தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7369

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் தம் விவகாரங்களை தமக்கிடையே கலந்தா லோசித்து (முடிவு) செய்வார்கள். (42:38) அல்லாஹ் கூறுகின்றான்:(நபியே!) (முக்கியமான) பிரச்சினைகளில் அவர் களுடன் கலந்தாலோசிப்பீராக. (3:159) (ஒரு விஷயத்தில்) தெளிவு ஏற்பட்டு ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்புதான் கலந்தா லோசனை என்பதெல்லாம். அல்லாஹ் கூறுகின்றான்: ஓர் உறுதி(யான முடிவு)க்கு நீங்கள் வந்துவிட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்துச் செயல்படு)த்திடுவீராக (3:159). ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதியான ஒரு முடிவுக்கு வந்துவிட்ட பின், அது தொடர்பாக அல்லாஹ்வையும் அவன் தூதரையும் முந்திக் கொண்டு கருத்துச் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை.105 உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், ஊரிலேயே தங்கியிருந்து (எதிரிகளின் படையை எதிர்) கொள்ளலாமா? அல்லது (பகைவர்களின் படையை எதிர்கொள்ள ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாமா? என்று ஆலோசனை கேட்க அவர்கள், (ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாம் என்று நபி (ஸல்) அவர்களிடம் கருத்துத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை அணிந்து கொண்டு (ஊருக்கு வெளியே செல்ல) உறுதி கொண்டு புறப்பட்ட போது,தோழர்கள் ஊரிலேயே தங்கி விடுங்கள் என்று (மாற்று யோசனை) சொன்னார்கள். ஆனால், உறுதி கொண்டு விட்ட பின்னால் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செவிசாய்க்கவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள், (போருக்குப் புறப்படத் தயாராகி) தமது கவச ஆடையை அணிந்து கொண்ட எந்த ஒரு இறைத்தூதருக்கும் அல்லாஹ் தீர்மானிக்கும் வரை அதைக் கீழே வைப்பது முறையாகாது என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன அபாண்டம் குறித்து அலீ (ரலி) அவர்களிடமும் உசாமா (ரலி) அவர்களிடமும் நபி (ஸல்) அவர்கள் ஆலோசனை கலந்தார்கள். அதைப் பற்றிக் குர்ஆன் வசனம் அருளப்படும் வரை அவர் களிடம் கருத்துக் கேட்டார்கள். குர்ஆன் வசனம் அருளப்பட்டவுடன் அவதூறு கற்பித்தவர்களுக்குச் சாட்டையடி தண்டனை வழங்கினார்கள். ஆலோசனை வழங்கியவர் களின் வாக்குவாதங்களை நபியவர்கள் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் தமக்கு கட்டளையிட்டதை வைத்தே தீர்ப்பளித்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வந்த ஆட்சித் தலைவர்கள் அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் சுலபமானதொரு முடிவை எடுப்பதற்காக நம்பிக்கைக்குரிய அறிஞர் களிடம் ஆலோசனை கலந்துவந்தார்கள். (ஒரு விஷயம் தொடர்பாக) இறைவேதத்திலோ நபிவழியிலோ தெளிவு கிடைத்த பிறகு, அதைத் தாண்டி வேறு எந்த முடிவுக்கும் செல்ல மாட்டார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியே இவ்வாறு செய்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், ஸகாத்’ வழங்க மறுத்தவர்களுடன் போரிட வேண்டும் என்று கருதினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் லாஇலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமிலர்) என்று சொல்கின்ற வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது; அவர்கள், லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று (மனதார ஏற்றுச்) சொல்லிவிட்டால், தகுந்த காரணம் இருந்தால் தவிர, என்னிடமிருந்து தங்கள் உயிர்களையும் உடைமைகளையும் அவர்கள் பாதுகாத்துக்கொள்வார்கள்; அவர்களது (அந்தரங்கம் பற்றிய) விசாரணை அல்லாஹ் வின் பொறுப்பில் உள்ளது என்று கூறியிருக்க, நீங்கள் எப்படி அவர்களுடன் போரிடுவீர்கள்?என்று கேட்டார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணை யாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றாகக் கருதிய(தொழுகை மற்றும் ஸகாத்)தை எவர் தனித் தனியாக (பிரித்து வெவ்வேறானவை என)க் கருதுகின்றார்களோ அவர்களுடன் நான் போரிட்டே தீருவேன் என்று கூறினார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களது கருத்துடன் ஒத்துப்போய்விட்டார்கள். இந்த விஷயத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எவருடைய ஆலோசனையையும் கோர வில்லை. ஏனெனில், தொழுகையையும் ஸகாத்தையும் தனித் தனியாகப் பிரித்து மார்க்கத்தையும் அதன் சட்டங்களையும் மாற்ற விரும்புவோர் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பு என்ன என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. நபி (ஸல்) அவர்கள் யார் தமது மார்க்கத்தை மாற்றுகிறாரோ அவருடன் போரிடுங்கள் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களுடைய ஆலோசகர் களாக மார்க்க அறிஞர்களே இருந்தனர். அவர்கள் முதியவர்களாயினும் சரி; வா-பர்களாயினும் சரி. மேலும், உமர் (ரலி) அவர்கள் வல்லமையும் மகத்துவமும் உடைய அல்லாஹ்வின் வேதத்திற்கு மிகவும் கட்டுப் பட்டவர்களாய் இருந்தார்கள்.

