Category: திர்மிதீ

Tirmidhi-986

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

986. நான் மரணித்து விட்டால் என்னைப் பற்றி அறிவிப்புச் செய்யாதீர்கள்! ஏனெனில் மரண அறிவிப்புச் செய்வதில் இது சேருமோ என்று நான் பயப்படுகிறேன். மரண அறிவிப்புச் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியேற்றுள்ளேன் என்று ஹுதைஃபா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : பிலால் பின் யஹ்யா


«إِذَا مِتُّ فَلَا تُؤْذِنُوا بِي، إِنِّي أَخَافُ أَنْ يَكُونَ نَعْيًا، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنِ النَّعْيِ»


Tirmidhi-985

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

985. ஹதீஸ் எண்-984 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் கூற்றாக வந்துள்ளது.

 

……….


نَحْوَهُ،


Tirmidhi-2916

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2916.


«عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى القَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنَ المَسْجِدِ، وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي، فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنَ القُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا»


Tirmidhi-984

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

984. மரண அறிவிப்புச் செய்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். மரண அறிவிப்புச் செய்வது அறியாமைக் கால வழக்கமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)


«إِيَّاكُمْ وَالنَّعْيَ، فَإِنَّ النَّعْيَ مِنْ عَمَلِ الجَاهِلِيَّةِ»


Tirmidhi-1074

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1074. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணித்தால்  அவரை, கப்ரின் சோதனையிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ يَوْمَ الجُمُعَةِ أَوْ لَيْلَةَ الجُمُعَةِ إِلَّا وَقَاهُ اللَّهُ فِتْنَةَ القَبْرِ»


Tirmidhi-1931

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1931. எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவருடைய முகத்தை, அல்லாஹ்  மறுமையில் நரக நெருப்பிலிருந்து காக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)


«مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ رَدَّ اللَّهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَوْمَ القِيَامَةِ»


Tirmidhi-596

ஹதீஸின் தரம்: More Info

596. ஹதீஸ் எண்-594 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் ஹிஷாமிடமிருந்து ஸுஃப்யான் பின் உயைனா அறிவித்துள்ளார்.

இதில் உர்வா (ரஹ்), நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்.

 


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ، فَذَكَرَ نَحْوَهُ،

وقَالَ سُفْيَانُ: «قَوْلُهُ بِبِنَاءِ المَسَاجِدِ فِي الدُّورِ يَعْنِي القَبَائِلَ»


Tirmidhi-595

ஹதீஸின் தரம்: More Info

595. ஹதீஸ் எண்-594 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் ஹிஷாமிடமிருந்து அப்தாவும் , வகீஉவும்  அறிவித்துள்ளனர்.

இதில் உர்வா (ரஹ்), நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்.

 

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

முதலில் உள்ள ஹதீஸ்-எண்-594 விட இந்த செய்தி சரியானது.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ، فَذَكَرَ نَحْوَهُ،


Tirmidhi-594

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

594. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ المَسَاجِدِ فِي الدُّورِ، وَأَنْ تُنَظَّفَ، وَتُطَيَّبَ»


Tirmidhi-3786

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3786. …மக்களே! நான் உங்களிடம் விட்டுச் செல்லும் இரண்டை நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாமல் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனாகும். மற்றொன்று எனது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினராகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ يَوْمَ عَرَفَةَ وَهُوَ عَلَى نَاقَتِهِ القَصْوَاءِ يَخْطُبُ، فَسَمِعْتُهُ يَقُولُ: ” يَا أَيُّهَا النَّاسُ إِنِّي تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا: كِتَابَ اللَّهِ، وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي


Next Page » « Previous Page