Category: திர்மிதீ

Tirmidhi-2572

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2572. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது.

ஒருவர், (அல்லாஹ்விடம்) மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்தியை, (அபுல்அஹ்வஸ்-ஸல்லாம் பின் ஸுலைம் அவர்களைப் போன்றே) அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அவரின் மகன் யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக் என்பவரும் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.

இந்த செய்தி அபூஇஸ்ஹாக் அவர்களின் வழியாக நபித்தோழரின் சொல்லாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


مَنْ سَأَلَ اللَّهَ الجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ الجَنَّةُ: اللَّهُمَّ أَدْخِلْهُ الجَنَّةَ، وَمَنْ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ النَّارُ: اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ


Tirmidhi-1109

ஹதீஸின் தரம்: Pending

1109. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தந்தையில்லாத) கன்னிப் பெண்ணிடம் (அவளை மணமுடித்துக் கொடுக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும். அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்); அவள் மறுத்துவிட்டால் (அவளை மணமுடித்துக் கொடுக்க) அனுமதி இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«اليَتِيمَةُ تُسْتَأْمَرُ فِي نَفْسِهَا، فَإِنْ صَمَتَتْ فَهُوَ إِذْنُهَا، وَإِنْ أَبَتْ فَلَا جَوَازَ عَلَيْهَا»،

يَعْنِي: إِذَا أَدْرَكَتْ فَرَدَّتْ.


Tirmidhi-1107

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1107. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கன்னிகழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்; கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்; கன்னிப் பெண் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تُنْكَحُ الثَّيِّبُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلَا تُنْكَحُ البِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ، وَإِذْنُهَا الصُّمُوتُ»


Tirmidhi-3513

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3513. அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ القَدْرِ مَا أَقُولُ فِيهَا؟ قَالَ: ” قُولِي: اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي


Tirmidhi-2023

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2023. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது;

(தமக்கிடையே சண்டையிட்டு) பேசிக்கொள்ளாத இருவரைத் தவிர! “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டு வையுங்கள் ” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


تُفَتَّحُ أَبْوَابُ الجَنَّةِ يَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ فَيُغْفَرُ فِيهِمَا لِمَنْ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا إِلَّا المُهْتَجِرَيْنِ، يُقَالَ: رُدُّوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا


Tirmidhi-745

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 44

(வாரம்வாரம்) திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைப்பது பற்றி வந்துள்ளவை.

745. நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள், ஹஃப்ஸா (ரலி), அபூகதாதா (ரலி), அபூஹுரைரா (ரலி), உஸாமா பின் ஸைத் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

ஆயிஷா (ரலி) வழியாக வந்துள்ள இந்த அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ»


Tirmidhi-747

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

747. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது செயல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தப் பாட பொருளில் அபூஹுரைரா (ரலி) வழியாக வரும் இந்த செய்தி ஹஸன் தரத்தில் உள்ள, அரிதான செய்தியாகும்.


«تُعْرَضُ الأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ، فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ»


Tirmidhi-134

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

மாதவிடாய் உள்ள பெண் பள்ளிவாசலில் உள்ள பொருளை எடுப்பது.

134. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு, (அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு! என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَاوِلِينِي الخُمْرَةَ مِنَ المَسْجِدِ»، قَالَتْ: قُلْتُ : إِنِّي حَائِضٌ، قَالَ: «إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ»،


Tirmidhi-2977

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2977. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; பருகமாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுக்கி) விடுவார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்து) கேட்கப்பட்டது. அப்போது, (நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்… என்று தொடங்கும் (2:222 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடவும், பருகவும், வீட்டில் அவர்களுடன் சேர்ந்திருக்கவும் கட்டளையிட்டார்கள். தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள் என்றும் கட்டளையிட்டார்கள்.

இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம் என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன? என்று கேட்டனர்.

(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின்

كَانَتِ اليَهُودُ إِذَا حَاضَتْ امْرَأَةٌ مِنْهُمْ لَمْ يُؤَاكِلُوهَا وَلَمْ يُشَارِبُوهَا وَلَمْ يُجَامِعُوهَا فِي البُيُوتِ، فَسُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {وَيَسْأَلُونَكَ عَنِ المَحِيضِ قُلْ هُوَ أَذًى} [البقرة: 222] «فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُؤَاكِلُوهُنَّ وَيُشَارِبُوهُنَّ وَأَنْ يَكُونُوا مَعَهُنَّ فِي البُيُوتِ، وَأَنْ يَفْعَلُوا كُلَّ شَيْءٍ مَا خَلَا النِّكَاحَ».

فَقَالَتِ اليَهُودُ: مَا يُرِيدُ أَنْ يَدَعَ شَيْئًا مِنْ أَمْرِنَا إِلَّا خَالَفَنَا فِيهِ، قَالَ: فَجَاءَ عَبَّادُ بْنُ بِشْرٍ وَأُسَيْدُ بْنُ حُضَيْرٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَاهُ بِذَلِكَ، وَقَالَا: يَا رَسُولَ اللَّهِ أَفَلَا نَنْكِحُهُنَّ فِي المَحِيضِ، فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ قَدْ غَضِبَ عَلَيْهِمَا، فَقَامَا فَاسْتَقْبَلَتْهُمَا هَدِيَّةٌ مِنْ لَبَنٍ، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَثَرِهِمَا فَسَقَاهُمَا، فَعَلِمَا أَنَّهُ لَمْ يَغْضَبْ عَلَيْهِمَا


Tirmidhi-758

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

758. துல்ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களில் நிறைவேற்றப்படும் வழிபாடுகள் மற்ற நாட்களில் நிறைவேற்றப்படும் வழிபாடுகளைவிட அல்லாஹ் வுக்கு மிகவும் விருப்பமானவை ஆகும். அவற்றில் நோற்கப்படும் ஒவ்வொரு நாளின் நோன்பும் ஓராண்டு நோன்புக்கு நிகரானதாகும். அவற்றில் ஒவ்வோர் இரவில் நின்று தொழுவதும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று தொழுவதற்கு நிகரானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ عَشْرِ ذِي الحِجَّةِ، يَعْدِلُ صِيَامُ كُلِّ يَوْمٍ مِنْهَا بِصِيَامِ سَنَةٍ، وَقِيَامُ كُلِّ لَيْلَةٍ مِنْهَا بِقِيَامِ لَيْلَةِ القَدْرِ»


Next Page » « Previous Page