بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் தரத்தின் அடிப்படையில் அறிவிப்பாளர்களை 12 வகையினராக குறிப்பிட்டுள்ளார்.
1 . ஆரம்பக்கால ஹதீஸ்கலை அறிஞர்களில் ஒருவரான அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் அறிவிப்பாளர்களை 3 வகையாக பிரித்தார். இதன்படியே இப்னு மன்தா, பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
ஆகியோர் கூறியுள்ளனர்.
2 . இப்னு ரஜப் போன்ற வேறுசிலர் 4 வகையாக பிரித்துள்ளனர்.
3 . இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள் 4, 5 வகையாக பிரித்துள்ளார்.
4 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் போன்ற சிலர் 6 வகையாக பிரித்துள்ளனர்.
5 . அபூஅலீ அல்ஜய்யானீ 7 வகையாக பிரித்துள்ளார்.
6 . இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள் அறிவிப்பாளர்களை 4, 5 வகையாக ஆரம்பத்தில் கூறியிருந்தாலும் அறிவிப்பாளர்கள் பற்றி கூறப்படும் அறிஞர்களின் ஜர்ஹ், தஃதீல் வார்த்தைகளின் அடிப்படையில் 8 வகையாக பிரித்தார்.
7 . இவருக்குப் பின் வந்த இப்னு ஸலாஹ் அவர்கள், இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள் கூறிய ஜர்ஹ், தஃதீல் வார்த்தைகளில் கூடுதலாக சில வார்த்தைகளை சேர்த்தார்.
8 . பிறகு வந்த தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், ஏற்கப்படும் அறிவிப்பாளர்களை 5 வகையாகவும், மறுக்கப்படும் அறிவிப்பாளர்களை 5 வகையாகவும் குறிப்பிட்டு 10 வகையாக பிரித்தார்.
9 . பிறகு வந்த இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், அறிவிப்பாளர்களை 12 வகையினராக பிரித்தார்.
(10 . பிறகு வந்த இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களின் மாணவர்களில் ஒருவரான ஸகாவீ இமாம் அவர்கள், இந்த 12 வகையினர் பற்றிய ஜர்ஹ், தஃதீல் வார்த்தைகளை பற்றி விரிவாக கூறியுள்ளார்.)
1 . நபித்தோழர்கள்.
2 . மிகப்பலமானவர்கள்.
3 . பலமானவர்கள்.
4 . சுமாரானவர்கள்; நடுத்தரமானவர்கள்.
இந்த 4 வது வகையினரைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள், صَدُوق என்றோ لا بأس به என்றோ ليس به بأس என்றோ கூறியிருப்பார்கள்.
(முதல் நான்கு வகையினர் مرتبة الاحتجاج – அதாவது இவர்கள் தனித்து அறிவித்தாலும் இவர்களின் செய்திகளை ஏற்கலாம். என்றாலும் இந்த 4 வகையினரில் மிகப்பலமானவர்களுக்கு அவர்களைவிட அடுத்த தரத்தில் உள்ளவர்கள் மாற்றமாக அறிவிக்கும் செய்திகள் ஏற்கப்படாது)
5 . சுமாரானவர்கள் என்பதுடன் ஹதீஸை அறிவிப்பதில் சில தவறுகளை செய்தவர்கள்; பித்அத் கொள்கையுடையவர்கள்.
