Category: திர்மிதீ

Tirmidhi-1647

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1647. செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்பதிப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும்.

எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக(ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்கவிரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

இந்த ஹதீஸை மாலிக் பின் அனஸ் (ரஹ்), ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) போன்ற பல அறிஞர்கள் யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர். இந்த ஹதீஸ் யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ (ரஹ்) அவர்களின் வழியாக மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.

இந்த ஹதீஸ், பலவற்றுக்கும் நாம் ஆதாரமாக காட்டுவதற்கு ஏற்றது என்று அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


«إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»


Tirmidhi-3437

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(பயணத்தில்) ஓரிடத்தில் தங்கும்போது கூறவேண்டியது பற்றி வந்துள்ளவை.

3437. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது. “அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக” என்று கூறினால். அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்வரை அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.

அறிவிப்பவர்: கவ்லா பின்த் ஹகீம் (ரலி)


مَنْ نَزَلَ مَنْزِلًا ثُمَّ قَالَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، لَمْ يَضُرَّهُ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْ مَنْزِلِهِ ذَلِكَ


Tirmidhi-3528

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

3528. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிடும் போது, ” அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வ இகாபிஹீ, வ ஷர்ரி இபாதிஹீ, வமின் ஹமஸாத்திஷ் ஷையாத்தீனி, வ அய் யஹ்ளுருன்’ என்று கூறினால் அவருக்கு எந்த இடையூறும் ஏற்படாது.

(பொருள் : அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் ஊசலாட்டத்தை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

தன் பிள்ளைகளில் பருவமடைந்தவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் இவைகளை சொல்லிக் கொடுப்பார்கள். பருவமடையாதவர்களுக்கு அதை எழுதி அவர்களின் கழுத்தில் கட்டிவிடுவார்கள்…


إِذَا فَزِعَ أَحَدُكُمْ فِي النَّوْمِ فَلْيَقُلْ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ “. فَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، يُلَقِّنُهَا مَنْ بَلَغَ مِنْ وَلَدِهِ، وَمَنْ لَمْ يَبْلُغْ مِنْهُمْ كَتَبَهَا فِي صَكٍّ ثُمَّ عَلَّقَهَا فِي عُنُقِهِ.


Tirmidhi-1004

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1004. குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித்திற்கு வேதனை கொடுக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்.

(இதை ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் அபூஅப்துர்ரஹ்மான் (இப்னு உமர்-ரலி) அவர்களுக்கு அருள்புரிவானாக! அவர் பொய்யுரைக்கவில்லை; என்றாலும் அவர் தவறாக விளங்கிக்கொண்டார்;

யூதராக மரணித்த ஒருவர் விசயத்தில் தான், இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால்) வேதனை செய்யப்படுகிறார். அவரின் குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்’ என்று கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


«المَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»، فَقَالَتْ عَائِشَةُ: يَرْحَمُهُ اللَّهُ، لَمْ يَكْذِبْ وَلَكِنَّهُ وَهِمَ، إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ مَاتَ يَهُودِيًّا: «إِنَّ المَيِّتَ لَيُعَذَّبُ، وَإِنَّ أَهْلَهُ لَيَبْكُونَ عَلَيْهِ»


Tirmidhi-1006

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1006. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ், அபூஅப்துர் ரஹ்மானை மன்னிப்பானாக! அவர் நிச்சயமாக பொய்யுரைக்கவில்லை; எனினும், அவர் மறந்திருக்கலாம். அல்லது தவறாக விளங்கியிருக்கலாம்; (நடந்தது இதுதான்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதப் பெண்ணின் பிரேதத்தைக் கடந்துசென்றார்கள். அவளுக்காகச் சிலர் அழுதுகொண்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இவர்கள் இவளுக்காக அழுகின்றனர். இவளோ தனது சவக்குழியில் வேதனை செய்யப்படுகிறாள்” என்றுதான் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.


أَنَّهَا سَمِعْتُ عَائِشَةَ وَذُكِرَ لَهَا أَنَّ ابْنَ عُمَرَ، يَقُولُ: إِنَّ المَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الحَيِّ عَلَيْهِ، فَقَالَتْ عَائِشَةُ: غَفَرَ اللَّهُ لِأَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَمَا إِنَّهُ لَمْ يَكْذِبْ، وَلَكِنَّهُ نَسِيَ أَوْ أَخْطَأَ، إِنَّمَا مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى يَهُودِيَّةٍ يُبْكَى عَلَيْهَا، فَقَالَ: «إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهَا، وَإِنَّهَا لَتُعَذَّبُ فِي قَبْرِهَا»


Tirmidhi-1420

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1420. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனது செல்வத்தை நியாமின்றி அடைய முயற்சிக்கும் ஒருவருடன் சண்டையிட்டவர் அதில் கொல்லப்பட்டால் அவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ أُرِيدَ مَالُهُ بِغَيْرِ حَقٍّ فَقَاتَلَ فَقُتِلَ فَهُوَ شَهِيدٌ»


Tirmidhi-1419

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1419. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»


Tirmidhi-1418

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்பட்டவர் ஷஹீதாவார் என்று வந்துள்ளவை.

1418.  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)

….


«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»

وَزَادَ حَاتِمُ بْنُ سِيَاهٍ المَرْوَزِيُّ فِي هَذَا الحَدِيثِ، قَالَ مَعْمَرٌ بَلَغَنِي، عَنِ الزُّهْرِيِّ، وَلَمْ أَسْمَعْ مِنْهُ زَادَ فِي هَذَا الحَدِيثِ «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»،

وَهَكَذَا رَوَى شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ هَذَا الحَدِيثَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرِو بْنِ سَهْلٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

وَرَوَى سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَذْكُرْ فِيهِ سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرِو بْنِ سَهْلٍ،


Tirmidhi-216

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

216. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ صَلَاةَ الرَّجُلِ فِي الجَمَاعَةِ تَزِيدُ عَلَى صَلَاتِهِ وَحْدَهُ بِخَمْسَةٍ وَعِشْرِينَ جُزْءًا»


Tirmidhi-3841

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

3841. நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை, அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர. (அவர்களிடம் சில நபிமொழிகள் இருந்தன). காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துள்ளேன்) எழுதி வைத்ததில்லை என அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


«لَيْسَ أَحَدٌ أَكْثَرَ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي إِلَّا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، فَإِنَّهُ كَانَ يَكْتُبُ وَكُنْتُ لَا أَكْتُبُ»


Next Page » « Previous Page