Category: திர்மிதீ

Tirmidhi-3557

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3557. ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்வதை கண்ட நபி (ஸல்) அவர்கள் ஒரு விரல் ஒரு விரல் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன் ஃகரீப் என்ற தரத்தில் உள்ளதாகும். (தொழுகையின் அத்தஹிய்யாத்) துஆவில் “அஷ்ஹது” என்று கூறும்போது ஒரு விரலால் மட்டுமே இஷாரா செய்ய வேண்டும் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்தாகும்.


أَنَّ رَجُلًا كَانَ يَدْعُو بِإِصْبَعَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحِّدْ أَحِّدْ»


Tirmidhi-597

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

597. இரவுத் தொழுகை, பகல் தொழுகை இரண்டிரண்டாகத் தொழ வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«صَلَاةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى»


Tirmidhi-429

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

429. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மூஃமின்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை (இரண்டிரண்டாக) பிரிப்பார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)


«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَبْلَ العَصْرِ أَرْبَعَ رَكَعَاتٍ يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ عَلَى المَلَائِكَةِ المُقَرَّبِينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُسْلِمِينَ وَالمُؤْمِنِينَ»


Tirmidhi-435

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

435. மஃக்ரிப் தொழுகைக்குப் பின் ஒருவர் தீயவற்றைப் பேசாமல் ஆறு ரக்அத்கள் தொழுதால் அது பன்னிரண்டு ஆண்டுகள் வணக்கத்துக்கு நிகராக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

“மஃக்ரிப் , இஷா தொழுகைக்கு இடையில் ஒருவர் இருபது ரக்அத் தொழுதால் அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ளது. (இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி. பார்க்க: இப்னு மாஜா-1373 )

அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக வரும் மேற்கண்ட செய்தி உமர் பின் அபூ கஸ்அம் ( عمر بن عبد الله بن أبي خثعم) அவரிடமிருந்து ஸைத் பின் ஹுபாப் வழியாகவே வருகிறது. இமாம் புகாரி அவர்கள்  உமர் பின் அபூ கஸ்அம் பற்றி  இவர் நிராகரிக்கப்பட்டவர், மிக பலவீனமானவர் என்று கூற கேட்டுள்ளேன்.


«مَنْ صَلَّى بَعْدَ المَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ لَمْ يَتَكَلَّمْ فِيمَا بَيْنَهُنَّ بِسُوءٍ عُدِلْنَ لَهُ بِعِبَادَةِ ثِنْتَيْ عَشْرَةَ سَنَةً»


Tirmidhi-1674

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1674. வாகனத்தில் தனியாகப் பயணம் செய்யும் ஒரு வாகனப் பயணி ஷைத்தான் ஆவார். இரு வாகனப் பயணிகள் இரு ஷைத்தான்களாவர். மூன்று பயணிகளே பயணிகள் ஆவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ரு பின் ஷுஐப் (ரலி)


«الرَّاكِبُ شَيْطَانٌ، وَالرَّاكِبَانِ شَيْطَانَانِ، وَالثَّلَاثَةُ رَكْبٌ»


Tirmidhi-730

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

730. ஃபஜ்ருக்கு முன்பாக இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)


«مَنْ لَمْ يُجْمِعِ الصِّيَامَ قَبْلَ الفَجْرِ، فَلَا صِيَامَ لَهُ»


Tirmidhi-998

ஹதீஸின் தரம்: Pending

998. ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் மரணசெய்தி வந்தபோது, ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)


لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْنَعُوا لِأَهْلِ جَعْفَرٍ طَعَامًا، فَإِنَّهُ قَدْ جَاءَهُمْ مَا يَشْغَلُهُمْ»


Tirmidhi-109

ஹதீஸின் தரம்: More Info

109. பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«إِذَا جَاوَزَ الخِتَانُ الخِتَانَ وَجَبَ الغُسْلُ»


Tirmidhi-220

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

பள்ளியில் (முதல்) ஜமாஅத் தொழுகை முடிவடைந்த நிலையில் மீண்டும் ஜமாஅத் நடத்துவது.

220. நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?” என்று கேட்டார்கள். ஒரு மனிதர் எழுந்து சென்று, வந்த மனிதருடன் சேர்ந்து தொழுதார்.

அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி)

…..


جَاءَ رَجُلٌ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَيُّكُمْ يَتَّجِرُ عَلَى هَذَا؟»، فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ،


Tirmidhi-616

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

616. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுது கொள்ளுங்கள். உங்கள் மாதம் (ரமலானில்) நோன்பு வையுங்கள். உங்கள் செல்வங்களுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றுங்கள். உங்களில் அதிகாரம் படைத்தவர்களுக்குக் கட்டுப்படுங்கள். உங்கள் இறைவனுடைய சொர்க்கத்தில் நுழைவீர்கள்…….

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي حَجَّةِ الوَدَاعِ فَقَالَ: «اتَّقُوا اللَّهَ رَبَّكُمْ، وَصَلُّوا خَمْسَكُمْ، وَصُومُوا شَهْرَكُمْ، وَأَدُّوا زَكَاةَ أَمْوَالِكُمْ، وَأَطِيعُوا ذَا أَمْرِكُمْ تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ»،

قَالَ: فَقُلْتُ لِأَبِي أُمَامَةَ: مُنْذُ كَمْ سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا الحَدِيثِ؟ قَالَ: «سَمِعْتُهُ وَأَنَا ابْنُ ثَلَاثِينَ سَنَةً»


Next Page » « Previous Page