அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாய்களும் உங்களைப் போன்ற (உயிருள்ள) சமுதாயங்களில் ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால் அவைகளை கொல்ல உங்களுக்கு கட்டளையிட்டிருப்பேன். என்றாலும் (மனிதர்களுக்கு தொல்லைதரும்) கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள்.
எந்த கூட்டத்தினர் (தமது இல்லத்தில்) நாய் வளர்க்கின்றனரோ அவர்களுடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு “கீராத்”(கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; வேட்டையாடுவதற்காகவோ, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காகவோ, கால்நடைகளைக் காவல் காப்பதற்காகவோ வைத்திருக்கும் நாயைத்தவிர.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 20571)حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَوْلَا أَنَّ الْكِلَابَ أُمَّةٌ مِنَ الْأُمَمِ، لَأَمَرْتُ بِقَتْلِهَا، فَاقْتُلُوا الْأَسْوَدَ الْبَهِيمَ ، وَأَيُّمَا قَوْمٍ اتَّخَذُوا كَلْبًا لَيْسَ بِكَلْبِ صَيْدٍ، أَوْ زَرْعٍ، أَوْ مَاشِيَةٍ، نَقَصَ مِنْ أُجُورِهِمْ، كُلَّ يَوْمٍ قِيرَاطٌ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20571.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-20077.
சமீப விமர்சனங்கள்