ فِي غَنَمِهِ إِذْ عَدَا الذِّئْبُ، فَذَهَبَ مِنْهَا بِشَاةٍ، فَطَلَبَ حَتَّى كَأَنَّهُ اسْتَنْقَذَهَا مِنْهُ، فَقَالَ لَهُ الذِّئْبُ هَذَا: اسْتَنْقَذْتَهَا مِنِّي، فَمَنْ لَهَا يَوْمَ السَّبُعِ، يَوْمَ لاَ رَاعِيَ لَهَا غَيْرِي ” فَقَالَ النَّاسُ: سُبْحَانَ اللَّهِ ذِئْبٌ يَتَكَلَّمُ، قَالَ: «فَإِنِّي أُومِنُ بِهَذَا أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، – وَمَا هُمَا ثَمَّ -»،
وحَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مِسْعَرٍ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بِمِثْلِهِ


Bukhari-Tamil-3471.
Bukhari-TamilMisc-3471.
Bukhari-Shamila-3471.
Bukhari-Alamiah-3212.
Bukhari-JawamiulKalim-3236.




  • இந்தச் செய்தி புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    போன்ற பல நூல்களில் சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்திருந்தாலும் இதன் கருத்து சில குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுகிறது.

கால்நடைகளில் சுமப்பவற்றையும், சுமக்காதவற்றையும் (அவன் படைத்தான்). அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

(அல்குர்ஆன்: 6:142)

கால்நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரைத் தடுப்பவை (கம்பளி) உண்டு. பல பயன்களும் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடுகிறீர்கள்.

காலையில் ஓட்டிச் செல்லும்போதும், மாலையில் திரும்பும்போதும் அதில் உங்களுக்கு மதிப்பு இருக்கிறது.

பெரும் சிரமத்துடனே நீங்கள் சென்றடையும் ஊருக்கு உங்கள் சுமைகளை அவை சுமந்து செல்கின்றன. உங்கள் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுள்ளவன்.

(அல்குர்ஆன்: 16:5-7)

நீங்கள் ஏறிச் செல்வதற்காக உங்களுக்குக் கால்நடைகளை அல்லாஹ்வே உருவாக்கினான். அவற்றிலிருந்து உண்ணுகிறீர்கள்.

அவற்றில் உங்களுக்கு (வேறு) பயன்களும் உள்ளன. உங்கள் உள்ளங்களில் உள்ள தேவையை அவற்றின் மீது (ஏறிச் சென்று) அடைந்து கொள்கிறீர்கள். அவற்றின் மீதும், கப்பல்கள் மீதும் சுமக்கப்படுகிறீர்கள்.

(அல்குர்ஆன்: 40:79-80)

அவனே ஜோடிகள் அனைத்தையும் படைத்தான். கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் ஏறிப் பயணம் செய்வதையும் உங்களுக்காக ஏற்படுத்தினான்.

நீங்கள் அதன் முதுகுகளில் ஏறிச் செல்வதற்காகவும், ஏறும்போது உங்கள் இறைவனின் அருட்கொடையை நினைப்பதற்காகவும், “எங்களுக்கு இவற்றை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதற்குச் சக்தி பெற்றோராக இல்லை. நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோர்” என்று நீங்கள் கூற வேண்டுமென்பதற்காகவும் (அவற்றை வழங்கினான்).

(அல்குர்ஆன்: 43:12-14)

இந்த வசனங்களில் மாடு போன்ற சில கால்நடைகளில் பயணம் செய்யலாம் என்று அனுமதி உள்ளது. மேலும் மாட்டை உணவுக்காகவும் பயன்படுத்த அனுமதி உள்ளது அனைவருக்கும் தெரிந்த விசயம்.

ஆனால் மேற்கண்ட செய்தியில் மாடுகள் விவசாயம் செய்வதற்கு மட்டுமே என்ற கருத்து உள்ளது.

இதற்கு சில அறிஞர்கள் மாற்றுப் பொருள் கொடுத்தாலும் வெளிப்படையான கருத்து குர்ஆனுக்கு முரண்படுகிறது.

தவவல்: https://onlinepj.co.in/videos/?id=1042552123.