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என் மீது அவதூறு கற்பித்தவர்கள் அந்த அபாண்டத்தைச் சொன்னபோது, அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களையும், உசாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களையும் (என்னைப் பற்றி) விசாரிப்பதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைத்தார்கள்.

அப்போது வேதஅறிவிப்பு (தாற்காலிகமாக) நின்று போயிருந்தது. தம் குடும்பத்தாரை (-என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து அவ்விருவரிடமும் நபியவர்கள் ஆலோசனை கேட்டார்கள். உசாமா அவர்களோ நான் நிரபராதி என தாம் அறிந்துள்ளதை எடுத்துரைத்தார்கள். அலீ அவர்களோ ‘அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அல்லாமல் பெண்கள் பலர் உள்ளனர். பணிப் பெண்ணிடம் (-பரீராவிடம்) ‘நீ சந்தேகப்படும் படி எதையேனும் கண்டாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு பரீரா ‘குழைத்த மாவை அப்படியே போட்டுவிட்டு ஆயிஷா உறங்கி விடுவார். ஆடு வந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (கவனக் குறைவான) இளம் வயது பெண் என்பதற்கு அதிகமாக வேறு (குறை) எதையும் நான் கண்டதில்லை’ என்று கூறினார்.

உடனே நபி(ஸல்) அவர்கள் (பள்ளி வசாலுக்குச் சென்று) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, ‘முஸ்லிம்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மனவேதனையளித்த ஒரு மனிதனைத் தண்டிக்க எனக்கு உதவிபுரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி குறித்து நல்லதையே அறிவேன்’ என்றார்கள். பிறகு நான் குற்றமற்றவள் என்று (இறைவன் அறிவித்ததை) எடுத்துரைத்தார்கள்.106

Book : 96

(புகாரி: 7369)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ} [الشورى: 38]، {وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ} [آل عمران: 159] «وَأَنَّ المُشَاوَرَةَ قَبْلَ العَزْمِ وَالتَّبَيُّنِ لِقَوْلِهِ»: {فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ} [آل عمران: 159] «فَإِذَا عَزَمَ الرَّسُولُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ لِبَشَرٍ التَّقَدُّمُ عَلَى اللَّهِ وَرَسُولِهِ»

وَشَاوَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْحَابَهُ يَوْمَ أُحُدٍ فِي المُقَامِ وَالخُرُوجِ، فَرَأَوْا لَهُ الخُرُوجَ، فَلَمَّا لَبِسَ لَأْمَتَهُ وَعَزَمَ قَالُوا: أَقِمْ، فَلَمْ يَمِلْ إِلَيْهِمْ بَعْدَ العَزْمِ، وَقَالَ: «لاَ يَنْبَغِي لِنَبِيٍّ يَلْبَسُ لَأْمَتَهُ فَيَضَعُهَا حَتَّى يَحْكُمَ اللَّهُ» وَشَاوَرَ عَلِيًّا، وَأُسَامَةَ فِيمَا رَمَى بِهِ أَهْلُ الإِفْكِ عَائِشَةَ فَسَمِعَ مِنْهُمَا حَتَّى  نَزَلَ القُرْآنُ، فَجَلَدَ الرَّامِينَ، وَلَمْ يَلْتَفِتْ إِلَى تَنَازُعِهِمْ، وَلَكِنْ حَكَمَ بِمَا أَمَرَهُ اللَّهُ وَكَانَتِ الأَئِمَّةُ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَشِيرُونَ الأُمَنَاءَ مِنْ أَهْلِ العِلْمِ فِي الأُمُورِ المُبَاحَةِ لِيَأْخُذُوا بِأَسْهَلِهَا، فَإِذَا وَضَحَ الكِتَابُ أَوِ السُّنَّةُ لَمْ يَتَعَدَّوْهُ إِلَى غَيْرِهِ، اقْتِدَاءً بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَأَى أَبُو بَكْرٍ قِتَالَ مَنْ مَنَعَ الزَّكَاةَ، فَقَالَ عُمَرُ: كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوا: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ ” فَقَالَ أَبُو بَكْرٍ: وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ مَا جَمَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «ثُمَّ تَابَعَهُ بَعْدُ عُمَرُ فَلَمْ يَلْتَفِتْ أَبُو بَكْرٍ إِلَى مَشُورَةٍ إِذْ كَانَ عِنْدَهُ حُكْمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الَّذِينَ فَرَّقُوا بَيْنَ الصَّلاَةِ وَالزَّكَاةِ وَأَرَادُوا تَبْدِيلَ الدِّينِ وَأَحْكَامِهِ» وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ» وَكَانَ القُرَّاءُ أَصْحَابَ مَشُورَةِ عُمَرَ كُهُولًا كَانُوا أَوْ شُبَّانًا، وَكَانَ وَقَّافًا عِنْدَ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ

حَدَّثَنَا الأُوَيْسِيُّ عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ، وَابْنُ المُسَيِّبِ، وَعَلْقَمَةُ بْنُ وَقَّاصٍ، وَعُبَيْدُ اللَّهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، قَالَتْ: وَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، وَأُسَامَةَ بْنَ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، حِينَ اسْتَلْبَثَ الوَحْيُ، يَسْأَلُهُمَا وَهُوَ يَسْتَشِيرُهُمَا فِي فِرَاقِ أَهْلِهِ، فَأَمَّا أُسَامَةُ: فَأَشَارَ بِالَّذِي يَعْلَمُ مِنْ بَرَاءَةِ أَهْلِهِ، وَأَمَّا عَلِيٌّ فَقَالَ: لَمْ يُضَيِّقِ اللَّهُ عَلَيْكَ، وَالنِّسَاءُ سِوَاهَا كَثِيرٌ، وَسَلِ الجَارِيَةَ تَصْدُقْكَ. فَقَالَ: «هَلْ رَأَيْتِ مِنْ شَيْءٍ يَرِيبُكِ؟»، قَالَتْ: مَا رَأَيْتُ أَمْرًا أَكْثَرَ مِنْ أَنَّهَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ، تَنَامُ عَنْ عَجِينِ أَهْلِهَا، فَتَأْتِي الدَّاجِنُ فَتَأْكُلُهُ، فَقَامَ عَلَى المِنْبَرِ فَقَالَ: «يَا مَعْشَرَ المُسْلِمِينَ، مَنْ يَعْذِرُنِي مِنْ رَجُلٍ بَلَغَنِي أَذَاهُ فِي أَهْلِي، وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَى أَهْلِي إِلَّا خَيْرًا» فَذَكَرَ بَرَاءَةَ عَائِشَةَ وَقَالَ أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.