தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-723

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

 

….நோயோ தக்க காரணமோ இன்றி ரமலானில் ஒரு நாள் நோன்பை விட்டு விட்டால் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது.

(திர்மிதி: 723)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ قَالَ: حَدَّثَنَا أَبُو المُطَوِّسِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ مِنْ غَيْرِ رُخْصَةٍ وَلَا مَرَضٍ، لَمْ يَقْضِ عَنْهُ صَوْمُ الدَّهْرِ كُلِّهِ وَإِنْ صَامَهُ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-655.
Tirmidhi-Shamila-723.
Tirmidhi-Alamiah-655.
Tirmidhi-JawamiulKalim-654.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


இதில் வரும் முதவ்விஸ் என்பவர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமாகும்.

இவரிடமிருந்து அறிவிக்கும் இவரின் மகன் அப்துல்லா பின் முதவ்விஸ் (அபுல் முதவ்விஸ், யஸீத் பின் முதவ்விஸ்)  என்பவரும் பலவீனமானவர். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் இவர் தன் தந்தை வழியாக தனித்து அறிவிக்கும் எதுவும் ஆதாரமாக ஆகாது என்று கூறியுள்ளார்…


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.