ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
109. மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு, இன்ன பனூ கூட்டத்தாரின் குப்பை மேட்டில் போடப்பட்டு மூன்று நாட்கள் கிடந்தார்கள். பிறகு அங்கு 12 பேர் வந்தார்கள். அவர்களில் எனது பாட்டனார் மாலிக் பின் அபூஆமிர், ஹுவைத்திப் பின் அப்துல்உஸ்ஸா, ஹகீம் பின் ஹிஸாம், அப்துல்லாஹ் பின் ஸுபைர், ஆயிஷா பின்த் உஸ்மான் ஆகியோர் இருந்தனர்.
…அவர்களிடம் 4 வயது ஒட்டகமும், விளக்கும் இருந்தது…
அதில் உஸ்மான் (ரலி) அவர்களின் உடலை கிடத்தி பகீஃ எனும் பொதுமையவாடிக்கு கொண்டு வந்தனர்…
பிறகு அவருக்கு யார் ஜனாஸாத் தொழுகை நடத்த வேண்டும் என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு ஹகீம் பின் ஹிஸாம் அல்லது ஹுவைத்திப் தொழ வைத்தார்.
பிறகு அங்கு அவர்களை அடக்கம் செய்ய நாடினார்கள். அப்போது பனூ மாஸின் கூட்டத்தை சேர்ந்த ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை முஸ்லிம்களுடன் நீங்கள் அடக்கம் செய்தால் மக்களிடத்தில் நான் சொல்லி விடுவேன் என்று கூறினார். எனவே அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களின் உடலை கவ்கப் என்பவரின் தோட்டத்துக்கு கொண்டு வந்தார்கள். பிறகு கப்ர் குழித் தோண்டி அதில் உடலை வைத்தார்கள். அப்போது ஆயிஷா பின்த் உஸ்மான் அவர்கள் சத்தமிட்டு அழ ஆரம்பித்து விட்டார்.
قُتِلَ عُثْمَانُ رَضِيَ اللهُ عَنْهُ، فَأَقَامَ مَطْرُوحًا عَلَى كُنَاسَةِ بَنِي فُلَانٍ ثَلَاثًا، فَأَتَاهُ اثْنَا عَشَرَ رَجُلًا، فِيهِمْ جَدِّي مَالِكُ بْنُ أَبِي عَامِرٍ، وَحُوَيْطِبُ بْنُ عَبْدِ الْعُزَّى، وَحَكِيمُ بْنُ حِزَامٍ، وَعَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ، وَعَائِشَةُ بِنْتُ عُثْمَانَ مَعَهُمْ مِصْبَاحٌ فِي حِقٍّ فَحَمَلُوهُ عَلَى بَابٍ، وَإِنَّ رَأْسَهُ يَقُولُ عَلَى الْبَابِ طَقْ طَقْ حَتَّى أَتَوْا بِهِ الْبَقِيعَ، فَاخْتَلَفُوا فِي الصَّلَاةِ عَلَيْهِ، فَصَلَّى عَلَيْهِ حَكِيمُ بْنُ حِزَامٍ أَوْ حُوَيْطِبُ بْنُ عَبْدِ الْعُزَّى – شَكَّ عَبْدُ الرَّحْمَنِ – ثُمَّ أَرَادُوا دَفْنَهُ، فَقَامَ رَجُلٌ مِنْ بَنِي مَازِنٍ فَقَالَ: وَاللهِ لَئِنْ دَفَنْتُمُوهُ مَعَ الْمُسْلِمِينَ، لَأُخْبِرَنَّ النَّاسَ، فَحَمَلُوهُ حَتَّى أَتَوْا بِهِ إِلَى حَشِّ كَوْكَبٍ، فَلَمَّا دَلُّوهُ فِي قَبْرِهِ صَاحَتْ عَائِشَةُ بِنْتُ عُثْمَانَ، فَقَالَ لَهَا ابْنُ الزُّبَيْرِ: اسْكُتِي فَوَاللهِ لَئِنْ عُدْتِ لَأَضْرِبَنَّ الَّذِي فِيهِ عَيْنَاكِ، فَلَمَّا دَفَنُوهُ وَسَوَّوْا عَلَيْهِ التُّرَابَ قَالَ لَهَا ابْنُ الزُّبَيْرِ: صِيحِي مَا بَدَا لَكِ أَنْ تَصِيحِي، قَالَ مَالِكٌ وَكَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ، قَبْلَ ذَلِكَ يَمُرُّ بِحُشٍّ كَوْكَبٍ فَيَقُولُ: لَيُدْفَنَنَّ هَهُنَا رَجُلٌ صَالِحٌ ” قَالَ أَبُو الْقَاسِمِ: ” الْحُشُّ: الْبُسْتَانُ “
சமீப விமர்சனங்கள்