பாடம்:
இஸ்லாமிய சமூகத்துடன் ஒற்றுமையாக இருப்பதன் அவசியம் குறித்து வந்துள்ளவை.
உமர் (ரலி) அவர்கள் (டமாஸ்கஸின்) ஜாபியா எனும் ஊரில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: “மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மத்தியில் நின்றதைப் போன்றே நான் உங்கள் மத்தியில் நிற்கிறேன்.
நபி (ஸல்) அவர்கள் (ஒரு தடவை எங்களுக்கு) கூறினார்கள்: “எனது தோழர்களைப் பற்றி உங்களுக்கு நான் உபதேசம் செய்கிறேன். பிறகு அவர்களுக்கு அடுத்து வருபவர்களைப் பற்றியும், பிறகு அவர்களுக்கு அடுத்து வருபவர்களைப் பற்றியும் உபதேசம் செய்கிறேன். பிறகு பொய் பெருகிவிடும்.
எந்த அளவிற்கு என்றால், ஒருவர் சத்தியம் செய்ய கேட்காத போதும் சத்தியம் செய்வார். சாட்சி சொல்ல அழைக்காத போதும் சாட்சி சொல்வார்.
அறிந்து கொள்ளுங்கள்! எந்த ஆணும் எந்த (அந்நிய) பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம். அவ்வாறு இருந்தால் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.
நீங்கள் ஜமாஅத்தை (முஸ்லிம் கூட்டமைப்பை)ப் பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து இருப்பதை விட்டுத் தூரமாக இருங்கள். ஏனெனில் ஷைத்தான் ஒருவருடன் தான் இருப்பான். ஆனால் இருவரை விட்டு அவன் தூரமாக இருப்பான். யார் சொர்க்கத்தின் நடுப்பகுதியை விரும்புகிறாரோ அவர் ஜமாஅத்தைப் பிடித்துக் கொள்ளட்டும்.
யார் தனது நன்மையால் மகிழ்ச்சியடைந்து, தனது தீமையால் வருந்துகிறாரோ அவரே உண்மையான முஃமின் ஆவார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ள இந்த ஹதீஸ், “ஹஸன் ஸஹீஹ் கரிப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
மேலும், இந்த ஹதீஸை முஹம்மத் பின் ஸூகா அவர்களிடமிருந்து இப்னுல் முபாரக் அவர்களும் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த ஹதீஸ் வேறு வகையான அறிவிப்பாளர்தொடர்களிலும் உமர் (ரலி) அவர்கள் வழியாக நபியின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(திர்மிதி: 2165)
بَابُ مَا جَاءَ فِي لُزُومِ الجَمَاعَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ إِسْمَاعِيلَ أَبُو المُغِيرَةِ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ:
خَطَبَنَا عُمَرُ بِالجَابِيَةِ فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ، إِنِّي قُمْتُ فِيكُمْ كَمَقَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِينَا فَقَالَ: «أُوصِيكُمْ بِأَصْحَابِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَفْشُو الكَذِبُ حَتَّى يَحْلِفَ الرَّجُلُ وَلَا يُسْتَحْلَفُ، وَيَشْهَدَ الشَّاهِدُ وَلَا يُسْتَشْهَدُ، أَلَا لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا كَانَ ثَالِثَهُمَا الشَّيْطَانُ، عَلَيْكُمْ بِالجَمَاعَةِ وَإِيَّاكُمْ وَالفُرْقَةَ فَإِنَّ الشَّيْطَانَ مَعَ الوَاحِدِ وَهُوَ مِنَ الِاثْنَيْنِ أَبْعَدُ، مَنْ أَرَادَ بُحْبُوحَةَ الجَنَّةِ فَلْيَلْزَمُ الجَمَاعَةَ، مَنْ سَرَّتْهُ حَسَنَتُهُ وَسَاءَتْهُ سَيِّئَتُهُ فَذَلِكَ الْمُؤْمِنُ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَقَدْ رَوَاهُ ابْنُ المُبَارَكِ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2165.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்