தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-200

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(திர்மிதி: 200)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ يَحْيَى، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا يُؤَذِّنُ إِلَّا مُتَوَضِّئٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-200.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-184.




وهو منقطع والراوي له عن الزهري ضعيف
التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير: (1 / 368)

  • இது தொடர்பு அறுந்த செய்தி. ஸுஹ்ரி அவர்கள் அபூஹுராரா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை.
  • இந்த செய்தியை பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே இந்த செய்தியின் அறிவிப்பாளர் ஸுஹ்ரீ அவர்கள், நபித்தோழர் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கிறார். ஆனால் ஸுஹ்ரீ அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களிடம் எதையும் செவியுறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும்  நபிகளாரின் கூற்றாக வந்த செய்தியை விட நபித்தோழரின் கூற்றாக வந்த (திர்மிதீ-201) செய்தியே உண்மையாகும் என்று கூறியுள்ளார்கள்.
  • மேலும் இதில் வரும் அறிவிப்பாளர் معاوية بن يحيى الصدفي முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ பலவீனமானவர்.
  1. இவரைப் பற்றி, அழிபவர், எந்த மதிப்பும் இல்லாதவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள்.
  2. இவர் ஹதீஸ்துறையில் பலவீனமானவர் என்று அல்ஜவ்ஸஜானீ அவர்களும்,
  3. நம்பகமானவர் இல்லை என்று அபூஸுர்ஆ அவர்களும் கூறியுள்ளார்கள்.
  4. இவர் பலவீனமானவர், இவருடைய ஹதீஸில் மறுக்கப்பட வேண்டியவை உள்ளன என்று அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார்கள்.
  5. இவரை (பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால்) நாங்கள் விட்டுவிட்டோம் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஹன்பல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம் :10, பக்கம் : 197

معاوية بن يحيى الصدفي

ثنا ابن حماد ، ثنا معاوية بن يحيى قال معاوية بن يحيى الصدفي مصري هالك ليس بشيء .
الكامل في الضعفاء: (8 / 138)
قال معاوية بن صالح عن يحيى بن معين : معاوية بن يحيى الصدفي هالك ليس بشيء
تهذيب التهذيب: (4 / 113)
نا عبد الرحمن قال : ذكره أبي عن إسحاق بن منصور عن يحيى بن معين أنه قال : معاوية بن يحيى الصدفي لا شيء
الجرح والتعديل لابن أبي حاتم: (8 / 383)
قال معاوية بن صالح ، عن يحيى بن معين : معاوية بن يحيى الصدفي هالك ليس بشيء
تهذيب الكمال: (28 / 221)
ثنا محمد بن علي ، ثنا عثمان بن سعيد قال : قلت ليحيى بن معين : فالصدفي معاوية بن يحيى ؟ قال : ليس بشيء .
الكامل في الضعفاء: (8 / 138)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-2195 , திர்மிதீ-200 , 201 , குப்ரா பைஹகீ-1858 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.