Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-20988

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

20988. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்ம் அல்அஷ்அரீ (ரஹ்) கூறினார்:

‘அபூ ஆமிர் (ரலி)’ அல்லது ‘அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரலி)’ என்னிடம் கூறினார்கள் – அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்)

நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், ‘நாளை எங்களிடம் வா’ என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.


حَدَّثَنِي أَبُو عَامِرٍ , أَوْ أَبُو مَالِكٍ , وَاللهِ مَا كَذَبَنِي , أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” لَيَكُونَنَّ فِي أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ , وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ , تَرُوحُ عَلَيْهِمْ سَارِحَةٌ لَهُمْ , فَيَأْتِيهِمْ رَجُلٌ لِحَاجَتِهِ , فَيَقُولُونَ: ارْجِعْ إِلَيْنَا غَدًا , فَيُبَيِّتُهُمُ اللهُ , فَيَضَعُ الْعَلَمَ , وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ


Kubra-Bayhaqi-6908

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6908. அபூ தல்ஹா (ரலி) அவர்களின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூதல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.

அறிவிப்பவர் : அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ் (ரஹ்)


أَنَّ أَبَا طَلْحَةَ: ” دَعَا رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيهِ وَسَلَّمَ إِلَى عُمَيْرِ بْنِ أَبِي طَلْحَةَ حِينَ تُوُفِّيَ، فَأَتَاهُ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيهِ وَسَلَّمَ فَصَلَّى عَلَيْهِ فِي مَنْزِلِهِمْ، فَتَقَدَّمَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيهِ وَسَلَّمَ، وَكَانَ أَبُو طَلْحَةَ وَرَاءَهُ، وَأُمُّ سُلَيْمٍ وَرَاءَ أَبِي طَلْحَةَ وَلَمْ يَكُنْ مَعَهُمْ غَيْرُهُمْ


Kubra-Bayhaqi-20675

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

20675. அலி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

பின்பு நரகில் செல்லும் இருவரை கூறினார்கள்.

  1. (நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல்) தீர்ப்பில் அநீதி செய்த மனிதர். இவர் நரகத்தில் புகுவார்.
  2. ஆய்வு செய்தும், நீதியில் தவறிழைத்தவர். இவரும் நரகத்தில் புகுவார்.
  3. ஆய்வு செய்து சரியாக தீர்ப்பளித்தவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.

அறிவிப்பவர் : அபுல்ஆலியா (ரஹ்)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கதாதா (ரஹ்) அவர்கள், அலி (ரலி) அவர்களிடமிருந்து இச்செய்தியை அறிவிக்கும் அபுல்ஆலியாவிடம் , ஆய்வு செய்தும், நீதியில் தவறிழைத்தவரின் நிலை ஏன் நரகம் செல்வார்?என்று கேட்டார். அதற்கு அபுல்ஆலியா, அவர் சரியாக தீர்ப்பளிக்க தெரியாவிட்டால் தீர்ப்பளிக்கும் நீதிபதி பொறுப்பில் இருந்திருக்கக் கூடாது என்று கூறினார்கள்.

பைஹகீ கூறுகிறார்:

அபுல்ஆலியா அவர்களின் விளக்கத்தின் படி மேற்கண்ட செய்தி, ஆய்வுத்திறன் இல்லாதவர்கள் பற்றியே எச்சரிக்கை செய்கிறது என்று தெரிகிறது. அம்ர் பின் ஆஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) போன்றோர் வழியாக வரும் ஹதீஸ்கள் மூலம் ஆய்வுத்திறன் உள்ள நீதிபதி ஆய்வு செய்து தீர்ப்பளித்தால் சரியாக இருந்தால் இரண்டு நன்மையும், தவறாக இருந்தால்

الْقُضَاةُ ثَلَاثَةٌ: فَاثْنَانِ فِي النَّارِ , وَوَاحِدٌ فِي الْجَنَّةِ، فَأَمَّا اللَّذَانِ فِي النَّارِ: فَرَجُلٌ جَارَ عَنِ الْحَقِّ مُتَعَمِّدًا , وَرَجُلٌ اجْتَهَدَ رَأْيَهُ فَأَخْطَأَ , وَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ , فَرَجُلٌ اجْتَهَدَ رَأْيَهُ فِي الْحَقِّ فَأَصَابَ ” , قَالَ: فَقُلْتُ لِأَبِي الْعَالِيَةِ: ” مَا بَالُ هَذَا الَّذِي اجْتَهَدَ رَأْيَهُ فِي الْحَقِّ فَأَخْطَأَ؟ ” قَالَ: ” لَوْ شَاءَ لَمْ يَجْلِسْ يَقْضِي , وَهُوَ لَا يُحْسِنُ يَقْضِي “.