இந்த 5 வது வகையினரைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள், صَدُوق سيء الحفظ என்றோ, صدوق يَهِم என்றோ, له أوهام என்றோ, يُخطِئ என்றோ, تَغيَّر بأخَرةٍ என்றோ கூறியிருப்பார்கள்…
பித்அத் கொள்கையுடையவர்கள்: ஷீஆ,அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்ற சொல் (شيعة علي ஷீஅது அலீ) “அலீயை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. காலப் போக்கில், அலீ அவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். முகம்மது நபி, அலீ, அலீயின் மனைவி ஃபாத்திமா, மகன்கள் ஹஸன், ஹுசைன் ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர். இவர்கள் பல பிரிவினராக உள்ளனர். பல விசயங்களில் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு-குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோருக்கு மாறுபடுகின்றனர். அலீ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் அவர் சிறு வயதினராக இருந்ததால் முகம்மது நபி அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும். கத்ரிய்யா, நாஸிபீ, முர்ஜிஆ, ஜஹ்மியா போன்ற கொள்கையுடையவர்கள்-இவர்களின் பித்அத் நிலைப்பாட்டைப் பொருத்து இவர்களின் செய்திகளை ஏற்கப்படும்.
இவர்கள் مرتبة الاختبار – இவர்களின் செய்திகளை ஆய்வு செய்யவேண்டும். ஏதேனும் குறை இல்லாவிட்டால் சரியாகிவிடும். குறை இருந்தால் பலவீனமாகிவிடும்.
6 . மக்பூல் எனும் தரம் உடையவர்கள்.
(குறைந்த ஹதீஸ்களை அறிவித்தவர்கள்; இவர்களின் ஹதீஸ்களை ஏற்கக்கூடாது என்பதற்கு தகுந்த காரணம் இருக்காது. இவர்களைப் போன்று மற்றவர்கள் அறிவித்திருந்தால் இவர்களின் செய்தி மக்பூல்-ஏற்கப்படும்; இல்லாவிட்டால் அந்த செய்தி பலவீனமாகும்)
7 . குறை, நிறை அறியப்படாதவர்கள்.
நம்பகத்தன்மை, நினைவாற்றல் ஆகியவைப் பற்றி எந்த அறிஞராலும் நற்சான்று பெறாதவர்கள். (என்றாலும் இவர்களிடமிருந்து அதிகமானோர் ஹதீஸ்களை அறிவித்திருப்பார்கள். (அவர்களில் எவரும் பலமானவர்கள் வழியாகத்தான் நான் ஹதீஸ்களை அறிவிப்பேன் என்ற கொள்கை இல்லாதவராக இருப்பார்). இவர்களை مجهول الحال – மஜ்ஹுலுல் ஹால் என்றும், مستور – மஸ்தூர் என்றும் கூறப்படும்.)
8 . ضعيف – பலவீனமானவர்கள்.
(ஏற்கத்தக்க அறிஞரின் நற்சான்றை பெறாதவர்கள் என்பதுடன், வேறு சிலரால் காரணம் கூறப்படாமல் பலவீனமானவர் என்று கூறப்பட்டவர்கள்)
9 . அறியப்படாதவர்கள்.
(எந்த ஒரு அறிஞரின் நற்சான்றைப் பெறாதவர்கள் என்பதுடன், ஒருவர் மட்டுமே இவர்களிடமிருந்து அறிவித்திருப்பார். அந்த ஒருவர் பலமானவர்கள் வழியாகத்தான் நான் ஹதீஸ்களை அறிவிப்பேன் என்ற கொள்கை இல்லாதவராக இருப்பார்)
6 முதல் 9 வரை உள்ளவர்கள் مرتبة الاعتبار – இவர்கள் தனித்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவை. மற்றவர்களும் இவர்களைப் போன்று அறிவித்திருந்தால் இவர்களின் செய்திகளை துணை ஆதாரமாக கூறலாம்.
10 . மிகப் பலவீனமானவர்கள்.
(எந்த ஒரு அறிஞரின் நற்சான்றைப் பெறாதவர்கள் என்பதுடன், தகுந்த காரணத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள்)
இந்த 10 வது வகையினரை ஹதீஸ்கலை அறிஞர்கள் متروك என்றோ, متروك الحديث என்றோ, واهي الحديث என்றோ, ساقط என்றோ விமர்சித்திருப்பார்கள்.
