Category: திர்மிதீ

Tirmidhi-1546

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1546. என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதை அவரின் சார்பாக நீர் நிறைவேற்றுவீராக! என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ اسْتَفْتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ تُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْضِ عَنْهَا»


Tirmidhi-716

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

716.


جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُخْتِي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ، قَالَ: «أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُخْتِكِ دَيْنٌ أَكُنْتِ تَقْضِينَهُ»، قَالَتْ: نَعَمْ، قَالَ: «فَحَقُّ اللَّهِ أَحَقُّ»


Tirmidhi-1024

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்கு செய்யும் பிரார்த்தனை.

1024. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அதில் பின்வரும் துஆவை ஓதினார்கள்.

அல்லாஹும் மஃக்ஃபிர் லி ஹய்யினா வ மய்யி(த்)தினா வ ஷாஹிதினா வ ஃகாயிபினா வ ஸஃகீரினா வ கபீரினா வ தகரினா வ உன்ஸானா. அல்லாஹும்ம மன் அஹ்யை(த்)தஹூ மின்னா ஃப அஹ்யிஹீ அலல் இஸ்லாம். வமன் தவஃப்பை(த்)தஹூ மின்னா ஃப தவஃப்பஹு அலல் ஈமான்.

பொருள்: இறைவா! எங்களில் உயிருடனிருப்பவர்களையும், மரணித்தவர்களையும், இங்கே வந்திருப்போரையும், வராதவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்து விடுவாயாக! இறைவா எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் இறந்தவர்களை ஈமானுடன் இறக்கச் செய்வாயாக!

அறிவிப்பவர்: அபூஇப்ராஹீம் என்பவரின் தந்தை (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஆயிஷா (ரலி), அபூகதாதா (ரலி), அவ்ஃப் பின் மாலிக் (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட அபூஇப்ராஹீம் என்பவரின் தந்தை (ரலி) அவர்களின் செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்தச்

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى عَلَى الجَنَازَةِ، قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا» قَالَ يَحْيَى، وَحَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ، وَزَادَ فِيهِ: «اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ»


Tirmidhi-1982

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1982.

இறந்தவரை ஏசி உயிருடன் உள்ளவர்களை வேதனைப்படுத்தாதீர்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)


«لَا تَسُبُّوا الأَمْوَاتَ فَتُؤْذُوا الأَحْيَاءَ»


Tirmidhi-1046

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1046. நபி (ஸல்) அவர்கள், இறந்தவரின் உடல் குழிக்குள் வைக்கப்படும் போது ‘பிஸ்மில்லாஹி வபில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்’ எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

அபூகாலிதின் வேறு அறிவிப்பில் இறந்தவரின் உடல் உட்குழிக்குள் வைக்கப்படும் போது என்றும், மேற்கண்ட துஆவும் கூறப்பட்டுள்ளது.

அபூகாலிதின் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வபில்லாஹி வஅலா சுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ என்றும் இடம்பெற்றுள்ளது.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أُدْخِلَ المَيِّتُ القَبْرَ، وَقَالَ أَبُو خَالِدٍ مَرَّةً: إِذَا وُضِعَ المَيِّتُ فِي لَحْدِهِ، قَالَ مَرَّةً: «بِسْمِ اللَّهِ وَبِاللَّهِ، وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ»، وَقَالَ مَرَّةً: «بِسْمِ اللَّهِ وَبِاللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Tirmidhi-98

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

98.


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى الخُفَّيْنِ عَلَى ظَاهِرِهِمَا»


Tirmidhi-1015

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

ஜனாஸாவை (த்தோளில் சுமந்த பின்) விரைந்துக் கொண்டு செல்லுதல்.

1015. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.’

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«أَسْرِعُوا بِالجَنَازَةِ، فَإِنْ يَكُنْ خَيْرًا تُقَدِّمُوهَا إِلَيْهِ، وَإِنْ يَكُنْ شَرًّا تَضَعُوهُ عَنْ رِقَابِكُمْ»


Tirmidhi-1027

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1027. தல்ஹா பின் அப்தில்லாஹ் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு ஜனாஸா தொழுகை நடத்தும்போது ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை (சத்தமாக) ஓதினார்கள். அவர்களிடம் நான் இது பற்றிக் கேட்டபோது, இது நபிவழியில் உள்ளதாகும்’ என்றோ அல்லது ‘நபிவழியை நிறைவாக்குவதாகும்’ என்றோ கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

நபித்தோழர்கள் உள்ளிட்ட அறிஞர்களில் சிலர் இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டும் என்கிறார்கள். ஜனாஸா தொழுகையின் ஆரம்ப தக்பீரில் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை ஓத வேண்டும் என்ற கருத்தை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதுதான் ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரின் கூற்றாகும்.

அறிஞர்களில் வேறுசிலர், “ஜனாஸா தொழுகையில் இறைவனைப் புகழ்தல், நபி (ஸல்) அவர்களுக்காக ‘ஸலவாத்’ ஓதுதல், இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல் ஆகியவைதான் உள்ளன; அதில் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம் ஓதலாகாது” என்கின்றனர். இதுவே ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) உள்ளிட்ட கூஃபாவாசிகளின் கூற்றாகும்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான தல்ஹா பின் அப்தில்லாஹ் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அப்துர்ரஹ்மான்

أَنَّ ابْنَ عَبَّاسٍ، صَلَّى عَلَى جَنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الكِتَابِ، فَقُلْتُ لَهُ، فَقَالَ: «إِنَّهُ مِنَ السُّنَّةِ، أَوْ مِنْ تَمَامِ السُّنَّةِ»


Tirmidhi-1026

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம் :

ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுதல்.

1026. நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ عَلَى الجَنَازَةِ بِفَاتِحَةِ الكِتَابِ


Tirmidhi-1012

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் :

வாகனத்தில் ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்வது வெறுப்பிற்குரியது.

1012. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது, அவர்கள் சிலர் வாகனத்தில் வருவதைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் வானவர்கள் நடந்து வரும் போது நீங்கள் வாகனத்தின் மேல் வருகிறீர்களே! இதற்கு வெட்கப்படமாட்டீர்களா? என்று அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَى نَاسًا رُكْبَانًا، فَقَالَ: «أَلَا تَسْتَحْيُونَ إِنَّ مَلَائِكَةَ اللَّهِ عَلَى أَقْدَامِهِمْ وَأَنْتُمْ عَلَى ظُهُورِ الدَّوَابِّ»


Next Page » « Previous Page