தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2890

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

வாகனத்தில் ஹஜ் செய்வது.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பழைய சேணம் போடப்பட்ட வாகனத்தில் ஹஜ் செய்தார்கள். அவ்வாகனத்தின் மீது உள்ள போர்வை நான்கு திர்ஹத்தின் மதிப்பு கூட கிடையாது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! இந்த ஹஜ்ஜை அடுத்தவர் பார்ப்பதற்காகவும், துதிப்பதற்காகவும் இல்லாமல் (தூய்மையாக) ஆக்கு! என்று துஆச் செய்தார்கள்.

(இப்னுமாஜா: 2890)

بَابُ الْحَجِّ عَلَى الرَّحْلِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الرَّبِيعِ بْنِ صَبِيحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ:

حَجَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَحْلٍ، رَثٍّ، وَقَطِيفَةٍ تُسَاوِي أَرْبَعَةَ دَرَاهِمَ، أَوْ لَا تُسَاوِي، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ حَجَّةٌ لَا رِيَاءَ فِيهَا، وَلَا سُمْعَةَ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-2890.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2885.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-2885-யஸீத் பின் அபான் பலவீனமானவர்; ராவீ-15614-ரபீஉ பின் ஸபீஹ் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், வேறு சில பலவீனமான அறவிப்பாளர்தொடர் மூலம் (முதாபஅத், ஷாஹித் அடிப்படையில்) இந்த செய்தியை சரியானது எனக் கூறியுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா ‌-2617)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.