பாடம்:
ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்கு செய்யும் பிரார்த்தனை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அதில் பின்வரும் துஆவை ஓதினார்கள்.
அல்லாஹும் மஃக்ஃபிர் லி ஹய்யினா வ மய்யி(த்)தினா வ ஷாஹிதினா வ ஃகாயிபினா வ ஸஃகீரினா வ கபீரினா வ தகரினா வ உன்ஸானா. அல்லாஹும்ம மன் அஹ்யை(த்)தஹூ மின்னா ஃப அஹ்யிஹீ அலல் இஸ்லாம். வமன் தவஃப்பை(த்)தஹூ மின்னா ஃப தவஃப்பஹு அலல் ஈமான்.
பொருள்: இறைவா! எங்களில் உயிருடனிருப்பவர்களையும், மரணித்தவர்களையும், இங்கே வந்திருப்போரையும், வராதவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்து விடுவாயாக! இறைவா எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் இறந்தவர்களை ஈமானுடன் இறக்கச் செய்வாயாக!
அறிவிப்பவர்: அபூஇப்ராஹீம் என்பவரின் தந்தை (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஆயிஷா (ரலி), அபூகதாதா (ரலி), அவ்ஃப் பின் மாலிக் (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட அபூஇப்ராஹீம் என்பவரின் தந்தை (ரலி) அவர்களின் செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
இந்தச் செய்தியை ஹிஷாம் அத்தஸ்துவாயீ, அலீ பின் முபாரக் ஆகியோர், யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரைக் கூறாமல் (முர்ஸலாக) அறிவித்துள்ளனர்.
இக்ரிமா பின் அம்மார் அவர்கள், யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா (ரஹ்) —> ஆயிஷா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர் தொடரில் அறிவித்துள்ளார். இக்ரிமா பின் அம்மார் அவர்கள், யஹ்யா பின் அபூகஸீரின் செய்திகளை சிலநேரம் தவறாக அறிவிப்பவர் என்பதால் இவரின் செய்தி மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியல்ல.
ஹம்மாம் பின் யஹ்யா அவர்கள், யஹ்யா பின் அபூகஸீர் —> அப்துல்லாஹ் பின் அபூகதாதா —> அபூகதாதா —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர் தொடரில் அறிவித்துள்ளார்.
இந்தக் கருத்தில் வரும் அறிவிப்பாளர்தொடர்களில், யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஇப்ராஹீம் அல்அஷ்ஹலீ —> அவரின் தந்தை —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரே மிகச் சரியானது-உண்மையானது என்று முஹம்மத் பின் இஸ்மாயீல் (என்ற புகாரீ இமாம்) கூற நான் செவியேற்றுள்ளேன்.
அபூஇப்ராஹீம் என்பவரின் இயற்பெயர் பற்றி புகாரீ இமாமிடம் நான் கேட்டேன். அது புகாரீ அவர்களுக்கு தெரியவில்லை (என்றே தெரிவித்தார்).
(திர்மிதி: 1024)بَابُ مَا يَقُولُ فِي الصَّلَاةِ عَلَى المَيِّتِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا هِقْلُ بْنُ زِيَادٍ قَالَ: حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي أَبُو إِبْرَاهِيمَ الأَشْهَلِيُّ، عَنْ أَبِيهِ، قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى عَلَى الجَنَازَةِ، قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا» قَالَ يَحْيَى، وَحَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ، وَزَادَ فِيهِ: «اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ»
وَفِي البَاب عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَعَائِشَةَ، وَأَبِي قَتَادَةَ، وَعَوْفِ بْنِ مَالِكٍ، وَجَابِرٍ.: «حَدِيثُ وَالِدِ أَبِي إِبْرَاهِيمَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَرَوَى هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، وَعَلِيُّ بْنُ المُبَارَكِ هَذَا الحَدِيثَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا، وَرَوَى عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. «وَحَدِيثُ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ غَيْرُ مَحْفُوظٍ، وَعِكْرِمَةُ رُبَّمَا يَهِمُ فِي حَدِيثِ يَحْيَى»، وَرَوَى هَمَّامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ: «أَصَحُّ الرِّوَايَاتِ فِي هَذَا حَدِيثُ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي إِبْرَاهِيمَ الأَشْهَلِيِّ، عَنْ أَبِيهِ، وَسَأَلْتُهُ عَنْ اسْمِ أَبِي إِبْرَاهِيمَ فَلَمْ يَعْرِفْهُ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1024.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-943.
சமீப விமர்சனங்கள்