ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக நீர் உமது நாவை அசைக்காதீர்” (அல்குர்ஆன்: 75:16) எனும் இறை வசனத்தி(ற்கு விளக்கமளிக்கையி)ல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேதஅறிவிப்பு அருளப்பெறும் போது (தம்மைத் தாமே) மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கிக்கொண்டிருந்தார்கள்; தம் உதடுகளை (வேத வசனங்களை மனனமிட வேகவேகமாக) அசைத்துக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உதடுகளை அசைத்ததைப் போன்று நானும் உங்களுக்கு அசைத்துக்காட்டுகிறேன்.
(அறிவிப்பாளர்) ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், “நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் இதழ்களை அசைத்துக்காட்டியதைப் போன்று நானும் உங்களுக்கு அசைத்துக்காட்டுகிறேன்” என்றார்கள்.
அப்போதுதான் உயர்ந்தோன் அல்லாஹ், “(நபியே!) இந்த வஹீயை அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக நீர் உமது நாவை அசைக்காதீர்” (அல்குர்ஆன்: 75:16-19) எனும் வசனங்களை அருளினான்.
“அதை (உமது மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீர்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும்” (அல்குர்ஆன்: 75:17) எனும் வசனத்திற்கு “உமது நெஞ்சில் பதியச் செய்வதும் அதை நீர் ஓதும்படிசெய்வதும் எமது பொறுப்பாகும்” என்பது பொருள்.
“மேலும், நாம் இதை ஓதிவிட்டோமாயின் நீர் ஓதுவதைத் தொடர்வீராக” (அல்குர்ஆன்: 75:18) எனும் வசனத்திற்கு “(நாம் இதை அருளும்போது) மௌனமாக இருந்து செவிதாழ்த்திக்கொண்டிருப்பீராக” என்பது பொருள்.
“பின்னர், இ(தன் கருத்)தை விவரிப்ப தும் எமது பொறுப்பேயாகும்” (அல்குர்ஆன்: 75:19) எனும் வசனத்திற்கு “(உமது நாவால்) அதை (மக்களுக்கு) நீர் ஓதிக்காட்(டி விளக்கமளித்தி)டச் செய்வதும் எமது பொறுப்பாகும்” என்பது பொருள்.
மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், “அதன் பின்னர் அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வரும்போது, (அவர்கள் ஓதுவதை) செவிதாழ்த்திக் கேட்பார்கள். ஜிப்ரீல் சென்றதும் அவர் ஓதியதைப் போன்றே அ(ந்த வசனத்)தை நபி (ஸல்) அவர்களும் ஓதினார்கள்” என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம்: 1
(புகாரி: 5)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ
فِي قَوْلِهِ تَعَالَى: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} [القيامة: 16] قَالَ:كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَالِجُ مِنَ التَّنْزِيلِ شِدَّةً، وَكَانَ مِمَّا يُحَرِّكُ شَفَتَيْهِ – فَقَالَ ابْنُ عَبَّاسٍ: فَأَنَا أُحَرِّكُهُمَا لَكُمْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَرِّكُهُمَا، وَقَالَ سَعِيدٌ: أَنَا أُحَرِّكُهُمَا كَمَا رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ يُحَرِّكُهُمَا، فَحَرَّكَ شَفَتَيْهِ – فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} [القيامة: 17] قَالَ: جَمْعُهُ لَكَ فِي صَدْرِكَ وَتَقْرَأَهُ: {فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} [القيامة: 18] قَالَ: فَاسْتَمِعْ لَهُ وَأَنْصِتْ: {ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ} [القيامة: 19] ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ اسْتَمَعَ فَإِذَا انْطَلَقَ جِبْرِيلُ قَرَأَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا قَرَأَهُ
Bukhari-Tamil-5.
Bukhari-TamilMisc-5.
Bukhari-Shamila-5.
Bukhari-Alamiah-4.
Bukhari-JawamiulKalim-4.
சமீப விமர்சனங்கள்