Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-9284

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9284. நபி (ஸல்) அவர்கள், தவாஃபுல் இஃபாளா செய்யும் போது ஏழு சுற்றுக்களிலும் (தோள்களைக் குலுக்கி நடையோட்டமாக) ஓடவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

தவாஃபுல் இஃபாளாவில் ஓடுதல் இல்லை.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمْ يَرْمُلْ فِي السَّبْعِ الَّذِي أَفَاضَ فِيهِ “

قَالَ: وَقَالَ عَطَاءٌ: لَا رَمَلَ فِيهِ


Kubra-Bayhaqi-9988

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9988. ஆயிஷா (ரலி) அவர்கள் ஸம்ஸம்நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறினார்கள்…

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


أَنَّ عَائِشَةَ كَانَتْ تَحْمِلُ مَاءَ زَمْزَمَ وَتُخْبِرُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُهُ


Kubra-Bayhaqi-3700

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3700. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மைந்தன் ஸஜ்தா (செய்யுமாறு கட்டளையுள்ள) வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தால் ஷைத்தான் அழுதவாறே அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் ஸஜ்தா செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் ஸஜ்தா செய்து விட்டான். அவனுக்கு சொர்க்கம் கிடைக்கப் போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்கு) ஸஜ்தா செய்யுமாறு எனக்கு கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே எனக்கு நரகம் தான் என்று கூறியபடி விலகிச் செல்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِي يَقُولُ: يَا وَيْلَهُ أُمِرَ ابْنُ آدَمَ بِالسُّجُودِ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِيَ النَّارُ


Kubra-Bayhaqi-4128

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4128. சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

எனக்கு (அதிகமாக) மதீ வெளிப்பட்டதால் நான் சிரமத்தை அடைந்தேன். இதற்காக நான் அதிகம் குளித்தேன். இது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, இதற்காக நீ உளூச் செய்வதே போதுமானதாகும் என்று பதிலளித்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே எனது ஆடையில் மதீ பட்டுவிட்டால் என்ன செய்வது என்று கேட்டபோது, ஒரு கையளவு நீர் அள்ளி, இச்சை நீர் எங்கே பட்டுவிட்டதாக நீர் கருதுகிறாயோ அந்த இடத்தில் தண்ணீர் தெளிப்பது உனக்கு போதுமாகும் என்று பதிலளித்தார்கள்…


كُنْتُ أَلْقَى مِنَ الْمَذْيِ شِدَّةً وَكُنْتُ أُكْثِرُ مِنْهُ الِاغْتِسَالَ فَسَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: ” إِنَّمَا يُجْزِئُكَ مِنْ ذَلِكَ الْوُضُوءُ ” قُلْتُ: يَا رَسُولَ اللهِ، فَكَيْفَ بِمَا يُصِيبُ ثَوْبِي مِنْهُ؟ قَالَ: ” يَكْفِيكَ أَنْ تَأْخُذَ كَفًّا مِنْ مَاءٍ فَتَنْضَحَ بِهَا مِنْ ثَوْبِكَ حَيْثُ تَرَى أَنَّهُ أَصَابَهُ


Kubra-Bayhaqi-13496

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13496. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை எனது தங்கை) அஸ்மா பின்த் அபூபக்ர் அவர்கள், ஷாம் நாட்டைச்சேர்ந்த மெல்லிய ஆடை அணிந்தவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தரையில் பார்வையை செலுத்தி, “அஸ்மாவே! என்ன இது? ஒரு பெண் பருமடைந்து விட்டால் இதையும், இதையும் தவிர வேறு எதையும் காட்டக்கூடாது என்று கூறி தனது முகத்தையும், இரு முன் கைகளையும் சுட்டிக்காட்டினார்கள்.


أَنَّ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهَا دَخَلَتْ عَلَيْهَا وَعِنْدَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثِيَابٍ شَامِيَّةٍ رِقَاقٍ، فَضَرَبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْأَرْضِ بِبَصَرِهِ قَالَ: ” مَا هَذَا يَا أَسْمَاءُ إِنَّ ” الْمَرْأَةَ إِذَا بَلَغَتِ الْمَحِيضَ لَمْ يَصْلُحْ أَنْ يُرَى مِنْهَا إِلَّا هَذَا وَهَذَا ” وَأَشَارَ إِلَى كَفِّهِ وَوَجْهِهِ


Kubra-Bayhaqi-3218

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3218. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை எனது தங்கை) அஸ்மா பின்த் அபூபக்ர் அவர்கள், ஷாம் நாட்டைச்சேர்ந்த மெல்லிய ஆடை அணிந்தவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவரை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கண்டித்து, “அஸ்மாவே! என்ன இது? ஒரு பெண் பருமடைந்து விட்டால் இதையும், இதையும் தவிர வேறு எதையும் காட்டக்கூடாது என்று கூறி தனது முகத்தையும், இரு முன் கைகளையும் சுட்டிக்காட்டினார்கள்.


