பாடம்: 15
நாய்களை கொல்லுதல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாய்களும் உங்களைப் போன்ற (உயிருள்ள) சமுதாயங்களில் ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால் அவைகளை கொல்ல உங்களுக்கு கட்டளையிட்டிருப்பேன். என்றாலும் (மனிதர்களுக்கு தொல்லைதரும்) கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தக் கருத்தில் இப்னு உமர் (ரலி), ஜாபிர் (ரலி), அபூ ராஃபிஉ (ரலி), அபூ அய்யூப் (ரலி) போன்றோர்களின் வழியாக ஹதீஸ்கள் வந்துள்ளன. அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தி ஹஸன், ஸஹீஹ் ஆகும். கன்னங்கரிய நாய் ஷைத்தான் என்றும் சில அறிவிப்புகளில் வந்துள்ளது. அல்கல்புல் அஸ்வதுல் பஹீம் என்ற வார்த்தைக்கு நாயின் உடலில் அறவே வெண்மையில்லாத கன்னங்கரிய நாய் என்ற பொருளாகும். மேலும் சில அறிஞர்கள் கன்னங்கரிய நாய் வேட்டையாடியவற்றை (உண்ணுவது) வெறுப்பிற்குரியது என்று கூறியுள்ளனர்.
(திர்மிதி: 1486)
بَابُ مَا جَاءَ فِي قَتْلِ الكِلَابِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَخْبَرَنَا مَنْصُورُ بْنُ زَاذَانَ، وَيُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ الحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَوْلَا أَنَّ الكِلَابَ أُمَّةٌ مِنَ الأُمَمِ لَأَمَرْتُ بِقَتْلِهَا كُلِّهَا، فَاقْتُلُوا مِنْهَا كُلَّ أَسْوَدَ بَهِيمٍ»
وَفِي البَابِ عَنْ ابْنِ عُمَرَ، وَجَابِرٍ، وَأَبِي رَافِعٍ، وَأَبِي أَيُّوبَ: حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَيُرْوَى فِي بَعْضِ الحَدِيثِ أَنَّ الكَلْبَ الأَسْوَدَ البَهِيمَ: شَيْطَانٌ، وَالكَلْبُ الأَسْوَدُ البَهِيمُ الَّذِي لَا يَكُونُ فِيهِ شَيْءٌ مِنَ البَيَاضِ، وَقَدْ كَرِهَ بَعْضُ أَهْلِ العِلْمِ صَيْدَ الكَلْبِ الأَسْوَدِ البَهِيمِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1486.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1402.
சமீப விமர்சனங்கள்