Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-7672

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7672. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ، فَلْيَغْسِلْهُ سَبْعَ مِرَارٍ»


Musnad-Ahmad-9169

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9169. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ»


Musnad-Ahmad-11893

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11893.


وَضَعَ رَجُلٌ يَدَهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: وَاللَّهِ مَا أُطِيقُ أَنْ أَضَعَ يَدِي عَلَيْكَ مِنْ شِدَّةِ حُمَّاكَ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّا مَعْشَرَ الْأَنْبِيَاءِ يُضَاعَفُ لَنَا الْبَلَاءُ، كَمَا يُضَاعَفُ لَنَا الْأَجْرُ، إِنْ كَانَ النَّبِيُّ مِنَ الْأَنْبِيَاءِ يُبْتَلَى بِالْقُمَّلِ حَتَّى يَقْتُلَهُ، وَإِنْ كَانَ النَّبِيُّ مِنَ الْأَنْبِيَاءِ لَيُبْتَلَى بِالْفَقْرِ، حَتَّى يَأْخُذَ الْعَبَاءَةَ، فَيَجُونَهَا، وَإِنْ كَانُوا لَيَفْرَحُونَ بِالْبَلَاءِ، كَمَا تَفْرَحُونَ بِالرَّخَاءِ»


Musnad-Ahmad-27079

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

27079. ஃபாத்திமா பின்த் யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு பெண்குழுவினர் (நபி (ஸல்) அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டபோது) அவர்களை நலம் விசாரிக்க சென்றோம். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சலின் வெப்பத்தின் காரணமாக (அதை தணிப்பதற்கு) அவர்களுக்கு நேராக தோலாலான தண்ணீர்ப்பை தொங்க விடப்பட்டிருந்து அதிலிருந்து தண்ணீர் சொட்டுசொட்டாக விழுந்துக் கொண்டிருந்தது.

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தால் அவன் உங்களுக்கு நிவாரணம் அளிப்பானே! என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் நபிமார்கள்; பிறகு அவர்களை அடுத்துள்ளவர்கள்; பிறகு அவர்களை அடுத்துள்ளவர்கள்; பிறகு அவர்களை அடுத்துள்ளவர்கள்” என்று கூறினார்கள்.


أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعُودُهُ فِي نِسَاءٍ، فَإِذَا سِقَاءٌ مُعَلَّقٌ نَحْوَهُ يَقْطُرُ مَاؤُهُ عَلَيْهِ مِنْ شِدَّةِ مَا يَجِدُ مِنْ حَرِّ الْحُمَّى، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، لَوْ دَعَوْتَ اللَّهَ فَشَفَاكَ، فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَشَدِّ النَّاسِ بَلَاءً الْأَنْبِيَاءَ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ»


Musnad-Ahmad-26200

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

26200. ஹதீஸ் எண்-25252 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில் ஆயிஷா (ரலி) அவர்கள் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வந்துள்ளது.


أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ فَذَكَرَ نَحْوًا مِنْ حَدِيثِ مَالِكٍ


Musnad-Ahmad-26198

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

26198. ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

மேலும், ‘கடும் குளிரான நாள்களில் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி (ஸல்) அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்’

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


أَنَّ الْحَارِثَ بْنَ هِشَامٍ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْيَانًا يَأْتِينِي فِي مِثْلِ صَلْصَلَةِ الْجَرَسِ، وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ، فَيَفْصِمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ مَا قَالَ، وَأَحْيَانًا يَأْتِينِي، يَتَمَثَّلُ لِي الْمَلَكُ رَجُلًا، فَيُكَلِّمُنِي، فَأَعِي مَا يَقُولُ»

قَالَتْ عَائِشَةُ: وَلَقَدْ رَأَيْتُهُ يَنْزِلُ عَلَيْهِ فِي الْيَوْمِ الشَّدِيدِ الْبَرْدِ فَيَفْصِمُ عَنْهُ وَإِنَّ جَبِينَهُ لَيَتَفَصَّدُ عَرَقًا


Musnad-Ahmad-25303

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25303. ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் வஹீ வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும்.

மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று அல்லது வானவரின் தோற்றத்தில் எனக்குக் காட்சியளித்து, எனக்கு அறிவிப்பார்; அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ يَا نَبِيَّ اللَّهِ؟ قَالَ: ” يَأْتِينِي أَحْيَانًا لَهُ صَلْصَلَةٌ كَصَلْصَلَةِ الْجَرَسِ، فَيَنْفَصِمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ، وَذَلِكَ أَشَدُّهُ عَلَيَّ، وَيَأْتِينِي أَحْيَانًا فِي صُورَةِ الرَّجُلِ – أَوْ قَالَ: الْمَلَكِ – فَيُخْبِرُنِي، فَأَعِي مَا يَقُولُ


Musnad-Ahmad-25253

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

25253. ஹதீஸ் எண்-25252 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில் ஆயிஷா (ரலி) அவர்கள் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வந்துள்ளது.



Musnad-Ahmad-25252

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25252. ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


أَنَّ الْحَارِثَ بْنَ هِشَامٍ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ؟ قَالَ: «أَحْيَانًا يَأْتِينِي فِي مِثْلِ صَلْصَلَةِ الْجَرَسِ، وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ، ثُمَّ يُفْصَمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ، وَأَحْيَانًا يَأْتِينِي مَلَكٌ فِي مِثْلِ صُورَةِ الرَّجُلِ، فَأَعِي مَا يَقُولُ»


Next Page » « Previous Page