11 . அறிஞர்களால் பொய்யர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள்.
12 . அறிஞர்களால் பொய்யர்கள், இட்டுக்கட்டக்கூடியவர்கள் என்று விமர்சிக்கப்பட்டவர்கள்.
10 முதல் 12 வரை உள்ளவர்கள் مرتبة الترك – இவர்கள் அறிவிக்கும் செய்திகள் தனி ஆதாரமாகவும், துணை ஆதாரமாகவும் கூறப்படாது. இவர்கள் விடப்பட்டவர்கள் ஆவர்.
(நூல்கள்: தக்ரீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார் தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-1/52, ஃபத்ஹுல் முஃகீஸ், அல்முயஸ்ஸிர் ஃபீ இல்மித் தக்ரீஜ்-49, 50, ஜர்ஹுர் ருவாதி வ தஃதீலிஹிம்-219-227)
இதனுடன் தொடர்புடைய தகவல்கள்:
1 . பார்க்க: அறிவிப்பாளர்களின் தர விளக்க வார்த்தைகள் .
2 . பார்க்க: ஹதீஸை ஆய்வு செய்யும் முறை .
- இப்னு ஹஜர்.
فأولها: الصحابةُ، فأصرِّح بذلك لشرفهم.
الثانية: منْ أكّدَ مدحه، إما: بأفْعل: كأوثق الناس، أو بتكرير الصفة لفظًا: كثقة ثقة، أو معنى: كثقة حافظ.
الثالثة: من أُفرِدَ بصفة: كثقة، أو متقن، أو ثَبْت، أو عَدْل.
الرابعة: من قَصُرَ عن درجة الثالثة قليلًا، وإليه الإشارة: بصَدُوق، أو لا بأس به، أو ليس به بأس.
الخامسة: من قَصُرَ عن الرابعة قليلا، وإليه الإشارة: بصَدُوق سيء الحفظ، أو صدوق يَهِم، أو له أوهام، أو يُخطِئ، أو تَغيَّر بأخَرةٍ. ويلتحقُ بذلك من رُمِي بنوع من البدعة، كالتشيع، والقَدَر، والنصب، والإرجاء، والتَّجَهُّم، مع بيان الداعية من غيره.
السادسة: مَن ليس له من الحديث إلا القليل، ولم يثْبُت فيه ما يُترك حديثه من أجله، وإليه الإشارة بلفظ: مقبول، حيث يتابع، وإلا فَليِّنُ الحديث.
السابعة: مَن رَوَى عنه أكثرُ من واحد ولم يُوثّقْ، وإليه الإشارة بلفظ: مستور، أو مجهول الحال.
الثامنة: مَن لم يوجد فيه توثيق لمعتبر، ووُجد فيه إطلاق الضعف، ولو لم يُفسرْ، وإليه الإشارة بلفظ: ضعيف.
التاسعة: مَن لم يَرْو عنه غيرُ واحد، ولم يُوثق، وإليه الإشارة بلفظ: مجهول.
العاشرة: من لم يوَثق البتة، وضُعِّف مع ذلك بقادحٍ، وإليه الإشارةُ: بمتروك، أو متروك الحديث، أو واهي الحديث، أو ساقط.
الحادية عشرةَ: مَن اتُّهم بالكذب.
الثانية عشرةَ: من أُطلِق عليه اسمُ الكذب، والوضع
- ஸகாவீ இமாம்.
وأخيرا فقد جعل الإمام السخاوي مراتب ألفاظ التعديل ستا ومراتب التجريح وهي الآتية:
الأولى: ما أتى بصيغة أفعل التفصيل (أوثق الناس) (أثيت الناس) (أصدق من رأيت من البشر)، ويلتحق بها (إليه المنتهى في التثبت) و (لا أعرف له نظيرا في الدنيا).
الثانية: لا يسأل عن مثله.
الثالثة: (ثقة ثبت) (ثبت حجة) (ثقة ثقة).
