தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4108

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

  இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நான் (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்களது கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. நான் அவர்களிடம், “மக்களின் (அரசியல்) விவகாரங்களில் நீங்கள் பார்ப்பது நடந்து கொண்டிருக்கிறது. எனக்கோ இந்த (ஆட்சியதிகார) விஷயத்தில் எந்த பங்கும் வழங்கப்படவில்லை. (இந்நிலையில், அவர்கள் கூட்டியுள்ள இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நான் செல்லத்தான் வேண்டுமா?”).

அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள், “(நடந்து கொண்டிருக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்குப்) போய்ச் சேர். ஏனெனில், அவர்கள் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். நீ செல்லாமல் இருப்பதால் மக்களிடையே (மேலும்) பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள். நான் செல்லும் வரை என்னை அவர்கள் விடாமல் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். (நானும் சென்றேன்.

(அங்கே ஒருமித்த கருத்து உருவாகாமல்) மக்கள் பிளவுபட்டிருந்த போது முஆவியா (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் தமது உரையில் (இப்னு உமர் (ரலி) அவர்களையும் அவருடைய தந்தை உமர் (ரலி) அவர்களையும் கருத்தில்கொண்டு,) “எவர் இந்த(ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் கருத்து சொல்ல விரும்புகிறாரோ அவர் தன் தலையை காட்டட்டும். ஏனெனில் அவரை விடவும் அவருடைய தந்தையை விடவும் நாமே ஆட்சிப் பொறுப்பிற்கு மிகவும் அருகதையானோர்” என்று கூறினார்கள்.

ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் (இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “நீங்கள் (அப்போது) முஆவியா (ரலி) அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அப்போது நான் எனது துண்டை அவிழ்த்து (உதறி போட்டு)க் கொண்டு (‘உஹுத் மற்றும் ‘கன்தக்’ போர்களில் முஆவியாவே,) உங்களுடன் உங்கள் தந்தை (அபூசுஃப்யான்) உடனும் இஸ்லாத்திற்காகப் போரிட்ட (அலீ (ரலி) போன்ற)வரே இந்த (ஆட்சியதிகார) விஷயத்திற்க்கு உங்களை விடத் தகுதி வாய்ந்தவர்’ என்று சொல்ல நினைத்தேன்.

ஆயினும், மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, இரத்தம் சிந்தச் செய்துவிடும் ஒரு வார்த்தையயை நான் கூறிவிடுவேனோ; நான் கூறிய வார்த்தைக்கு நான் நினைக்காத கருத்து கற்பிக்கப்பட்டுவிடுமோ என்றெல்லாம் அஞ்சினேன். மேலும், சொர்க்கத்தில் (பொறுமையாளர்களுக்காக) அல்லாஹ் தயாரித்துக் வைத்துள்ளவற்றை எண்ணிப் பார்த்தேன் (அதனால் அவர்களுக்கு பதில் கூறவில்லை)” என்று கூறினார்கள்.
அப்போது நான், “(நல்ல வேளை, நீங்கள் கோப உணர்ச்சிக்கு ஆளாகாமல்) பாதுகாக்கப்பட்டீர்கள்” என்று கூறினேன்.

அத்தியாயம்: 64

(புகாரி: 4108)

حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: وَأَخْبَرَنِي ابْنُ طَاوُسٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ

دَخَلْتُ عَلَى حَفْصَةَ وَنَسْوَاتُهَا تَنْطُفُ، قُلْتُ: قَدْ كَانَ مِنْ أَمْرِ النَّاسِ مَا تَرَيْنَ، فَلَمْ يُجْعَلْ لِي مِنَ الأَمْرِ شَيْءٌ، فَقَالَتْ: الحَقْ فَإِنَّهُمْ يَنْتَظِرُونَكَ، وَأَخْشَى أَنْ يَكُونَ فِي احْتِبَاسِكَ عَنْهُمْ فُرْقَةٌ، فَلَمْ تَدَعْهُ حَتَّى ذَهَبَ، فَلَمَّا تَفَرَّقَ النَّاسُ خَطَبَ مُعَاوِيَةُ قَالَ: مَنْ كَانَ يُرِيدُ أَنْ يَتَكَلَّمَ فِي هَذَا الأَمْرِ فَلْيُطْلِعْ لَنَا قَرْنَهُ، فَلَنَحْنُ أَحَقُّ بِهِ مِنْهُ وَمِنْ أَبِيهِ، قَالَ حَبِيبُ بْنُ مَسْلَمَةَ: فَهَلَّا أَجَبْتَهُ؟ قَالَ عَبْدُ اللَّهِ: فَحَلَلْتُ حُبْوَتِي، وَهَمَمْتُ أَنْ أَقُولَ: أَحَقُّ بِهَذَا الأَمْرِ مِنْكَ مَنْ قَاتَلَكَ وَأَبَاكَ عَلَى الإِسْلاَمِ، فَخَشِيتُ أَنْ أَقُولَ كَلِمَةً تُفَرِّقُ بَيْنَ الجَمْعِ، وَتَسْفِكُ الدَّمَ، وَيُحْمَلُ عَنِّي غَيْرُ ذَلِكَ، فَذَكَرْتُ مَا أَعَدَّ اللَّهُ فِي الجِنَانِ، قَالَ حَبِيبٌ: حُفِظْتَ وَعُصِمْتَ ” قَالَ مَحْمُودٌ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ وَنَوْسَاتُهَا


Bukhari-Tamil-4108.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4108.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




2 comments on Bukhari-4108

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இந்த நிகழ்வு ஹஜ்ரீ 37 இல் அலீ (ரலி),முஆவியா (ரலி) ஆகியோருக்கிடையில் நடைப்பெற்ற ஸிஃப்பீன் போருக்குப் பின் நடைப்பெற்றது என்று இப்னு ஹஜர் கூறியுள்ளார். (ஃபத்ஹுல் பாரீ-7/403)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.