Category: திர்மிதீ

Tirmidhi-1823

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1823. நபி (ஸல்) அவர்கள் வெட்டுக்கிளிகளுக்கு எதிராக பிராத்திக்கும் போது

“யா அல்லாஹ்! அவற்றில் பெரியவற்றை அழிப்பாயாக! சிறியவற்றை கொன்றுவிடுவாயாக! அவற்றின் முட்டைகளை அழித்து அவற்றின் சந்ததிப் பெருக்கத்தை துண்டிப்பாயாக! எங்கள் வாழ்வாதாரங்கள் மற்றும் உணவுகளை விட்டும் அவற்றின் வாய்களைத் தடுப்பாயாக! நீயே பிரார்த்தனைகளைச் செவியேற்பவன்” என்று கூறுவார்கள்.

அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் படைகளின் ஒரு படைக்கு எதிராக அவற்றின் சந்ததிப் பெருக்கத்தை துண்டிக்குமாறு எப்படி பிரார்த்திக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “கடலில் மீனுடைய தும்மலே வெட்டுக்கிளிகளாகும். (அதாவது மீன் தும்முவதால் வெட்டுக் கிளிகள் உருவாகிறது) என்று கூறினார்கள்.

மீன் தும்முவதைப் பார்த்த ஒருவர் (அதாவது மூஸா இப்னு முஹம்மத் இப்னு இப்ராஹீம் என்பவர்) இ(ந்த ஹதீ)தை தனக்கு அறிவித்ததாக ஸியாத் என்பார் கூறியதாக ஹாஷிம் என்பார் கூறியுள்ளார்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا دَعَا عَلَى الْجَرَادِ، قَالَ: اللَّهُمَّ أَهْلِكِ الْجَرَادَ، اقْتُلْ كِبَارَهُ، وَأَهْلِكْ صِغَارَهُ، وَأَفْسِدْ بَيْضَهُ، وَاقْطَعْ دَابِرَهُ، وَخُذْ بِأَفْوَاهِهِمْ عَنْ مَعَاشِنَا وَأَرْزَاقِنَا إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ، قَالَ: فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ كَيْفَ تَدْعُو عَلَى جُنْدٍ مِنْ أَجْنَادِ اللهِ بِقَطْعِ دَابِرِهِ؟ قَالَ: فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: إِنَّهَا نَثْرَةُ حُوتٍ فِي الْبَحْرِ.


Tirmidhi-3862

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3862. என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கி விடாதீர்கள். யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்ததன் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்ததன் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார்.

அவர்களுக்கு யார் தொல்லை தருகிறாரோ அவர் எனக்கே தொல்லை தருகிறார். எனக்குத் தொல்லை தந்தவர் அல்லாஹ்வுக்கே தொல்லை தந்தவர் ஆவார். அல்லாஹ்வுக்குத் தொல்லை தந்தவரை அல்லாஹ் தண்டிக்கக் கூடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல்(ரலி)


اللَّهَ اللَّهَ فِي أَصْحَابِي، لَا تَتَّخِذُوهُمْ غَرَضًا بَعْدِي، فَمَنْ أَحَبَّهُمْ فَبِحُبِّي أَحَبَّهُمْ، وَمَنْ أَبْغَضَهُمْ فَبِبُغْضِي أَبْغَضَهُمْ، وَمَنْ آذَاهُمْ فَقَدْ آذَانِي، وَمَنْ آذَانِي فَقَدْ آذَى اللَّهَ، وَمَنْ آذَى اللَّهَ فَيُوشِكُ أَنْ يَأْخُذَهُ


Tirmidhi-1519

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1519 . ஃபாத்திமாவே ஹசன் தலையை மழித்து அந்த முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக. என்று கூறினார்கள்…


عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الحَسَنِ بِشَاةٍ، وَقَالَ: «يَا فَاطِمَةُ، احْلِقِي رَأْسَهُ، وَتَصَدَّقِي بِزِنَةِ شَعْرِهِ فِضَّةً»، قَالَ: فَوَزَنَتْهُ فَكَانَ وَزْنُهُ دِرْهَمًا أَوْ بَعْضَ دِرْهَمٍ


Tirmidhi-3675

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3675 . உமர் (ர­லி) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அந்நேரத்தில் என்னிடத்தில் இதற்குத் தோதுவாக செல்வம் இருந்தது. ஒரு நாளும் அபூபக்ரை (நன்மையில்) நான் முந்தியதில்லை.

