தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22509

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவைப் பின் தொடர்ந்தோம். நாங்கள் (ஜனாஸாவை அடக்கம் செய்துவிட்டு) திரும்பிய போது வழியில் ஒரு குறைஷி பெண்ணின் (சார்பாக அனுப்பப்பட்ட) அழைப்பாளர், “அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் உங்களையும், உங்களுடன் இருப்பவர்களையும் விருந்திற்கு அழைக்கிறார் என்று கூறினார். எனவே! நபி (ஸல்) அவர்கள் அந்த அழைப்பை ஏற்று சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம்.

அங்கு சிறுவர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் தந்தையுடன் அமர்ந்தோம். உணவு கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் உணவில் கையை வைத்தார்கள். கூட்டத்தில் உள்ள அனைவரும் கையை வைத்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு உணவுக்கவளம் (மெள்ளமுடியாமல் வாயில் சுழன்றுக்கொண்டு) விக்கிக் கொள்வதை கூட்டத்தினர் கண்டு, (ஏதோ விவகாரம் உள்ளது என்று) புரிந்துக்கொண்டு எங்களை விட்டுவிட்டு அவர்கள் தங்கள் கைகளை உணவுத் தட்டிலிருந்து எடுத்துக்கொண்டனர். பின்பு ஒரு மனிதர் எங்களுடைய கைகளைகளையும் பிடித்து, வைத்திருந்த உணவுக்கவளத்தை கீழே தட்டிவிட அது தட்டில் விழுந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்? என்று பார்த்தவர்களாக எங்கள் கைகளை பிடித்துக்கொண்டனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சாப்பிடாமல்) உணவை தட்டில் போட்டுவிட்டு “இந்த ஆட்டிறைச்சி அதனுடைய உரிமையாளர் அனுமதியின்றி எடுக்கப்பட்டதாகக் கருதுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது விருந்திற்கு அழைத்த பெண் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்களையும், உங்களுடன் இருப்பவர்களையும் விருந்திற்கு அழைக்க வேண்டும் என்று எனது மனதில் தோன்றியது. அதனால் ஆடு வாங்கிவர நகீஃ என்ற ஆட்டுச் சந்தைக்கு ஆளனுப்பினேன். ஆடு கிடைக்கவில்லை. (எனது சகோதரர்) ஆமிர் பின் அபூவக்காஸ் அவர்கள், நேற்றே நகீஃ என்ற ஆட்டுச் சந்தைக்கு சென்று ஆடு வாங்கியிருந்தார்…எனவே அவரிடம் விவரம் கூறி…ஆட்டை வாங்குவதற்கு ஆளனுப்பினேன். ஆனால் எனது பணியாளர்  அங்கு செல்லும் போது அவர் இல்லை. என்றாலும் அவரது குடும்பத்தினர் எனது பணியாளருக்கு ஆட்டைக் கொடுத்தனுப்பினர்” என்று விவரம் கூறினார். எனவே (ஆட்டின் உரிமையாளரின் அனுமதி இல்லை) என்பதால் நபி (ஸல்) அவர்கள், (சாப்பிடாமல்) இந்த உணவை கைதிகளுக்கு கொடுத்து விடுங்கள் என்று கூறிவிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஒரு அன்ஸாரி நபித்தோழர்.

(முஸ்னது அஹ்மத்: 22509)

حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ زَائِدَةَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ أَخْبَرَهُ قَالَ:

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةٍ، فَلَمَّا رَجَعْنَا لَقِيَنَا دَاعِي امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فُلَانَةً تَدْعُوكَ وَمَنْ مَعَكَ إِلَى طَعَامٍ، فَانْصَرَفَ فَانْصَرَفْنَا مَعَهُ، فَجَلَسْنَا مَجَالِسَ الْغِلْمَانِ مِنْ آبَائِهِمْ بَيْنَ أَيْدِيهِمْ، ثُمَّ جِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، وَوَضَعَ الْقَوْمُ أَيْدِيَهُمْ فَفَطِنَ لَهُ الْقَوْمُ، وَهُوَ يَلُوكُ لُقْمَتَهُ لَا يُجِيزُهَا، فَرَفَعُوا أَيْدِيَهُمْ وَغَفَلُوا عَنَّا، ثُمَّ ذَكَرُوا فَأَخَذُوا بِأَيْدِينَا فَجَعَلَ الرَّجُلُ يَضْرِبُ اللُّقْمَةَ بِيَدِهِ حَتَّى تَسْقُطَ، ثُمَّ أَمْسَكُوا بِأَيْدِينَا يَنْظُرُونَ مَا يَصْنَعُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَفَظَهَا فَأَلْقَاهَا فَقَالَ: «أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا» . فَقَامَتِ الْمَرْأَةُ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ كَانَ فِي نَفْسِي أَنْ أَجْمَعَكَ وَمَنْ مَعَكَ عَلَى طَعَامٍ، فَأَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ فَلَمْ أَجِدْ شَاةً تُبَاعُ، وَكَانَ عَامِرُ بْنُ أَبِي وَقَّاصٍ ابْتَاعَ شَاةً أَمْسِ مِنَ الْبَقِيعِ، فَأَرْسَلْتُ إِلَيْهِ أَنْ ابْتُغِيَ لِي شَاةً فِي الْبَقِيعِ، فَلَمْ تُوجَدْ فَذُكِرَ لِي أَنَّكَ اشْتَرَيْتَ شَاةً، فَأَرْسِلْ بِهَا إِلَيَّ، فَلَمْ يَجِدْهُ الرَّسُولُ وَوَجَدَ أَهْلَهُ فَدَفَعُوهَا إِلَى رَسُولِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَطْعِمُوهَا الْأُسَارَى»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22509.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21919.




மேலும் பார்க்க: அபூதாவூத்-3332 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.