முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அறிவித்தார்.
அன்சாரிகளில் முக்கியமானவர்கள் பலர் அமர்ந்திருந்த அவையொன்றில் நான் அமர்ந்தேன். அவர்களிடையே அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது நான், சுபைஆ பின்த் ஹாரிஸ்(ரலி) தொடர்பான அப்துல்லாஹ் இப்னு உத்பா(ரஹ்) அவர்களின் ஹதீஸை எடுத்துரைத்தேன். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்), ‘அப்துல்லாஹ் இப்னு உத்பாவின் தந்தையுடைய சகோதரர் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்கள்) இதை ஏற்றுக் கொண்டதில்லையே’ என்று கூறினார்.
உடனே நான் உரத்த குரலில், ‘கூஃபா நகரத்திற்கு அருகிலுள்ள (அப்துல்லாஹ் இப்னு உத்பா என்ற) மனிதரின் தவற்றை நான் வெளிப்படுத்துகிறேன் என்றால் நான் மிகக் துணிச்சலுடையவன் தான்’ என்று சொன்னேன். பிறகு நான் (அந்த அவையிலிருந்து வெளியேறிவிட்டேன். (செல்லும் வழியில்) ‘மாலிக் இப்னு ஆமிர்’ அல்லது ‘மாலிக் இப்னு அவ்ஃப்'(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். (அவரிடம்) நான், ‘தான் கர்ப்பிணியாயிருக்க, தன்னைவிட்டு (கணவன்) இறந்துவிட்ட பெண் விஷயத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் கருத்து என்னவாக இருந்தது?’ என்று கேட்டேன். அதற்கவர், ‘இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் கருத்து என்னவாக இருந்தது?’ என்று கேட்டேன். அதற்கவர், ‘இப்னு மஸ்வூத்(ரலி), ‘(கணவன் இறந்துவிட்ட கர்ப்பிணியான) அவளுக்குச் சலுகை அளிக்காமல் கடும் சிரமத்தை (மட்டும்) அளிக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். (இந்நிலையில் தான்) பெண்கள் தொடர்பான (சட்டங்கள் இடம் பெற்றுள்ள ‘அல்பகரா’ எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பிறகு (‘அத்தலாக்’ எனும்) சிறிய அத்தியாயம் இறங்கிற்று’ என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்), ‘(வழியில்) நான் அபூ அதிய்யா மாலிக் இப்னு ஆமிர் அவர்களைச் சந்தித்தேன்’ என்று (சந்தேகமின்றி ஒருவர் பெயரை மட்டும்) கூறினார்கள் என வந்துள்ளது.
Book :65
حَدَّثَنَا حِبَّانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ
جَلَسْتُ إِلَى مَجْلِسٍ فِيهِ عُظْمٌ مِنَ الأَنْصَارِ، وَفِيهِمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى، فَذَكَرْتُ حَدِيثَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ فِي شَأْنِ سُبَيْعَةَ بِنْتِ الحَارِثِ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ: وَلَكِنَّ عَمَّهُ كَانَ لاَ يَقُولُ ذَلِكَ، فَقُلْتُ: إِنِّي لَجَرِيءٌ إِنْ كَذَبْتُ عَلَى رَجُلٍ فِي جَانِبِ الكُوفَةِ، وَرَفَعَ صَوْتَهُ، قَالَ: ثُمَّ خَرَجْتُ فَلَقِيتُ مَالِكَ بْنَ عَامِرٍ، أَوْ مَالِكَ بْنَ عَوْفٍ قُلْتُ: كَيْفَ كَانَ قَوْلُ ابْنِ مَسْعُودٍ فِي المُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا وَهْيَ حَامِلٌ؟ فَقَالَ: قَالَ ابْنُ مَسْعُودٍ: ” أَتَجْعَلُونَ عَلَيْهَا التَّغْلِيظَ، وَلاَ تَجْعَلُونَ لَهَا الرُّخْصَةَ، لَنَزَلَتْ سُورَةُ النِّسَاءِ القُصْرَى بَعْدَ الطُّولَى، وَقَالَ أَيُّوبُ: عَنْ مُحَمَّدٍ، لَقِيتُ أَبَا عَطِيَّةَ مَالِكَ بْنَ عَامِرٍ
சமீப விமர்சனங்கள்