எனவே நான் இன்று அபூபக்ரை (தர்மம் செய்வதில்) முந்தி விடுவேன் என்று (மனதில்) கூறிக் கொண்டேன். எனது செல்வத்தில் பாதியை (நபி (ஸல்) அவர்களிடத்தில்) நான் கொண்டு வந்தேன். உமது குடும்பத்தாருக்காக நீங்கள் என்ன வைத்து விட்டு வந்தீர்கள்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் இது போன்று (பாதியை வைத்துவிட்டு வந்துள்ளேன்) என்று கூறினேன்.

அபூபக்ர் தம்னிடம் உள்ள அனைத்தையும் கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரே உமது குடும்பத்தாருக்காக நீங்கள் என்ன வைத்துவிட்டு வந்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நான் அவர்களுக்காக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் வைத்துவிட்டு வந்தேன் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக ஒரு போதும் அபூபக்ரை எந்த (நன்மையான) விஷயத்திலும் என்னால் முந்தவே முடியாது என்று நான் கூறிக் கொண்டேன்.

அறிவிப்பவர் : அஸ்லம் (ரஹ்)


أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  أَنْ نَتَصَدَّقَ فَوَافَقَ ذَلِكَ عِنْدِي مَالًا، فَقُلْتُ: اليَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا، قَالَ: فَجِئْتُ بِنِصْفِ مَالِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ: وَسَلَّمَ: «مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟» قُلْتُ: مِثْلَهُ، وَأَتَى أَبُو بَكْرٍ بِكُلِّ مَا عِنْدَهُ، فَقَالَ: «يَا أَبَا بَكْرٍ مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟» قَالَ: أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ، قُلْتُ: لَا أَسْبِقُهُ إِلَى شَيْءٍ أَبَدًا


Tirmidhi-723

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

723.

 

….நோயோ தக்க காரணமோ இன்றி ரமலானில் ஒரு நாள் நோன்பை விட்டு விட்டால் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது.


«مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ مِنْ غَيْرِ رُخْصَةٍ وَلَا مَرَضٍ، لَمْ يَقْضِ عَنْهُ صَوْمُ الدَّهْرِ كُلِّهِ وَإِنْ صَامَهُ»


Tirmidhi-1089

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1089. திருமணத்தைப் பகிரங்கப் படுத்துங்கள். அதற்காக தஃப் -முரசு கொட்டுங்கள்…


«أَعْلِنُوا هَذَا النِّكَاحَ، وَاجْعَلُوهُ فِي المَسَاجِدِ، وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ»


Tirmidhi-320

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

320. மண்ணறைகளை சந்தித்து வரும் பெண்களையும் அவற்றின் மீது விளக்கு ஏற்றுபவர்களையும் அவற்றின் மீது பள்ளி எழுப்புபவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ القُبُورِ، وَالمُتَّخِذِينَ عَلَيْهَا المَسَاجِدَ وَالسُّرُجَ»


Tirmidhi-2499

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2499. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே!

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الخَطَّائِينَ التَّوَّابُونَ»


Tirmidhi-1

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


«لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ»،

قَالَ هَنَّادٌ فِي حَدِيثِهِ: «إِلَّا بِطُهُورٍ»


Tirmidhi-2518

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2518. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியவைகளில், நீங்கள் நினைவில் வைத்திருக்கும் (முக்கிய) செய்தி என்ன?” என்று நான் (நபி (ஸல்) அவர்களின் பேரனான) ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களிடம் கேட்டேன், அதற்கவர்கள், “உனக்கு சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்ற (உறுதியான விஷயத்)தின் பால் சென்று விடு. (ஏனெனில்) உண்மை, மனஅமைதி தரக்கூடியதாகவும், பொய், சந்தேகத்தை உருவாக்கக் கூடியதாகவும் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் நினைவில் வைத்துள்ளேன் என்று பதிலளித்தார்கள்.


«دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ، فَإِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ، وَإِنَّ الكَذِبَ رِيبَةٌ»


Next Page » « Previous Page