أَنَّ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ، دَخَلَتْ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهَا ثِيَابٌ شَامِيَّةٌ رِقَاقٌ فَأَعْرَضَ عَنْهَا ثم قَالَ: ” مَا هَذَا يَا أَسْمَاءُ؟ إِنَّ الْمَرْأَةَ إِذَا بَلَغَتِ الْمَحِيضَ لَمْ يَصْلُحْ أَنْ يُرَى مِنْهَا إِلَّا هَذَا وَهَذَا، وَأَشَارَ إِلَى وَجْهِهِ وَكَفَّيْهِ


Kubra-Bayhaqi-14711

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

14711. முஆத் (ரலி) அவர்கள் ஷாமுக்கு சென்றார்கள். அங்குள்ளவர்கள் தமது தலைவர்களுக்கும், ஆட்சியாளர்களும் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தார்கள். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சிரம் பணிய வேண்டும் என தமக்குள் கூறிக்கொண்டார்கள். முஆத் (ரலி) அவர்கள் ஷாமிலிருந்து திரும்ப வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு சிரம் பணிந்தார்.  அதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள்.

முஆத் (ரலி) அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஷாமில் உள்ளவர்கள் தமது தலைவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் சிரம் பணிவதை பார்த்தேன். எனவே நான் உங்களுக்கு சிரம் பணியவேண்டும் என்று விரும்பினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தாச் செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்ய அனுமதித்திருப்பேன் என்று கூறினார்கள்….

அறிவிப்பவர் :  அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி)


أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ قَدِمَ الشَّامَ فَوَجَدَهُمْ يَسْجُدُونَ لِبَطَارِقَتِهِمْ وَأَسَاقِفَتِهِمْ فَرَوَى فِي نَفْسِهِ أَنْ يَفْعَلَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا قَدِمَ سَجَدَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْكَرَ ذَلِكَ قَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي دَخَلْتُ الشَّامَ فَوَجَدْتُهُمْ يَسْجُدُونَ لِبَطَارِقَتِهِمْ وَأَسَاقِفَتِهِمْ فَرَوَيْتُ فِي نَفْسِي أَنْ أَفْعَلَ ذَلِكَ لَكَ , فَقَالَ رَسُولُ اللهِ صلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: ” لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تُؤَدِّي الْمَرْأَةُ حَقَّ رَبِّهَا عَزَّ وَجَلَّ حَتَّى تُؤَدِّيَ حَقَّ زَوْجِهَا كُلَّهُ حَتَّى أَنْ لَوْ سَأَلَهَا نَفْسَهَا وَهِيَ عَلَى قَتَبٍ أَعْطَتْهُ ” أَوْ قَالَ: لَمْ تَمْنَعْهُ


Kubra-Bayhaqi-13485

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13485.


جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ أَنَا فُلَانَةُ بِنْتُ فُلَانٍ قَالَ: ” قَدْ عَرَفْتُكِ فَمَا حَاجَتُكِ؟ ” قَالَتْ: حَاجَتِي إِلَى ابْنِ عَمِّي فُلَانٍ الْعَابِدِ قَالَ: ” قَدْ عَرَفْتُهُ ” قَالَتْ: يَخْطُبُنِي فَأَخْبِرْنِي مَا حَقُّ الزَّوْجِ عَلَى الزَّوْجَةِ، فَإِنْ كَانَ شَيْئًا أُطِيقُهُ تَزَوَّجْتُهُ، وَإِنْ لَمْ أُطِقْ لَا أَتَزَوَّجُ قَالَ: ” مِنْ حَقِّ الزَّوْجِ عَلَى الزَّوْجَةِ أَنْ لَوْ سَالَ مَنْخِرَاهُ دَمًا وَقَيْحًا وَصَدِيدًا، فَلَحَسَتْهُ بِلِسَانِهَا مَا أَدَّتْ حَقَّهُ لَوْ كَانَ يَنْبَغِي لِبَشَرٍ أَنْ يَسْجُدَ لِبَشَرٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا إِذَا دَخَلَ عَلَيْهَا؛ لِمَا فَضَّلَهُ اللهُ عَلَيْهَا ” قَالَتْ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا أَتَزَوَّجُ مَا بَقِيتُ فِي الدُّنْيَا


Kubra-Bayhaqi-14704

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14704. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன். ஏனெனில் (அந்தளவிற்கு) அல்லாஹ் கணவனுக்கு செய்யவேண்டிய கடமையை அவள் மீது விதித்துள்ளான்…

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا لِمَا عَظَّمَ اللهُ مِنْ حَقِّهِ عَلَيْهَا


Kubra-Bayhaqi-14705

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

14705. நான் ஹீரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். ‘இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்’ என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘நான் ஹீரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்’ என்று கூறினேன்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?’ எனக் கேட்டார்கள். ‘மாட்டேன்’ என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்’ என்று கூறினார்கள்…

அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)


قَدِمْتُ الْحِيرَةَ فَرَأَيْتُ أَهْلَهَا يَسْجُدُونَ لِمَرْزُبَانَ لَهُمْ فَقُلْتُ نَحْنُ كُنَّا أَحَقَّ أَنْ نَسْجُدَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا قَدِمْتُ عَلَيْهِ أَخْبَرْتُهُ بِالَّذِي رَأَيْتُ قُلْتُ: نَحْنُ كُنَّا أَحَقَّ أَنْ نَسْجُدَ لَكَ فَقَالَ: ” لَا تَفْعَلُوا أَرَأَيْتَ لَوْ مَرَرْتَ بِقَبْرِي أَكُنْتَ سَاجِدًا؟ ” قُلْتُ: لَا قَالَ: ” فَلَا تَفْعَلُوا فَإِنِّي لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ النِّسَاءَ أَنْ يَسْجُدْنَ لِأَزْوَاجِهِنَّ لِمَا جَعَلَ اللهُ مِنْ حَقِّهِمْ عَلَيْهِنَّ


Next Page » « Previous Page