Category: திர்மிதீ

Tirmidhi-2834

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2834. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«إِنَّ أَحَبَّ الأَسْمَاءِ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ»


Tirmidhi-2833

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

நல்ல பெயர்கள்.

2833. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«أَحَبُّ الأَسْمَاءِ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ»


Tirmidhi-2354

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2354.


«يَدْخُلُ فُقَرَاءُ المُسْلِمِينَ الجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِنِصْفِ يَوْمٍ وَهُوَ خَمْسُمِائَةِ عَامٍ»


Tirmidhi-1213

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1213. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு கடினமான சிவப்புநிற இரு ஆடைகள் இருந்தது. அவர்கள் அமர்ந்து (பேசும் போது) வியர்வை வெளிப்படுவதினால் அந்த இரு ஆடைகளும் அவர்களுக்கு கஷ்டத்தை அளித்தன. ஷாம் நாட்டிலிருந்து ஒரு யூத நபருக்கு துணிகள் வந்தது. அப்போது நான் (நபியவர்களிடம்) தாங்கள் அந்த யூதரிடம் ஆள் அனுப்பி குறுகிய காலத்தில் (பணத்தை ஒப்படைப்பதாகக் கூறி) இரண்டு துணிகளை வாங்கிக்கொள்ளலாமே என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்களும் அவனிடம் ஆள் அனுப்பி (வாங்கி வரச் சொன்னார்கள்). அதற்கு அவன் முஹம்மத் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியும். என்னுடைய பொருளை பறித்துச் செல்லத்தான் அவர் நாடுகிறார் என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் அவர்களை விட அதிகம் அல்லாஹ்விற்கு அஞ்சுபவன் என்றும் அதிகம் அமானிதத்தை ஒப்படைப்பவன் என்றும் அவர் அறிந்துகொண்டு பொய் சொல்கிறார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


كَانَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَانِ قِطْرِيَّانِ غَلِيظَانِ، فَكَانَ إِذَا قَعَدَ فَعَرِقَ، ثَقُلَا عَلَيْهِ، فَقَدِمَ بَزٌّ مِنَ الشَّامِ لِفُلَانٍ اليَهُودِيِّ، فَقُلْتُ: لَوْ بَعَثْتَ إِلَيْهِ، فَاشْتَرَيْتَ مِنْهُ ثَوْبَيْنِ إِلَى المَيْسَرَةِ، فَأَرْسَلَ إِلَيْهِ، فَقَالَ: قَدْ عَلِمْتُ مَا يُرِيدُ، إِنَّمَا يُرِيدُ أَنْ يَذْهَبَ بِمَالِي أَوْ بِدَرَاهِمِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَبَ، قَدْ عَلِمَ أَنِّي مِنْ أَتْقَاهُمْ لِلَّهِ، وَآدَاهُمْ لِلأَمَانَةِ»


Tirmidhi-532

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

பெருநாள் தொழுகைக்கு பாங்கும் இகாமத்தும் இல்லை.

532. ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரு பெருநாள் தொழுகைகளை ஒரு முறை, இரு முறை அல்ல (பல முறை) தொழுதிருக்கிறேன்; (அவற்றில்) பாங்கும் இகாமத்தும் இருந்ததில்லை.


«صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ العِيدَيْنِ غَيْرَ مَرَّةٍ وَلَا مَرَّتَيْنِ بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ»


Tirmidhi-3585

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3585. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனைகளிலேயே மிகவும் சிறந்தது அரஃபா நாளில் செய்யும் பிரார்த்தனை ஆகும்.

நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது “லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” என்ற திக்ராகும்.

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது அரிதான செய்தியாகும். இதில் வரும் ஹம்மாத் பின் அபூஹுமைத் என்பவரின் (பிரபல்யமான) பெயர், முஹம்மது பின் அபூஹுமைத் என்பதாகும். இவரின் புனைப்பெயர் அபூஇப்ராஹீம் அல்அன்ஸாரீ, அல்மதனீ என்பதாகும். இவர் ஹதீஸ்கலை அறிஞர்களின் பார்வையில் பலமானவர் அல்ல.


خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ


Tirmidhi-542

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

நோன்புப் பெருநாளன்று தொழுகைக்குப் புறப்படுவதற்குமுன் உணவு உண்பது தொடர்பாக வந்துள்ளவை.

542. புரைதா பின் அல்ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று உண்ணாமல் (தொழுகைக்குச்) செல்லமாட்டார்கள்.

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழாமல் உணவு உண்ணமாட்டார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அலீ (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட
ஹதீஸ், ‘கரீப்’ எனும் வகையைச் சேர்ந்ததாகும்.

இந்த ஹதீஸின் (மூன்றாவது அறிவிப்பாளரான) ஸவாப் பின் உத்பா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸைத் தவிர வேறு ஹதீஸ் எதையும் அறிவித்திருப்பதாக நான் அறியவில்லை என புகாரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நோன்புப் பெருநாளன்று எதையேனும் உட்கொண்ட பிறகே தொழுகைக்குச் செல்ல வேண்டும் என்று அறிஞர்களில் ஒரு குழுவினர் விரும்புகின்றனர். அதே நேரத்தில் (நோன்புப் பெருநாளன்று) பேரீச்சம் பழத்தை உண்பதும், ஹஜ்ஜுப் பெருநாளன்று தொழுதுவிட்டு திரும்பி வரும்வரை எதையும் உண்ணாமலிருப்பதும் விரும்பத்தக்கவை ஆகும் என்றும் கருதுகின்றனர்.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَخْرُجُ يَوْمَ الفِطْرِ حَتَّى يَطْعَمَ،

وَلَا يَطْعَمُ يَوْمَ الأَضْحَى حَتَّى يُصَلِّيَ»


Tirmidhi-543

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

543. சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்படமாட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُفْطِرُ عَلَى تَمَرَاتٍ يَوْمَ الفِطْرِ قَبْلَ أَنْ يَخْرُجَ إِلَى المُصَلَّى»


Tirmidhi-3619

ஹதீஸின் தரம்: Pending

3619.

”நானும் நபி (ஸல்) அவர்களும் யானை ஆண்டில் பிறந்தோம்” என்று கைஸ் பின் மக்ரமா (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்…


«وُلِدْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفِيلِ»، قَالَ: وَسَأَلَ عُثْمَانُ بْنُ عَفَّانَ قُبَاثَ بْنَ أَشْيَمَ أَخَا بَنِي يَعْمَرَ بْنِ لَيْثٍ: أَنْتَ أَكْبَرُ أَمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْبَرُ مِنِّي وَأَنَا أَقْدَمُ مِنْهُ فِي المِيلَادِ»، قَالَ: «وَرَأَيْتُ خَذْقَ الْفِيلِ أَخْضَرَ مُحِيلًا».


Tirmidhi-2925

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2925. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுடைய காலத்தில் (மக்களிடத்தில்) தன்னை (நபி என்று) எடுத்துரைத்தார்கள். தன்னுடைய கூட்டத்தாரிடம், ”என்னை அழைத்துச் செல்பவர் யாரும் (உங்களில்) இல்லையா? குரைஷிகள் எனது இறைவனின் கூற்றை எடுத்துரைக்க விடாமல் என்னைத் தடுத்து விட்டார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ يَعْرِضُ نَفْسَهُ بِالْمَوْقِفِ، فَقَالَ: «أَلَا رَجُلٌ يَحْمِلْنِي إِلَى قَوْمِهِ؟ فَإِنَّ قُرَيْشًا قَدْ مَنَعُونِي أَنْ أُبَلِّغَ كَلَامَ رَبِّي»


Next Page » « Previous Page