தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5074

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். உடனே நான் (ஓடிச் சென்று) ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (செல்லமாக) என் தோள்களுக்கிடையே ஒரு தட்டு தட்டிவிட்டு, “நீ போய் முஆவியா (பின் அபீசுஃப்யான்) அவர்களை என்னிடம் வரச்சொல்” என்று கூறினார்கள். (அவர் நபி (ஸல்) அவர்களின் எழுத்தராக இருந்தார்.)

அவ்வாறே நான் சென்றுவிட்டு வந்து, “அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னேன். பிறகு (மீண்டும்) என்னிடம், “நீ போய் முஆவியா அவர்களை என்னிடம் வரச் சொல்” என்று கூறினார்கள். மீண்டும் நான் சென்றுவிட்டு வந்து, “அவர் (இன்னும்) சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ், அவருடைய வயிறை நிரப்பாமல் விடட்டும்!” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில், முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) உமய்யா பின் காலித் (ரஹ்) அவர்களிடம், (ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஹத்தஅனீ” எனும் சொல்லுக்கு என்ன பொருள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “என் பின்தலையில் ஒரு தட்டு தட்டினார்கள்” என்பது பொருள் என்றார்கள்.

Book : 45

(முஸ்லிம்: 5074)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، ح وَحَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، – وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى – قَالَا: حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي حَمْزَةَ الْقَصَّابِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ

كُنْتُ أَلْعَبُ مَعَ الصِّبْيَانِ، فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَوَارَيْتُ خَلْفَ بَابٍ، قَالَ فَجَاءَ فَحَطَأَنِي حَطْأَةً، وَقَالَ: «اذْهَبْ وَادْعُ لِي مُعَاوِيَةَ» قَالَ: فَجِئْتُ فَقُلْتُ: هُوَ يَأْكُلُ، قَالَ: ثُمَّ قَالَ لِيَ: «اذْهَبْ فَادْعُ لِي مُعَاوِيَةَ» قَالَ: فَجِئْتُ فَقُلْتُ: هُوَ يَأْكُلُ، فَقَالَ: «لَا أَشْبَعَ اللهُ بَطْنَهُ» قَالَ ابْنُ الْمُثَنَّى: قُلْتُ لِأُمَيَّةَ: مَا حَطَأَنِي؟ قَالَ: قَفَدَنِي قَفْدَةً


Tamil-5074
Shamila-2604
JawamiulKalim-4719




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.