தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6947

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

நிர்ப்பந்தத்தின் பேரில் ஒருவர் ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்யவோ அல்லது விற்கவோ செய்தால் அது செல்லாது. (இதுவே அனைவரது கருத்தாகும்.

(ஆனால்,) சிலர் இவ்வாறு கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறுகிறார்கள்: (இவ்வாறு நிர்ப்பந்திக்கப்பட்டவரிடமிருந்து) வாங்கியவர் தாம் வாங்கிய அந்த அடிமை விஷயத்தில் ஏதேனும் நேர்த்திக்கடன் செய்வதாக எண்ணினாலோ, அவ்வாறே அந்த அடிமைக்குப் பின்விடுதலை’அளித்தாலோ அவரது எண்ணப்படி அது செல்லும்.11

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

அன்சாரிகளில் ஒருவர் (தமக்குச் சொந்தமான) ஓர் அடிமையை தம் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்தார். அப்போது அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறெந்தச் செல்வமும் இருக்கவில்லை. இந்த விஷயம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அவர்கள், ‘இந்த அடிமையை என்னிடமிருந்து விலைக்கு வாங்குபவர் யார்?’ என்று கேட்டார்கள். அப்போது அவனை நுஐம் இப்னு நஹ்ஹாம் (ரலி) அவர்கள் எண்ணூறு வெள்ளிக் காசுகள் (திர்ஹம்) கொடுத்து விலைக்கு வாங்கினார்கள். அந்த கிப்தீ(எகிப்து) அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே இறந்துவிட்டான்.12

Book : 89

(புகாரி: 6947)

بَابُ إِذَا أُكْرِهَ حَتَّى وَهَبَ عَبْدًا أَوْ بَاعَهُ لَمْ يَجُزْ
وَقَالَ بَعْضُ النَّاسِ: «فَإِنْ نَذَرَ المُشْتَرِي فِيهِ نَذْرًا، فَهُوَ جَائِزٌ بِزَعْمِهِ، وَكَذَلِكَ إِنْ دَبَّرَهُ»

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ،

أَنَّ رَجُلًا مِنَ الأَنْصَارِ دَبَّرَ مَمْلُوكًا، وَلَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَنْ يَشْتَرِيهِ مِنِّي» فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ النَّحَّامِ بِثَمَانِ مِائَةِ دِرْهَمٍ قَالَ: فَسَمِعْتُ جَابِرًا يَقُولُ: عَبْدًا قِبْطِيًّا، مَاتَ عَامَ أَوَّلَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.