தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1972

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியான் பொய் பேசும்போது அதனுடைய துர்வாடையால் வானவர், ஒரு மைல் தூரம் அவனை விட்டும் தூரமாகிவிடுகிறார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும்) யஹ்யா பின் மூஸா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அப்துர்ரஹீம் பின் ஹாரூன் என்பவரிடம், “இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் வழியாக அப்துல்அஸீஸ் பின் அபூரவ்வாத் அவர்கள் இந்த செய்தியை உங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அப்துர்ரஹீம் என்பவர் “ஆம்” என்று கூறினார்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இந்த செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.

மேலும், இந்தச் செய்தியை அப்துர்ரஹீம் பின் ஹாரூன் என்பவர் தனித்து அறிவித்துள்ளார்.

(திர்மிதி: 1972)

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، قَالَ: قُلْتُ لِعَبْدِ الرَّحِيمِ بْنِ هَارُونَ الغَسَّانِيِّ، حَدَّثَكُمْ عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِذَا كَذَبَ العَبْدُ تَبَاعَدَ عَنْهُ المَلَكُ مِيلًا مِنْ نَتْنِ مَا جَاءَ بِهِ؟»

قَالَ يَحْيَى: فَأَقَرَّ بِهِ عَبْدُ الرَّحِيمِ بْنُ هَارُونَ، فَقَالَ: نَعَمْ،

هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ تَفَرَّدَ بِهِ عَبْدُ الرَّحِيمِ بْنُ هَارُونَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1895.
Tirmidhi-Shamila-1972.
Tirmidhi-Alamiah-1895.
Tirmidhi-JawamiulKalim-1891.




…அள்ளயீஃபா-‌‌1828…

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22636-அப்துர்ரஹீம் பின் ஹாரூன் அல்ஃகஸ்ஸானீ என்பவர் பற்றி …

 

பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துர்ரஹீம் பின் ஹாரூன் —> அப்துல் அஸீஸ் —> நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: திர்மிதீ-1972 , அஸ்ஸமது-இப்னு அபுத்துன்யா-477 , மகாரிமுல் அக்லாக்-இப்னு அபுத்துன்யா-146 , மஸாவில் அக்லாக்-கராயிதீ-150 , அல்முஃஜமுல் அவ்ஸத்-, அல்முஃஜமுஸ் ஸகீர்-, பஹ்ருல் ஃபவாயித்-, ஹில்யதுல் அவ்லியா-, தஹ்தீபுல் கமால்-,

  • பள்ல் பின் அவ்ஃப் —> அப்துல் அஸீஸ் —> நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-1/88.

الكامل في ضعفاء الرجال (1/ 88):
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ، أَخْبَرنا سُلَيْمَانُ بْنُ الرَّبِيعِ بْنِ هِشَامٍ النَّهْدِيُّ، حَدَّثَنا الْفَضْلُ بْنُ عَوْفٍ عَمُّ الأَحْنَفِ، حَدَّثَنا عَبد الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّاد، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَر، قَال: قَال رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم: إِذَا ‌كَذَبَ ‌الْعَبْدُ ‌تَنَحَّى ‌الْمَلَكُ عَنْهُ مِيلا مِنْ نَتْنِ مَا جَاءَ بِهِ، ويُروى مِنْ هذا الوجه هذا الحديث


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.