உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்…
அறிவிப்பவர் : முஹம்மது பின் ஷிஹாப் ஸுஹ்ரி (ரஹ்)
திர்மிதீ இமாம் கூறுகிறார் :
இந்த செய்தி இதற்கு முன் உள்ள ஹதீஸ் எண்-200 ஐ விட அறிவிப்பாளர்தொடரில் சரியானது. ஆனால் இதில் வரும் அறிவிப்பாளர் ஸுஹ்ரீ அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் எதையும் செவியுறவில்லை. (எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்).
(அதாவது இந்த செய்தி ஹதீஸ் எண் 200 ல் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக வந்துள்ளது. ஹதீஸ் எண்-201 இல் நபித்தோழரின் கூற்றாக வந்துள்ளது. இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் 201 இல் வரும் செய்தி மிக பலவீனமல்ல என்பதையே திர்மிதீ இமாம் கூற விரும்புகிறார்).
……
(திர்மிதி: 201)
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ:
«لَا يُنَادِي بِالصَّلَاةِ إِلَّا مُتَوَضِّئٌ»
وَهَذَا أَصَحُّ مِنَ الحَدِيثِ الأَوَّلِ،: «وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ لَمْ يَرْفَعْهُ ابْنُ وَهْبٍ، وَهُوَ أَصَحُّ مِنْ حَدِيثِ الوَلِيدِ بْنِ مُسْلِمٍ وَالزُّهْرِيُّ لَمْ يَسْمَعْ مِنْ أَبِي هُرَيْرَةَ وَاخْتَلَفَ أَهْلُ العِلْمِ فِي الأَذَانِ عَلَى غَيْرِ وُضُوءٍ، فَكَرِهَهُ بَعْضُ أَهْلِ العِلْمِ، وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ، وَإِسْحَاقُ وَرَخَّصَ فِي ذَلِكَ بَعْضُ أَهْلِ العِلْمِ، وَبِهِ يَقُولُ سُفْيَانُ، وَابْنُ المُبَارَكِ، وَأَحْمَدُ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-201.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-185.
அறிவிப்பாளர் ஸுஹ்ரீ அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடம் எதையும் செவியுறவில்லை என திர்மிதீ இமாம் அவர்களே இங்கு குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
கூடுதல் தகவல் பார்க்க : திர்மிதீ-200 .
சமீப விமர்சனங்கள்