الرابعة: (ثقة) (ثبت) (كأنه مصحف) (متقن) (حجة)، وكذا إذا قيل للعدل (حافظ) (ضابط).
الخامسة: (ليس به بأس) (لا بأس به) (صدوق) (مأمون) (خيار).
السادسة: (محله الصدق) (رووا عنه) (روى الناس عنه) (يروى عنه) (إلى الصدق ما هو) (شيخ وسط) (وسط) (شيخ) (مقارب الحديث) (صالح الحديث) (يعتبر به) (يكتب حديثه) (جيد الحديث) (حسن الحديث) (ما أقرب حديثه) (صويلح) (صدوق إن شاء الله) (أرجو أنه ليس به بأس)
وأما مراتب التجريح التي ذكرها فهي:
الأولى: (فيه مقال) (فيه أدنى مقال) (ضعيف) (فيه ضعف) (في حديثه ضعف) (تعرف وتنكر) (ليس بذاك) (ليس بذاك القوي) (ليس بالمتين) (ليس بالقوي) (ليس بحجة) (ليس بعمدة) (ليس بمأمون) (ليس من ابل القباب) (ليس من جمال المحامل) (ليس من جمالات المحامل) (ليس بالمرضي) (ليس يحمدونه) (ليس بالحافظ) (غيره أوثق فيه) (في حديثه شيء) (فلان مجهول) (فيه جهالة) (لا أدري من هو) (للضعف ما هو) (فيه خلف) (طعنوا فيه) (مطعون فيه) (نزكوه) (سيئ الحفظ) (لين الحديث) (فيه لين) (تكلموا فيه) (سكتوا عنه) (فيه نظر).
الثانية: ضعيف، منكر الحديث، حديثه منكر، له ما ينكر، له مناكير، مضطرب الحديث، واه، ضعفوه، لا يحتج به.
المرتبة الثالثة: رد حديثه، ردوا حديثه، مردود الحديث، ضعيف جدا، واه بمرة، تالف طرحوا حديثه، ارم به، مطرح، مطرح الحديث، لا يكتب حديثه، لا تحل كتبة حديثه، لا تحل الرواية عنه، ليس بشيء، لا شيء، لا يساوي فلسا، لا يساوي شيئا.
المرتبة الرابعة: يسرق الحديث، متهم بالكذب متهم بالوضع، ساقط، هالك، ذاهب، ذاهب الحديث، متروك، متروك الحديث، تركوه، مجمع على تركه، هو على يدي عدل، مود، لا يعتبر به، لا يعتبر بحديثه، ليس بثقة، ليس بالثقة، غير ثقة ولا مأمون، سكتوا عنه فيه نظر-عند البخاري-.
المرتبة الخامسة: كذاب، يضع الحديث، يكذب، وضاع، دجال، وضع حديثا.
المرتبة السادسة: أكذب الناس، إليه المنتهى في الوضع، ركن الكذب.
ثم علق السخاوي بعد ذكره لهذه الألفاظ فقال: (ثم إن الحكم في أهل هذه المراتب الاحتجاج بالأربع الأولى منها، وأما التي بعدها فإنه لا يحتج بأحد من أهلها لكون ألفاظها لا تشعر بشريطة الضبط بل يكتب حديثهم ويعتبر…
وأما السادسة فالحكم في أهلها دون التي قبلها، وفي بعضهم من يكتب حديثه للاعتبار دون اختبار ضبطهم لوضوح أمرهم فيه.
هذا بالنسبة للتعديل أما مراتب الجرح فقد قال في الحكم في أهلها ما يأتي:
(المرتبتان الأولى والثانية تخرج أحاديث أصحابهما للاعتبار حيث تصلح للمتابعات والشواهد… وأما المراتب الأربع الأخيرة فلا تصلح أحاديث أصحابها للاعتبار مطلقا)
சமீப விமர்சனங்கள்