தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3606

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மூத்தா போரின்போது யமன் பழங்குடி இனத்தாரான) “ஹிம்யர்” குலத்தாரில் ஒருவர் (ரோம பைஸாந்திய) எதிரிகளில் ஒருவரைக் கொன்றுவிட்டு, தம்மால் கொல்லப்பட்டவரின் உடைமைகளை எடுத்துக்கொள்ள விரும்பினார்.

ஆனால், காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் (அவற்றை முழுமையாகத்) தர மறுத்து விட்டார்கள். அப்போது காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களே அவர்களுக்குத் தளபதியாக இருந்தார்கள்.

எனவே, நான் (மதீனா திரும்பியதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் காலிதிடம் “அவர், தாம் கொன்ற எதிரியின் உடைமைகளை எடுத்துக்கொள்ளவிடாமல் நீர் தடுக்கக் காரணமென்ன?” என்று வினவினார்கள். அதற்கு “அவை அதிகமாக இருப்பதாக நான் கருதினேன், அல்லாஹ்வின் தூதரே! (ஒரே ஆளுக்கு அவ்வளவையும் கொடுப்பது பொருத்தமாக இராது)” என்று காலித் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவற்றை அவரிடமே கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

பிறகு காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் (அங்கு அமர்ந்திருந்த) என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் காலித் (ரலி) அவர்களது மேல்துண்டைப் பிடித்து இழுத்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மைப் பற்றிக் கூறுவேன் என்று நான் கூறியபடி செய்துவிட்டேன் அல்லவா!” என்று கூறினேன்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். “காலிதே! அவருக்குக் கொடுக்காதீர். காலிதே! அவருக்குக் கொடுக்காதீர். என்னால் நியமிக்கப்பெற்ற தளபதிகளை எனக்காக விட்டுவைக்கமாட்டீர்களா? உங்களது நிலையும் (உங்களுக்குத் தளபதிகளாக நியமிக்கப்பட்ட) அவர்களது நிலையும் ஒட்டகங்களையோ ஆடுகளையோ மேய்க்குமாறு நியமிக்கப்பட்ட (இடையன்) ஒருவனின் நிலையைப் போன்றதாகும். அவன் அவற்றை (ஓட்டிச் சென்று) மேய்த்தான். பிறகு தண்ணீர் புகட்டும் நேரம் வரும்வரை காத்திருந்து, நீர்நிலை ஒன்றுக்கு அவற்றை ஓட்டிச் சென்றான்.

அவை அதில் தண்ணீர் குடிக்கத் துவங்கின. அப்போது (நீர்நிலையின் மேற்பகுதியில் உள்ள) தெளிந்த நீரை அவை குடித்துவிட்டு, கலங்கலான நீரை விட்டுவைத்தன. (அவ்வாறுதான்) தெளிந்த நீர் உங்களுக்கும் கலங்கலான நீர் உங்கள் தளபதிகளுக்கும் உரியவையா?” என்று கேட்டார்கள்.

Book : 32

(முஸ்லிம்: 3606)

وحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، قَالَ

قَتَلَ رَجُلٌ مِنْ حِمْيَرَ رَجُلًا مِنَ الْعَدُوِّ، فَأَرَادَ سَلَبَهُ، فَمَنَعَهُ خَالِدُ بْنُ الْوَلِيدِ، وَكَانَ وَالِيًا عَلَيْهِمْ، فَأَتَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَوْفُ بْنُ مَالِكٍ، فَأَخْبَرَهُ، فَقَالَ لِخَالِدٍ: «مَا مَنَعَكَ أَنْ تُعْطِيَهُ سَلَبَهُ؟» قَالَ: اسْتَكْثَرْتُهُ يَا رَسُولَ اللهِ، قَالَ: «ادْفَعْهُ إِلَيْهِ»، فَمَرَّ خَالِدٌ بِعَوْفٍ، فَجَرَّ بِرِدَائِهِ، ثُمَّ قَالَ: هَلْ أَنْجَزْتُ لَكَ مَا ذَكَرْتُ لَكَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَمِعَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتُغْضِبَ، فَقَالَ: «لَا تُعْطِهِ يَا خَالِدُ، لَا تُعْطِهِ يَا خَالِدُ، هَلْ أَنْتُمْ تَارِكُونَ لِي أُمَرَائِي؟ إِنَّمَا مَثَلُكُمْ وَمَثَلُهُمْ كَمَثَلِ رَجُلٍ اسْتُرْعِيَ إِبِلًا، أَوْ غَنَمًا، فَرَعَاهَا، ثُمَّ تَحَيَّنَ سَقْيَهَا، فَأَوْرَدَهَا حَوْضًا، فَشَرَعَتْ فِيهِ فَشَرِبَتْ صَفْوَهُ، وَتَرَكَتْ كَدْرَهُ، فَصَفْوُهُ لَكُمْ، وَكَدْرُهُ عَلَيْهِمْ»


Tamil-3606
Shamila-1753
JawamiulKalim-3303




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.