Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-24449

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24449. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழவேண்டாம்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»


Musnad-Ahmad-24270

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24270. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«لَا يُصَلَّى بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»


Musnad-Ahmad-24166

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24166. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«لَا يُصَلَّى بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»


Musnad-Ahmad-10094

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10094. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் மலம், ஜலம் போன்ற இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ (நிற்க) வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَقُومَنَّ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَبِهِ أَذًى مِنْ غَائِطٍ أَوْ بَوْلٍ»


Musnad-Ahmad-9697

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9697. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ (நிற்க) வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَقُومَنَّ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَبِهِ أَذًى»

يَعْنِي الْبَوْلَ وَالْغَائِطَ


Musnad-Ahmad-3938

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3938.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பணிவுள்ள; நாகரீகமிக்க; மென்மையான; மக்களின் நெருக்கத்திற்குரிய ஒவ்வொருவருக்கும் நரகம் தடைசெய்யப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


«حُرِّمَ عَلَى النَّارِكُلُّ هَيِّنٍ لَيِّنٍ سَهْلٍ قَرِيبٍ مِنَ النَّاسِ»


Musnad-Ahmad-3937

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3937.


«صَلَّيْتُ لَيْلَةً مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَزَلْ قَائِمًا» ، حَتَّى هَمَمْتُ بِأَمْرِ سُوءٍ، قُلْنَا: وَمَا هَمَمْتَ بِهِ؟ قَالَ: هَمَمْتُ أَنْ أَقْعُدَ، وَأَدَعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

قَالَ سُلَيْمَانُ: وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، مِثْلَهُ


Musnad-Ahmad-9627

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9627. ஒருவர் இரவில் எழுந்து தான் தொழுதுவிட்டு தன் மனைவியையும் எழுப்பி, அவள் எழ மறுத்தால் அவளது முகத்தில் தண்ணீர தெளித்து எழுப்பும் அம்மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

ஒரு பெண் இரவில் எழுந்து தான் தொழுதுவிட்டு தன் கணவனையும் எழுப்பி அவன் எழ மறுத்தால் அவனது முகத்தில் தண்ணீர தெளித்து எழுப்பும் அப்பெண்ணுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّى، وَأَيْقَظَ أَهْلَهُ فَصَلَّتْ، فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ، وَرَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَأَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى، فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ»


Musnad-Ahmad-7410

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7410. ஒருவர் இரவில் எழுந்து தான் தொழுதுவிட்டு தன் மனைவியையும் எழுப்பி, அவள் எழ மறுத்தால் அவளது முகத்தில் தண்ணீர தெளித்து எழுப்பும் அம்மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

ஒரு பெண் இரவில் எழுந்து தான் தொழுதுவிட்டு தன் கணவனையும் எழுப்பி அவன் எழ மறுத்தால் அவனது முகத்தில் தண்ணீர தெளித்து எழுப்பும் அப்பெண்ணுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنَ اللَّيْلِ، فَصَلَّى، وَأَيْقَظَ امْرَأَتَهُ، فَصَلَّتْ، فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ، وَرَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ، فَصَلَّتْ، وَأَيْقَظَتْ زَوْجَهَا، فَصَلَّى، فَإِنْ أَبَى، نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ»


Next Page » « Previous Page