தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5264

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 ஒருவர் தம் மனைவியிடம் உன்னை நான் பிரிந்துவிட்டேன்’ என்றோ உன்னை நான் விடுவித்துவிட்டேன்’ என்றோ அல்லது நீங்கி விட்டேன்’ என்றோ அல்லது தலாக்கின் கருத்திலமைந்த ஒரு சொல்லையோ கூறினால், அது அவரது எண்ணப்படியே அமையும்.16 வ-வும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறுகின்றான்: நல்ல முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (33:49) உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துவிடுகிறேன். (33:28) பின்னர் முறைப்படி (அவர்களை மனைவியராகத் தம்முடன்) வைத்துக் கொள்ளலாம். அல்லது நன்முறையில் அவர்களை விடுவித்துவிடலாம். (2:229) ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை அடைந்தால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள். (65:2) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவதூறு சம்பவத்தின்போது) நபி (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்துவிடுமாறு என் தாய் தந்தையர் எனக்குக் கட்டளையிடப் போவதில்லை என்பதை நபியவர்கள் அறிந்திருந்தார்கள். பாடம் : 7 ஒருவர் தம் மனைவியிடம் நீ எனக்கு ஹராம் (விலக்கப்பட்டவள்)’ என்று கூறினால்… ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இவ்வாறு ஒருவர் சொன்னால்) அவரது எண்ணப்படி முடிவு அமையும்.17 ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டால் அவள் அவருக்கு விலக்கப் பட்டவளாக ஆகிவிடுவாள் என்று அறிஞர்கள் கூறுவதுடன், அதனை ஹராமுன் பித்தலாக்’ என்றும் ஹராமுன் பில்ஃபிராக்’ என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். ஆனால், இது உணவை ஒருவர் தம் மீது ஹராமாக்கிக் கொள்வதைப் போன்றதன்று. ஏனெனில், அனுமதிக்கப்பட்ட உணவை (ஒருவர் தமக்கு விலக்கிக்கொள்வதால்) ஹராமான உணவு’ என்று சொல்லப்படாது. ஆனால், மண விலக்குச் செய்யப்பட்ட பெண்ணை விலக்கப் பட்டவள்’ என்று சொல்வதுண்டு. மூன்று (கட்டத்) தலாக் விஷயத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: பின்னர் அவன் (மூன்றாவது தவணையில்) அவளைத் தலாக் சொல்லிவிட்டால், பிறகு அவனல்லாத வேறொரு கணவனை அவள் மணக்கின்றவரை, அவனுக்கு அவள் அனுமதிக்கப்பட்டவளாக மாட்டாள். (2:230)18

 நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

மூன்று தலாக் சொல்லிவிட்டவர் குறித்து இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டால், ‘ஒரு தலாக், அல்லது இரண்டு தலாக் சொல்லியிருந்தால் (திரும்ப அழைத்துக்கொள்ளலாமே!) ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் இவ்வாறுதான் எனக்குக் கட்டளையிட்டார்கள். 19 ஆனால், அவளை நீ மூன்று தலாக் சொல்லிவிட்டால் வேறொரு கணவரை அவள் மணக்கும் வரை உனக்கு அவள் விலக்கப்பட்டவளாக ஆம்விடுவாள்’ என்று பதிலளிப்பார்கள்.

Book : 68

(புகாரி: 5264)

بَابُ إِذَا قَالَ: فَارَقْتُكِ، أَوْ سَرَّحْتُكِ، أَوِ الخَلِيَّةُ، أَوِ البَرِيَّةُ، أَوْ مَا عُنِيَ بِهِ الطَّلاَقُ، فَهُوَ عَلَى نِيَّتِهِ وَقَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ: {وَسَرِّحُوهُنَّ سَرَاحًا جَمِيلًا} [الأحزاب: 49] وَقَالَ: {وَأُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيلًا} [الأحزاب: 28] وَقَالَ: {فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ} [البقرة: 229] وَقَالَ: {أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ} [الطلاق: 2] وَقَالَتْ عَائِشَةُ: «قَدْ عَلِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أَبَوَيَّ لَمْ يَكُونَا يَأْمُرَانِي بِفِرَاقِهِ»

بَابُ مَنْ قَالَ لِامْرَأَتِهِ: أَنْتِ عَلَيَّ حَرَامٌ

وَقَالَ الحَسَنُ: «نِيَّتُهُ» وَقَالَ أَهْلُ العِلْمِ: إِذَا طَلَّقَ ثَلاَثًا فَقَدْ حَرُمَتْ عَلَيْهِ، فَسَمَّوْهُ حَرَامًا بِالطَّلاَقِ وَالفِرَاقِ، وَلَيْسَ هَذَا كَالَّذِي يُحَرِّمُ الطَّعَامَ، لِأَنَّهُ لاَ يُقَالُ لِطَعَامِ الحِلِّ حَرَامٌ، وَيُقَالُ لِلْمُطَلَّقَةِ حَرَامٌ. وَقَالَ فِي الطَّلاَقِ ثَلاَثًا: لاَ تَحِلُّ لَهُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ

وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي نَافِعٌ، قَالَ

كَانَ ابْنُ عُمَرَ، إِذَا سُئِلَ عَمَّنْ طَلَّقَ ثَلاَثًا، قَالَ: «لَوْ طَلَّقْتَ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنِي بِهَذَا، فَإِنْ طَلَّقْتَهَا ثَلاَثًا حَرُمَتْ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَكَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.