தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-1858

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

பைஹகீ கூறுகிறார் :

(இதன் அறிவிப்பாளர் தொடரில் முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ  ஸுஹ்ரியிடமிருந்தும், ஸுஹ்ரி ஸயீத் பின் அல்முஸய்யப் அவர்களிடமிருந்தும்ஸயீத் பின் அல்முஸய்யப் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும், அபூஹுரைரா (ரலி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து  கேட்டதாக வந்துள்ளது. ஆனால் இதில் வரும் முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ பலவீனமானவர்

வேறு அறிவிப்பில் யூனுஸும், மற்ற அறிவிப்பாளர்களும்  ஸுஹ்ரியிடமிருந்தும், ஸுஹ்ரி அவர்கள், அபூஹுரைரா (ரலி) கூறினார்கள் என்றும் இந்த செய்தி  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாளர்தொடரே உண்மையான அறிவிப்பாளர்தொடர் ஆகும். (அதாவது இந்த செய்தி பலவீனமான, மவ்கூஃபான செய்தியாகும்)

(பைஹகீ-குப்ரா: 1858)

أَخْبَرَنَا أَبُو بَكْرٍ الْحَارِثِيُّ الْفَقِيهُ، أنا أَبُو مُحَمَّدِ بْنُ حَيَّانَ ثنا ابْنُ أَبِي عَاصِمٍ ثنا هِشَامُ بْنُ عَمَّارٍ ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ يَحْيَى عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

لَا يُؤَذِّنُ إِلَّا مُتَوَضِّئٌ

هَكَذَا رَوَاهُ مُعَاوِيَةُ بْنُ يَحْيَى الصَّدَفِيُّ وَهُوَ ضَعِيفٌ وَالصَّحِيحُ رِوَايَةُ يُونُسَ بْنِ يَزِيدَ الْأَيْلِيِّ وَغَيْرِهِ عَنِ الزُّهْرِيِّ قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ: لَا يُنَادِي بِالصَّلَاةِ إِلَّا مُتَوَضِّئٌ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-1858.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-1693.




இதன் அறிவிப்பாளர்தொடரில் معاوية بن يحيى الصدفي  முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார்.

  • இவரைப் பற்றி, அழிபவர், எந்த மதிப்பும் இல்லாதவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள்.
  • இவர் ஹதீஸ்துறையில் பலவீனமானவர் என்று அல்ஜவ்ஸஜானீ அவர்களும்,
  • நம்பகமானவர் இல்லை என்று அபூஸுர்ஆ அவர்களும் கூறியுள்ளார்கள்.
  • இவர் பலவீனமானவர், இவருடைய ஹதீஸில் மறுக்கப்பட வேண்டியவை உள்ளன என்று அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார்கள்.
  • இவரை (பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால்) நாங்கள் விட்டுவிட்டோம் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஹன்பல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம் :10, பக்கம் : 197

கூடுதல் தகவல் பார்க்க : திர்மிதீ-200 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.