Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-3091

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3091. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையிலும் மஃக்ரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப்பிரார்த்தனை) ஓதிவந்தார்கள்…


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْنُتُ فِي الصُّبْحِ وَالْمَغْرِبِ


Kubra-Bayhaqi-3141

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3141. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சுப்ஹு தொழுகையின் குனூத்தில் பிரார்த்திப்பதற்காக அல்லாஹும் மஹ்தினி ஃபீமன் ஹதய்த்த, வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த வதவல்லனா ஃபீமன் தவல்லய்த்த வபாரிக்லனா ஃபீமா அஃதய்த்த வகினா ஷர்ர மா கலய்த்த, இன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க இன்னஹு லாயதில்லு மன் வாலய்த்த தபாரக்த ரப்பனா வதஆலய்த்த என்ற துஆவை எங்களுக்குக் கற்றுத் தருபவர்களாக இருந்தார்கள்.


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا دُعَاءً نَدْعُو بِهِ فِي الْقُنُوتِ مِنْ صَلَاةِ الصُّبْحِ ” اللهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ، وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ


Kubra-Bayhaqi-3140

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3140. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சுப்ஹு தொழுகையின் குனூத்தில் பிரார்த்திப்பதற்காக அல்லாஹும் மஹ்தினி ஃபீமன் ஹதய்த்த, வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த வதவல்லனா ஃபீமன் தவல்லய்த்த வபாரிக்லனா ஃபீமா அஃதய்த்த வகினா ஷர்ர மா கலய்த்த, இன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க இன்னஹு லாயதில்லு மன் வாலய்த்த தபாரக்த ரப்பனா வதஆலய்த்த என்ற துஆவை எங்களுக்குக் கற்றுத் தருபவர்களாக இருந்தார்கள்.


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْنُتُ فِي صَلَاةِ الصُّبْحِ وَفِي وِتْرِ اللَّيْلِ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ: ” اللهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ


Kubra-Bayhaqi-3153

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3153. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் லுஹர், அஸர், மஃரிப், இஷா, சுபுஹ் ஆகிய  அனைத்து தொழுகைகளின் இறுதியில், (அதாவது) கடைசி ரக்அத்தி்ல் “சமிஅல்லாஹூ லிமன் ஹமிதஹ்” என்று கூறும் போது பனூ சுலைம் கோத்திரத்தாரில் ரிஃல், தக்வான், உஸைய்யா ஆகிய குலத்தாருக்கு எதிராக பிரார்த்தித்து குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் உள்ளவர்கள் ஆமீன் சொன்னார்கள்.


قَنَتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، شَهْرًا مُتَتَابِعًا فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ وَالصُّبْحِ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ إِذَا قَالَ: سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ عَلَى رِعْلٍ، وَذَكْوَانَ، وَعُصَيَّةَ وَيُؤَمِّنُ مَنْ خَلْفَهُ


Kubra-Bayhaqi-3098

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3098. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் லுஹர், அஸர், மஃரிப், இஷா, சுபுஹ் ஆகிய  அனைத்து தொழுகைகளின் இறுதியில், (அதாவது) கடைசி ரக்அத்தி்ல் “சமிஅல்லாஹூ லிமன் ஹமிதஹ்” என்று கூறும் போது பனூ சுலைம் கோத்திரத்தாரில் ரிஃல், தக்வான், உஸைய்யா ஆகிய குலத்தாருக்கு எதிராக பிரார்த்தித்து குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் உள்ளவர்கள் ஆமீன் சொன்னார்கள்…


قَنَتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا مُتَتَابِعًا فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ وَالصُّبْحِ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ إِذَا قَالَ: سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ فِي الرَّكْعَةِ الْأَخِيرَةِ يَدْعُو عَلَى حَيٍّ مِنْ بَنِي سُلَيْمٍ وَعَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ، وَيُؤَمِّنْ مَنْ خَلْفَهُ، وَكَانَ أَرْسَلَ إِلَيْهِمْ يَدْعُوهُمْ إِلَى الْإِسْلَامِ فَقَتَلُوهُمْ ”

قَالَ عِكْرِمَةُ هَذَا مِفْتَاحُ الْقُنُوتِ


Kubra-Bayhaqi-3970

ஹதீஸின் தரம்: More Info

3970. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.

அறிவிப்பவர் : அலீ (ரலி)


مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَإِحْرَامُهَا التَّكْبِيرُ، وَإِحْلَالُهَا التَّسْلِيمُ


Kubra-Bayhaqi-3373

ஹதீஸின் தரம்: Pending

3373. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.

அறிவிப்பவர் : அலீ (ரலி)


مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ وَإِحْرَامُهَا التَّكْبِيرُ وَإِحْلَالُهَا التَّسْلِيمُ


Kubra-Bayhaqi-2962

ஹதீஸின் தரம்: More Info

2962. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.

அறிவிப்பவர் : அலீ (ரலி)


مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَإِحْرَامُهَا التَّكْبِيرُ، وَإِحْلَالُهَا التَّسْلِيمُ


Kubra-Bayhaqi-2261

ஹதீஸின் தரம்: More Info

2261. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.

அறிவிப்பவர் : அலீ (ரலி)


مِفْتَاحُ الصَّلَاةِ الطَّهُورُ، وَإِحْرَامُهَا التَّكْبِيرُ، وَإِحْلَالُهَا التَّسْلِيمُ


Kubra-Bayhaqi-14333

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14333. அபூதாவூதின் அறிவிப்பில் இதற்கு முன் உள்ள ஹதீஸ், அபுல்அஸ்பகிடமிருந்து முஹம்மது பின் யஹ்யா அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரில் “திருமணத்திற்கு பின் மஹர் நிர்ணயிக்காமலே இல்லறத்தில் ஈடுப்பட்டார். அதற்கு பின்பும் மஹர் தரவில்லை” என்று கூடுதலான செய்தி இடம்பெற்றுள்ளது.


رَوَاهُ أَبُو دَاوُدَ فِي السُّنَنِ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى، عَنْ أَبِي الْأَصْبَغِ، وَزَادَ فِيهِ: فَدَخَلَ بِهَا الرَّجُلُ ثُمَّ قَالَ: وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا وَلَمْ يُعْطِهَا شَيْئًا


Next Page » « Previous Page