Kubra-Bayhaqi-20355

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

20355. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் நுழைவர்.

  1. நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  2. உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே தீர்ப்பு வழங்கி மக்களின் உரிமைகளை நாசமாக்கியவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  3. நீதியை அறிந்து அதன்படி செயல்படுபவர். இவர் சுவர்க்கத்தில் நுழைவார்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


الْقُضَاةُ ثَلَاثَةٌ: قَاضِيَانِ فِي النَّارِ , وَقَاضٍ فِي الْجَنَّةِ , قَاضٍ قَضَى بِغَيْرِ الْحَقِّ , وَهُوَ يَعْلَمُ , فَذَاكَ فِي النَّارِ , وَقَاضٍ قَضَى وَهُوَ لَا يَعْلَمُ , فَأَهْلَكَ حُقُوقَ النَّاسِ , فَذَاكَ فِي النَّارِ , وَقَاضٍ قَضَى بِالْحَقِّ فَذَاكَ فِي الْجَنَّةِ


Kubra-Bayhaqi-20354

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

20354. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

  1. நீதியை அறிந்து அதன்படி செயல்படுபவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.
  2. நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் புகுவார்.
  3. உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே மக்களுக்குத் அநீதமாக தீர்ப்பு வழங்கியவர். இவர் நரகத்தில் புகுவார்…

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

மேற்கண்ட ஹதீஸை அறிவித்த அபூஹாஷிம் அவர்கள் இந்த ஹதீஸ் மட்டும் இல்லாவிட்டால் , ஒரு நீதிபதி ஆய்வு செய்து தீர்ப்பளித்தால் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று நாங்கள் கூறியிருப்போம்.


لَوْلَا حَدِيثٌ حَدَّثَنِي ابْنُ بُرَيْدَةَ , عَنْ أَبِيهِ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” الْقُضَاةُ ثَلَاثَةٌ: اثْنَانِ فِي النَّارِ , وَوَاحِدٌ فِي الْجَنَّةِ: رَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ فَهُوَ فِي الْجَنَّةِ , وَرَجُلٌ قَضَى بَيْنَ النَّاسِ بِالْجَهْلِ فَهُوَ فِي النَّارِ , وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَجَارَ فَهُوَ فِي النَّارِ “. لَقُلْنَا: إِنَّ الْقَاضِيَ إِذَا اجْتَهَدَ فَلَيْسَ عَلَيْهِ شَيْءٌ


Kubra-Bayhaqi-3878

ஹதீஸின் தரம்: Pending

3878. …


سَأَلْتُ أَبِي عَنِ الْقُنُوتِ فَقَالَ: ” صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُمْ فَلَمْ أَرَ أَحَدًا مِنْهُمْ فَعَلَهُ قَطُّ


Kubra-Bayhaqi-3156

ஹதீஸின் தரம்: Pending

3156. …


قُلْتُ لِأَبِي: يَا أَبَتِ أَلَيْسَ قَدْ صَلَّيْتَ خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَلَفَ أَبِي بَكْرٍ، وَخَلَفَ عُمَرَ؟ قَالَ: بَلَى قُلْتُ: فَكَانُوا يَقْنُتُونَ فِي الْفَجْرِ؟ قَالَ: ” يَا بُنِيَّ مُحْدَثَةٌ


Kubra-Bayhaqi-3120

ஹதீஸின் தரம்: More Info

3120. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதினார்கள்.


أَنَّهُ ” قَنَتَ فِي الْفَجْرِ


Kubra-Bayhaqi-3119

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3119. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் குனூத் (சோதனைக் காலப்பிரார்த்தனை) ஓதிவந்தார்கள்…


أَنَّهُ ” كَانَ يَقْنُتُ فِي الصُّبْحِ


Next Page » « Previous Page