நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சம் இருக்கவில்லை. அவர்கள் பயணத்திலும் இருக்கவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்போது நான் அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்தில் இவ்வாறு செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கருதினார்கள்” என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 2557)حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:
«جَمَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ بِالْمَدِينَةِ، فِي غَيْرِ سَفَرٍ وَلا خَوْفٍ» ، قَالَ: قُلْتُ يَا أَبَا الْعَبَّاسِ: وَلِمَ فَعَلَ ذَلِكَ؟ قَالَ: «أَرَادَ أَنْ لَا يُحْرِجَ أَحَدًا مِنْ أُمَّتِهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-2557.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-2459.
சமீப விமர்சனங்கள்