இந்தச் செய்தியின் இரு அறிவிப்பாளர்தொடர்களில் உள்ள அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . அலீ பின் அப்துல்லாஹ்-இப்னுல் மதீனீ

3 . ஸுஃப்யான் பின் உயைனா

4 . அபுஸ்ஸினாத்-அப்துல்லாஹ் பின் தக்வான்

5 . அல்அஃரஜ்-அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ்

6 . அபூஸலமா

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . அலீ பின் அப்துல்லாஹ்-இப்னுல் மதீனீ

3 . ஸுஃப்யான் பின் உயைனா

4 . மிஸ்அர் பின் கிதாம்

5 . ஸஃத் பின் இப்ராஹீம்

6 . அபூஸலமா

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (9/ 364)
1805- وَسُئِلَ عَنْ حَدِيثِ سَعِيدٍ، وَأَبِي سَلَمَةَ، عَنْ أبي هريرة، عن النبي صلى الله عليه وَسَلَّمَ، قَالَ: بَيْنَمَا رَجُلٌ يَسُوقُ بَقَرَةً حَمَلَ عَلَيْهَا فَالْتَفَتَتْ إِلَيْهِ، وَقَالَتْ: إِنَّهَا لَمْ تُخْلَقْ لِهَذَا.
فَقَالَ: يَرْوِيهِ الزُّهْرِيُّ وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ يُونُسُ، وَعُقَيْلٌ، وَيَحْيَى بْنُ أَبِي أُنَيْسَةَ، وَابْنُ سَمْعَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، وَأَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَرَوَاهُ شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، وَمَعْمَرٌ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، وَالنُّعْمَانُ بْنُ رَاشِدٍ، وَمُعَاوِيَةُ بْنُ يَحْيَى الصَّدَفِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ وَحْدَهُ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَالْقَوْلَانِ مَحْفُوظَانِ، عَنِ الزُّهْرِيِّ.
وَرَوَى هَذَا الْحَدِيثَ سَعْدُ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هريرة.
وَرَوَاهُ أَيْضًا عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ الْأَعْرَجُ، عَنْ أَبِي سَلَمَةَ.
وَاخْتُلِفَ عَنِ الْأَعْرَجِ؛
فَرَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ لَهِيعَةَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَرَوَاهُ أَبُو الزِّنَادِ وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ ابْنُ عُيَيْنَةَ، وَشُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَرَوَاهُ الثَّوْرِيُّ وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ الثَّوْرِيِّ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَتَابَعَهُ وَكِيعٌ.
وَخَالَفَهُمْ أَبُو عَاصِمٍ، رَوَاهُ عَنِ الثَّوْرِيِّ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هريرة.
وَاخْتُلِفَ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فَرَوَاهُ صَدَقَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَخَالَفَهُ الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، وَسَعِيدُ بْنُ دَاوُدَ الزَّنْبَرِيُّ، وَابْنُ وَهْبٍ رَوَوْهُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَهُوَ الْمَحْفُوظُ.
وَرَوَاهُ عُبَيْدُ اللَّهِ بن عمر، عن أبي الزناد، عن الأعرج مُرْسَلًا.
قَالَهُ الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ عَنْهُ.
وَخَالَفَهُ محمد بن عيسى بن القاسم بن سميع، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سلمة، عن أبي هريرة.


حدثنا النيسابوري، حدثنا محمد بن يحيى، حدثنا أبو اليمان، حدثنا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: بَيْنَمَا رَاعِي فِي غَنَمِهِ وساق … الحديث.


حدثنا المحاملي، قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ سَعِيدٍ، حدثنا وهب بن جرير، حدثنا أَبِي، سَمِعْتُ النُّعْمَانَ يُحَدِّثُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هريرة، أن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: بَيْنَمَا رَاعِي في غنمه … الحديث.


حدثنا إبراهيم بن حماد، حدثنا أحمد بن عبيد الله العنبري، حدثنا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ عُمَرَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ أَنَّ بَقَرَةً كَانَ عَلَيْهَا رَجُلٌ رَاكِبٌ فَاسْتَحَثَّهَا، فَقَالَتْ: مَا لِهَذَا خُلِقْتُ إِنَّمَا خُلِقْتُ لِلْحَرْثِ، فَقَالَ النَّاسُ: سُبْحَانَ اللَّهِ بَقَرَةٌ تَكَلَّمُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَا أَشْهَدُ عَلَى هَذَا، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَمَا ثَمَّ أَبُو بَكْرٍ، وَلَا عُمَرُ.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) 

பார்க்க: …அஹ்மத்-, புகாரி-2324, 3471, 3663, 3690, முஸ்லிம்-4759, திர்மிதீ-3677, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-,


  • ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) 

பார்க்க: புகாரி-3690, முஸ்லிம்-4759, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-,


  • ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) 

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.